திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஜென் Z தலைமுறை எதிர்பார்ப்பது என்ன?

திமுக தலைவர் ஆனார் மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

சென்னையில் இன்று நடைபெற்ற திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்ட மு.க.ஸ்டாலினிடம் தங்களுக்கு சில எதிர்பார்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர் ஜென் Z தலைமுறையினர்.

மு.க.ஸ்டாலின் திமுக வின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகம் இன்று நடைபெற்ற திமுக பொது குழு கூட்டத்தில் அறிவித்தார்.

இதன்மூலம் 50 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவின் இரண்டாவது தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்.

திமுக தலைவர் ஆனார் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் ஆனார் மு.க.ஸ்டாலின்

கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி மறைந்ததையொட்டி  காலியாக இருந்த கட்சி தலைவர் பதவிக்கு ஞாயிற்றுக்கிழமையன்று மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் மு.க.ஸ்டாலின்.

திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும் திமுக தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதை கொண்டாடி வருகின்றனர்.

Presentational grey line

களத்தில் இருக்கும் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன் அண்ணா அறிவாலயத்தில் இப்போது இருக்கும் சூழ்நிலையை விவரிக்கிறார்

இன்று காலை சுமார் 9 மணிக்கு அண்ணா அறிவாலயம் வந்த ஸ்டாலின் மேடைக்கு கீழே துரைமுருகன் மற்றும் பிற திமுக நிர்வாகிகளுடன் அமர்ந்தார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் வாசித்த பிறகு பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. பின்பு திமுக தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார்.

திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின் - அதிகாரபூர்வ அறிவிப்பு

அன்பழகனின் அறிவிப்புக்கு பிறகு மேடைக்கு வந்தார் ஸ்டாலின். ஸ்டாலின் தலைவர் அறிவிப்பு நிகழ்ந்தவுடன் வெளியே கூடியிருந்த திமுக தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், வாழ்த்து கோஷங்களை எழுப்பியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பின்னர் திமுகவின் பொருளாளராக துரைமுருகன் அறிவிக்கப்பட்டார்.

கூட்டத்தில் பேசிய திருச்சி சிவா கருணாநிதிக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என தெரிவித்தார்

Presentational grey line

தலைவர்கள் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின் - அதிகாரபூர்வ அறிவிப்பு
திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின் - அதிகாரபூர்வ அறிவிப்பு
திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின்

நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, "கட்சி தொண்டர்களின் விருப்பப்படி சென்னையில் 5-ந் தேதி பேரணி நடத்த உள்ளோம். கருணாநிதி இல்லை என்பதால் தான் தி.மு.க.வை காப்பாற்ற களம் இறங்கி உள்ளோம். தி.மு.க.வில் என்னை சேர்க்கவில்லை என்றால் அதற்கான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியது இருக்கும்" என்று கூறி இருந்தார்.

Presentational grey line

திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள சூழ்நிலையில் அவரிடம் இந்த தலைமுறையினர் எதிர்பார்ப்பது என்ன ஜென் Z தலைமுறையினரிடம் பிபிசி தமிழ் நியாஸ் அகமது பேசினார்.

தத்துவார்த்த முன்னெடுப்பு

இந்த தலைமுறைக்கான தேவைகள் வேறுவிதமானது. எங்களின் அபிலாஷைகள் வேறுவிதமானது. அதனை பூர்த்தி செய்வது போல ஸ்டாலின் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு என்கிறார் ஜெய நாதன் கருணாநிதி.

திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஜென் Z தலைமுறை எதிர்பார்ப்பது என்ன?

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு,

ஜெய நாதன் கருணாநிதி

தொடர்ந்து திராவிட அரசியலை ஆய்வு பார்வையில் நோக்கி வரும் இவர், "இந்திய ஒன்றியம் நமக்கான உரிமைகள் பறித்துவரும் இப்படியான சூழ்நிலையில், நமது வளங்களை காக்கும் வண்ணம், திராவிட கருத்தியலுள் உள்ளார்ந்த அனைவருக்குமான சமூக நீதியினை மையமாகக் கொண்டு செயல்பட வேண்டும்” என்கிறார்.

இங்கு திமுகவுக்கான எதிர்ப்பு என்பது வெறும் கட்சி அரசியல் எதிர்ப்பு அல்ல. அது தத்துவார்த்த எதிர்ப்பு. அந்த தத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே எங்கள் எதிர்பார்ப்பு என்கிறார் ஜெய நாதன் கருணாநிதி.

செயல்பாடு வெற்றிடம்

தத்துவார்த்த வெற்றிடம் அல்ல, இங்கு செயல்பாடு வெற்றிடமே நிலவுவதாக கூறுகிறார் ஆராய்ச்சியாளர் மாணவர் விஜய் அசோகன்.

திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஜென் Z தலைமுறை எதிர்பார்ப்பது என்ன?

பட மூலாதாரம், facebook

படக்குறிப்பு,

விஜய் அசோகன்

ஸ்வீடனில் அறிவியல் ஆராய்ச்சி படிப்பினை மேற்கொண்டு வரும் இவர், அரசியல் கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார்.

"தான் தவறான ஆளாக தெரிந்தவிட கூடாது என்று ஸ்டாலின் மிக நிதானமாக செயல்படுகிறார். இது நல்ல விஷயம்தான் என்றாலும், வீரியமாக செயல்பட வேண்டிய இடத்தில் கூட நிதானமாக செயல்படுவதாகவே தோன்றுகிறது. செயல் தலைவரிலிருந்து தலைவராக உயர்வு பெற்றிருக்கிரும் அவரிடமிருந்து நாங்கள் எதிர்பார்ப்பது தேவையான நேரத்தில் வீரியமான செயல்தான்" என்கிறார் விஜய்.

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :