இந்தியாவில் பிறந்த முதல் பென்குயின் (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்தியாவில் பிறந்த முதல் பென்குயின் (காணொளி)

  • 26 ஆகஸ்ட் 2018

மும்பையின் பைகுல்லாவிலுள்ள ஜிஜாமாடா உதயன் வனவிலங்கு பூங்காவிலுள்ள ஹம்போல்ட் பென்குயின் குடும்பத்தில் பென்குயின் ஒன்று பிறந்துள்ளது.

பெண் பென்குயின் ஜூலை 22ம் தேதி முட்டையிட்டது. 40 நாட்களுக்கு பின்னர் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. இதன் பாலினம் டிஎன்ஏ பரிசோதனைக்கு பிறகு, பின்னர் தெரிவிக்கப்படும்.

இந்தியாவில் பிறந்த முதல் பென்குயின் இதுதான். இதன் தாய் ஃபிளிப்பர் மற்றும் தந்தை மோல்ட் பென்குயின்கள் 2016ம் ஆண்டு இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன.

மும்பை வந்தவுடன் ஒரு பென்குயின் இறந்துவிட்டதால், இந்த செயல் சர்ச்சையை தோற்றுவித்தது.புதிய பென்குயின் பிறந்துள்ளதை வனவிலங்கு பூங்கா கொண்டாடி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்