திமுக தலைவரானார் ஸ்டாலின்: உற்சாகத்தில் கட்சித் தொண்டர்கள் (புகைப்பட தொகுப்பு)

சென்னையில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து அறிவிக்கப்பட்டவுடன் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி மறைந்ததையொட்டி காலியாக இருந்த கட்சி தலைவர் பதவிக்கு ஞாயிற்றுக்கிழமையன்று மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

கடந்த 50 ஆண்டுகளாக திமுகவின் தலைவராக இருந்த கருணாநிதி மறைந்த சூழலில், அக்கட்சியின் இரண்டாவது தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார்.

திமுகவின் தலைவரான ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டத்தை அக்கட்சி தொடர்கள் கொண்டாடியதை விளக்கும் புகைப்பட தொகுப்பு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :