கேரளா வெள்ளம்: தண்ணீர் வடிந்துள்ள நிலையில் பாம்புகள் பற்றி எச்சரிக்கை

  • 25 ஆகஸ்ட் 2018

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு பின்னர், தற்போது தண்ணீர் வடிந்துள்ள நிலையில், தற்காலிக முகாம்களில் இருந்து வீடுகளுக்கு திரும்புகின்ற பாதிக்கப்பட்டோருக்கு வீடுகளில் புகுந்திருக்கும் பாம்புகள் பற்றி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளிலிருந்த அலமாறிகளுக்குள், தரைவிரிப்புகளுக்கு கீழ் அல்லது சலவை எந்திரங்களுக்குள் பாம்புகள் இருக்கலாம் என்ற பீதிக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாம்பு பிடிக்கும் குழுக்கள் பல பணியில் அமர்த்தப்பட்டுள்ளன.

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மருத்துவமனைகளில் விஷமுறிவு மருந்துகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.

கேரளாவில் ஏற்பட்ட நூறு ஆண்டுகள் கண்டிராத வெள்ளப்பெருக்கால் ஒரு லட்சத்துக்கு மேலானோர் இடம்பெயர்ந்து ஆயிரக்கணக்கான நிவாரண முகாம்களில் தங்கியிருக்க வேண்டியதாயிற்று.

இந்நேரத்தில் பாம்புகள், தேள்கள் மற்றும் பிற பூச்சிகள் வீடுகளுக்குள் புகுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

10 அடி நீளமுடைய மலைப்பாம்பு தோட்டத்தில் நுழையாமல் இருக்க பெண்ணொருவர் துடைப்பம் கொண்டு தடுக்க முயலும் காணொளி சமூக வலைதங்களில் பகிரப்பட்டுள்ளது.

தீவிர வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட வட மற்றும் மத்திய கேரளாவிலுள்ள பல மருத்துவமனைகளில் பாம்பு கடிக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எர்ணாகுளம் மாவட்டத்தில் மட்டும் தான் 5 நல்லபாம்புகளை பிடித்துள்ளதாக பாம்பு பிடிக்கும் உள்ளூரை சேர்ந்த வாவா சுரேஸ் ஹிந்துஸ்தான் டைம்ஸிடம் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பாம்புகள் துணிகளில் மறைந்திருக்கலாம் என்பதால், தடியை பயன்படுத்தி பொருட்களை இடம்மாற்றி வைக்க மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

"ஒரு பாம்பு வீட்டின் இரண்டாவது மாடியிலுள்ள துணி வைக்கும் அலமாறியில் இருந்தது. இன்னொன்று வீட்டிலிருந்த அலமாறி ஒன்றில் உள்ளே இருந்தது" என்று அவர் கூறினார்.

தங்களின் வீடுகளுக்கு செல்வோர் தடியை பயன்படுத்தி உடமைகளை இடம்மாற்றி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு்ள்ளதாக 'பிரஸ் ட்ரஸ்ட் ஆப் இந்தியா' தகவல் வெளியிட்டுள்ளது.

'' என் மகளையும் சொந்த வீட்டையும் வெள்ளம் காவு வாங்கியது'' - கண்ணீர் சிந்தும் கேரள பெண்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சொந்த வீட்டையும், சொந்தங்களையும் காவு வாங்கிய கேரள வெள்ளம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :