உங்கள் ஆசிரியர் மீது நீங்களும் காதல் வயப்பட்டதுண்டா?
- திவ்யா ஆர்யா
- பிபிசி

பட மூலாதாரம், Getty Images
பளபளப்பான சிவப்பு நிற ஷிஃபான் சேலை. கையில்லா ரவிக்கை, கழுத்துக்கு கீழே ஆழமாக இறங்கி, முதுகையும் முழுதாய் காட்டும் கையில்லா ரவிக்கை. கூந்தல் காற்றில் பறக்க, சேலை முந்தானை தோளில் இருந்து விலகும் இது சினிமாக்களில் வரும் ஆசிரியர்கள்.
நான் கண்ணை மூடி என் பள்ளி மற்றும் கல்லூரி கால ஆசிரியைகளின் உருவங்களை கண் முன்னே கொண்டு வந்து நினைத்துப் பார்க்கிறேன். ஆனால் யாருமே முந்தானை முடிச்சு படத்தில் வரும் பட்டு டீச்சர் போன்றோ, நாட்டாமை படத்தில் வரும் ராணி டீச்சர் போன்றோ, இந்தி படமான மேய்ன் ஹூன் நா என்ற படத்தில் வரும் சாந்தினி டீச்சர் கதாபாத்திரத்தை போன்றோ இருந்ததில்லை.
எவ்வளவு யோசித்தாலும், ஆசிரியை என்றால் காட்டன் சேலை அணிந்து, முந்தானையை பிளவுசுடன் ஊக்கு குத்தி இணைத்து, தலைமுடியை நேர்த்தியாக வாரியிருக்கும் ஆசிரியைகள்தான் நினைவிற்கு வருகின்றனர்.
ஒருவேளை நான் ஆணாக இருந்திருந்தால் என் நினைவுகள் வேறுமாதிரி போயிருக்கலாம். போகாமலும் இருந்திருக்கலாம்.
பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் பெரும்பாலும் ஆண் ஆசிரியர்களாக இருந்தார்கள். ஆனால் சினிமா ஆண் ஆசிரியர்களை அவர்களை கவர்ச்சியானவர்களாக காட்டியதில்லை.
பட மூலாதாரம், Getty Images
இந்தி படமான "தாரே ஜமீன் பர்" படத்தில் வரும் நிகும்ப் சார், சாதுர்யமாக இருந்தாரே தவிர கவர்ச்சியாக இருந்ததில்லை.
சட்டையை கழற்றிவிட்டு மற்ற ஆசிரியைகள் அல்லது மாணவிகளை கவரும் விதமாக இருந்ததில்லை.
அவர் எவ்வளவு அற்புதமான ஆசிரியராக இருந்தார். எனக்கு அவர் மீது எல்லா விதமான உணர்வுகளும் இருந்தன.
அவர் தோளில் சாய்ந்து கொண்டால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்றே எண்ணினேன். அவர் என்னை தழுவினால் என் மனதில் உள்ள ஆழமான வலி தீர்ந்துவிடும் என்று எண்ணினேன். அவர் என் நண்பராக இருந்தால் என் ஆழ்மனதில் உள்ள உணர்வுகளை பகிர்ந்து கொள்ளமுடியும் என்று நம்பினேன்.
என்னுடைய முட்டாள் தனத்தையும் முதிர்ச்சியின்மை குறித்தும் நான் வெட்கப்பட மாட்டேன். ஏனெனில் அவர் என்னை புரிந்து கொள்வார்.
ஆசிரியர் மீது அபிமானம் கொள்வது இயற்கை. பள்ளி செல்லும் குழந்தைகள் வளர வளர, அவர்கள் கற்பனைகள் மேலும் வண்ணமயமாகக்கூடும்.
ஆனால் பாலிவுட் படங்களில் வருவது போல் பெண்களின் உடம்பில் கண்கள் நிலைகுத்திக்கொள்வதில்லை. நிஜவாழ்வில் இந்த கற்பனைகள் ஆடைகள், வெளியில் தெரியும் அங்கங்கள் அல்லது மேக்அப் போன்றவற்றால் தூண்டப்படுவதில்லை.
ஒரு பெண் பருவம் எய்துவது என்பது ஆவலைத் தூண்டுவதாகும். சில நேரங்களில் பெற்றோருடன் போதிய தொடர்பின்மை காரணமாக மூத்த நண்பர் அல்லது நம்பிக்கைக்குரிய நண்பரின் தேவைக்கு அடிபோடப்படுகிறது. மிடுக்கான ஆசிரியர்கள் சிலர், கதாநாயகர்களாக, அவர்களை பின்பற்றும் விதமாகவும், அவரால் தூண்டப்படுபவராகவும் இருப்பார்கள்.
படிப்பு தவிர பல்வேறு அம்சங்களும், ஆசிரியர் மீது மாணவர்களுக்கு உணர்ச்சிகளை கட்டுப்படுத்தமுடியாமல் போகும் நிலை ஏற்பட காரணமாக இருப்பதுண்டு.
கடந்த ஆண்டு அமெரிக்காவின் நேவடா பல்கலைக்கழகத்தில் கவர்ச்சியான ஆசிரியர்கள் மாணவர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கண்டறியும் ஆய்வு 131 மாணவர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் இறுதியில் ஆசிரியர்கள் கவர்ச்சியாக இருந்தால் அவர்கள் சொல்லிக்கொடுத்தால் மாணவர்கள் ஒழுங்காக கவனித்ததும் தெரியவந்தது. மேலும் இந்த கவர்ச்சி பாலின கவர்ச்சியாக இல்லை என்றும் தெரியவந்தது.
பாடங்களை சிறப்பாக கிரகித்துக் கொள்ள கூடுதல் கவனம் மாணவர்களுக்குத் தேவை என்றும், மாணவர்கள் கவர்ச்சியான ஆசிரியர்கள் மூலம் கவரப்பட்டார்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
பட மூலாதாரம், Getty Images
ஆசிரியர்கள் மீது கவரப்படுவது இயற்கையானது. எதனால் கவரப்படுகிறார்கள் என்பதே இதில் கவனிக்கப்பட வேண்டியது.
பெரும்பாலும் இந்த கவர்ச்சி நண்பர்களுடன் கேலிப்பேச்சு மூலம் தொடர்ந்து அமைதியாக நீடித்து இருக்கும். ஆனால் அதில் இருந்து முன்னே செல்லும் போது இது எந்த விதமாகவும் உருமாறி கற்பனையான உலகையோ கனவையோ சென்றடையக்கூடும்.
அந்த எல்லையை மீறுவது விரும்பத்தகாத ஒன்று. பல நாடுகளில் அது சட்ட விரோதமும் கூட.
எந்த ஒரு ஆசிரியரோ, அல்லது வேறு நபரோ 18 வயதுக்கும் குறைவான நபரை தன் கட்டுப்பாட்டில் இருக்கும் போது அவருடன் பாலியல் உறவு கொண்டால் அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக் கூடும்.
18 வயதுக்கு குறைவான நபர் பாலியல் உறவுக்கு தனது ஒப்புதலை வழங்க முடியாது என்று கருதப்படுகிறது.
இந்தியாவில் போஸ்கோ சட்டப்படி, தன் கட்டுப்பாட்டில் உள்ள மைனர் குழந்தைகளுடன் பாலியல் உறவு கொள்வது சட்ட விரோதம் ஆகும். அவர்கள் ஆறு ஆண்டுகள் வரை தண்டிக்கப்படலாம்.
அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
கவரப்படுவது என்பது பள்ளியின் நான்கு சுவர்களுக்குள் மட்டுமல்ல. உண்மையில் கல்லூரியில் அதன் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
கல்லூரியில் மாணவர்கள் பெரியவன் அந்தஸ்தை பெறுகிறார்கள். இந்த காலகட்டத்தில் சாதாரண கவர்ச்சி மிகத் தீவிரமான பரஸ்பரம் ஒப்புதலுடன் கூடிய பாலியல் உறவு கொள்ளும் வகையில் உறவு தீவிரமடையும்.
எல்லா வகை உறவுகளிலும் வெளிப்படை நிலை அதிகரித்து வந்தாலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையேயான அந்த காதல் சார்ந்த தொடர்பு இன்னமும் உலகில் கலக்கத்தையே கொண்டுவருகிறது.
2015 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே எந்த ஒரு காதல் சார்ந்த அல்லது பாலியல் உறவுக்கும் தடை விதிக்கப்பட்டது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகம் கூறுகையில் தங்கள் விதிகளின் படி, "ஒரு ஆசிரியர் பாடம் எடுக்கும் போது, மாணவர்களின் தகுதியை திறனாய்வு செய்யும் போதும், அவர்களுக்கு பணிகளை வழங்கும் போதும், அவர்கள் மாணவர்களுடன் எவ்வித காதல் சார்ந்த உறவுகளையும் கொண்டிருக்கக் கூடாது"
இத்தகைய முடிவுகளை அமெரிக்காவின் பிற பல்கலைக்கழகங்களும் எடுத்துள்ளன.
"அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம்" இது போன்ற தடைகளை ஆதரிப்பதில்லை. ஆனால் இது போன்ற உறவுகள் சுரண்டல்களுக்கு வழிவகுக்கக்கூடும் என்கிறது.
இந்திய பல்கலைக்கழகங்களில் இது போன்ற தடைகளோ அல்லது விதிகளோ கிடையாது. ஆனால் அதற்காக இத்தகைய உறவுகளை ஏற்றுக்கொள்வதாகாது.
வளரும் பதின்ம வயதினருக்கு கற்பனைகள் தங்கள் ஆசிரியர்களுடன் கொள்ளும் மோகத்தை, அவர்கள் உணருவது மிகவும் சிக்கலானது. இதனை லேசாக எடுத்துக்கொள்ளவும் முடியாது.
நமது ஆசிரியர்கள் சினிமாவில் வரும் ஆசிரியர்கள் போல் அல்ல. மாணவர்கள் அவர்களை நினைத்து கடக்கும் உணர்வு ரீதியான கொந்தளிப்பு நமது திரைப்படங்களில் காட்டப்படும் தொப்புள் காட்சிகளால் ஏற்படும் மனக்கிலேசங்களை விட மிகவும் ஆழமானது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்