LGBT - நான்கு வகையிலான பாலின உறவு குறித்து தெரிந்துகொள்ளுங்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

LGBT - நான்கு வகையிலான பாலின உறவு குறித்து தெரிந்துகொள்ளுங்கள்

  • 6 செப்டம்பர் 2018

பாலினம் என்பதன் பொருள் முந்தைய காலங்களில் மிகவும் எளிதாக இருந்தது. இரு பாலினரும் எதிர்பாலினரிடம் ஈர்க்கப்படுவது இயல்பானதாக இருந்தது. ஆனால் தற்போது பாலினத்தை சிறிய வட்டத்துக்குள் அடைக்க முடிவதில்லை. M,F என்பதை தாண்டி L, G, B, T, I, Q என பாலினம் வகைப்படுத்தப்படுகிறது.

L என்றால் லெஸ்பியன், அதாவது, ஒரு பெண் மற்றொரு பெண்ணுடன் பாலியல்ரீதியாக உறவு வைத்துக்கொள்வதை லெஸ்பியன் என்கிறோம். G என்றால் Gay. இரண்டு ஆண்கள் பாலியல்ரீதியாக உறவு வைத்துக்கொள்வதை Gay என்கிறோம். மற்றவற்றை தெரிந்துகொள்ள காணொளியை முழுமையாக காணுங்கள்.

இரு சட்டபூர்வ வயதை அடைந்த ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் பாலுறவு கொள்வதை குற்றமாக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 ஐ ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

"இயற்கையின் விதிகளுக்கு மாறாக ஓர் ஆண், பெண் அல்லது விலங்குடன் பாலுறவு கொள்பவர்கள் ஆயுள் சிறை தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை ஆகிய தண்டனைக்கு உள்ளாவார்கள். அவர்கள் அபராதம் செலுத்தவும் பொறுப்பானவர் ஆவார்கள்," என்று பிரிவு 377 கூறுகிறது.

விக்டோரியன் காலத்தின் இந்தச் சட்டப்பிரிவு 150 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் உள்ளது. இந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் ''நாட்டில் அனைத்து குடிமக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை அரசியல் சட்டம் உறுதி செய்கிறது. கால மாற்றத்துக்கு ஏற்ப சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் தற்போதும் ஏற்புடையதாக இருக்காது. எனவே அரசியல் சட்டத்தின் 377வது பிரிவு ரத்து செய்யப்பட வேண்டும். தன்பாலின உறவு என்பது சட்டவிரோதமானது அல்ல'' என கூறினர்.

மேலும், "ஒருவரின் சுய கருத்தை வெளியிடுவது தடை செய்யப்படுமானால் அது மரணத்திற்கு போன்றது. சமத்துவம் என்ற கம்பீரமான கட்டடத்தின் மீதே மற்ற எல்லா கம்பீரமான கட்டடமும் சாய்ந்திருக்கிறது. நமக்குள் உள்ள வேற்றுமையின் பலத்தை நாம் மதிக்க வேண்டும். பொறுமையும், ஒருவரின் உரிமைக்கு மரியாதை அளிக்கவும் வேண்டும். ஒருவர் எதுவாக இல்லையோ, அதை அவர்கள்மீது திணிப்பதைவிட ஒவ்வொருவரிடம் உள்ள வேறுபாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிற மனிதர்களைப்போலவே, இயல்பான மனிதர்களாகவும் அடிப்படை உரிமைகளுடனும் இருக்கும் உரிமை எல்.ஜி.பி.டி சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் உள்ளது.மிருகங்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வது என்பது குற்றமே." என்று தலைமை நீதிபதி தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்

தொடர்புடைய செய்திகள்:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்