மோதி குறித்து நக்கல் ட்வீட் செய்யும் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கைது

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் இன்று புதன்கிழமை அகமதாபாத்தில் உள்ள அவர் வீட்டில் சி.ஐ.டி க்ரைம் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சி.ஐ.டி க்ரைம் பிரிவில் சிறப்புப் பிரிவு அண்மையில் அமைக்கப்பட்டது அதனை தொர்ந்து இந்த கைது நடந்துள்ளது.

சஞ்சீவ் கைது செய்யப்பட்டதை சி.ஐ.டி க்ரைம் பிரிவு இயக்குநர் உறுதி செய்தார்.

காந்தி நகரில் உள்ள சி.ஐ.டி அலுவலகத்தில் அவர் விசாரிக்கப்பட்டு வருவதகாவும் தெரிவித்தார்

பிபிசி குஜராத்தி சேவையிடம் பேசிய சஞ்சீவ் பட்டின் மனைவி சுவேதா பட், இன்று காலை அவரது கணவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்,

இன்று மாலை இந்த தொடர்பாக சி.ஐ.டி, பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தும் என்று தெரிகிறது.

யார் இந்த சஞ்சீவ் பட்?

சஞ்சீவ் பட் குஜராத்தை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி. குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த மதகலவரத்தில் மோதியின் பங்கு குறித்து கேள்வி எழுப்பியவர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

குஜராத் அரசாங்காத்தால் 2002 ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

சமூக ஊடகத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் சஞ்சீவ் பட் தொடர்ந்து நக்கலான பதிவுகள் மூலம் மோதி அரசாங்கத்தை விமர்சித்து வருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :