ராஜீவ் கொலை வழக்கு: 'அரசியல் செய்தால் பாஜகவிற்குதான் பின்னடைவு'

ராஜீவ் கொலை வழக்கு

பட மூலாதாரம், STRDEL

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழக அரசு விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்யும் பட்சத்தில் ஆளுநர் எத்தகைய முடிவு எடுக்க வேண்டும்? என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

"விடுதலை செய்து விடலாம். தண்டனை என்பது திருந்தி வாழ்வதற்கே. தண்டனையை அனுபவித்து விட்டார்கள். முதுமையிலாவது அவர்கள் குடும்பத்துடன் சேர்வது நல்லது. மன்னிப்பது மனிதத் தன்மை" என்று பதிவிட்டுள்ளார் சரோஜா பாலசுப்பிரமணியன்.

இதுகுறித்து ரத்னசிங்கம் எனும் நேயர் கூறுகையில், "காந்திய தேசம் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், TWITTER

"இதை வைத்து அரசியல் செய்தால் பாஜகவிற்குதான் பின்னடைவு ஏற்படும். ஆனால் விடுதலை செய்யாது. அதுதான் பாஜக" என்கிறார் ரவி சந்திரன்.

பிபிசியின் வாதம் விவாதம் பகுதியில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பெரும்பாலான நேயர்கள், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளனர்.

பட மூலாதாரம், TWITTER

"ராஜிவ் காந்தியை கொலை செய்தவர்ககளை விடுதலை செய்யக்கூடாது" என்கிறார் ட்விட்டர் நேயர் விஜயெந்திரமணி.

பாதி வாழ்க்கை சிறையிலேயே போய்விட்டது என்றும் மீதி வாழ்க்கையாவது அவர்கள் நிம்மதியாக வாழ, அவர்களை மன்னித்து விட வேண்டும் என்கிறார் இன்ஸ்டாகிராம் நேயர் ஜெய்சன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :