கலைக்கப்பட்டது தெலங்கானா சட்டப்பேரவை; ஆளுநர் ஒப்புதல்

தெலங்கானா அரசை கலைக்கும் தீர்மானம் இன்று (வியாழக்கிழமை) சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து அம்மாநில ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
தேர்தல் நடக்கும் வரை காபந்து அரசின் பொறுப்பாளராக கே. சந்திர சேகர ராவே நீடிப்பார்.
தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் தலைமையில் இன்று அமைச்சரவை கூடியது. இந்த கூட்டத்தில் சட்டசபையை கலைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தெலங்கானா சட்டசபையின் பதவி காலம் அடுத்த ஆண்டு வரை உள்ள நிலையில் இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் இயற்றப்பட்ட தீர்மானத்தை தெலங்கானா ஆளுநர் நரசிம்மனிடம் நேரில் சென்று அளித்தார் சந்திரசேகர் ராவ்.
பிற செய்திகள்
- சட்டப்பிரிவு 377: காலனி ஆதிக்கம் முதல் இன்று வரை- நடந்தது என்ன?
- தீபக் மிஷ்ராவின் பணிக்காலத்தின் கடைசி 17 நாட்களும், 8 முக்கிய வழக்குகளும்
- உங்கள் ஆசிரியர் மீது நீங்களும் காதல் வயப்பட்டதுண்டா?
- மு.க. அழகிரியின் பேரணி: ஒரு லட்சம் இல்லை பத்தாயிரம் மட்டுமே
- ‘எஸ்.வி.சேகர் பேசிய ஒலிபெருக்கி கருவி வெடித்து சிதறியது’
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்