நாளிதழ்களில் இன்று: 'காதலை மறுக்கும் பெண்களை கடத்தி வருவேன்' என பேசிய பாஜக எம்.எல்.ஏ

இன்று வெள்ளிக்கிழமை முக்கிய நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகின்றோம்.

தினத்தந்தி - சர்ச்சையில் சிக்கிய பாஜக சட்டமன்ற உறுப்பினர்

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு,

பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் ராம் கடம்

உங்கள் காதலை ஏற்க மறுக்கும் பெண்களை உங்களுக்காக கடத்தி வருவேன், அதற்காக என் செல்பேசி எண்ணைக் குறித்துக்கொள்ளுங்கள் என்று பேசிய மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் ராம் கதமிடம் தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

அவர் சில நாட்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்கூடாது என்று கட்சி அவரை அறிவுறுத்தியுள்ளது.

தி இந்து - தடகள வீராங்கனை சாந்தி புகார்

பட மூலாதாரம், Getty Images

தற்போது தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக பணியாற்றிவரும், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ள தடகள வீராங்கனை சாந்தி சவுந்தரராஜன் தன்னுடன் பணியாற்றும் ஆண் ஒருவர் மீது புகார் அளித்துள்ளார்.

தான் பெண் அல்ல என்ற பொய் செய்தியை பரப்புவதாகவும், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த தன் மீது சாதிய ரீதியில் அவதூறு செய்வதாகவும் சாந்தி தனது புகாரில் கூறியுள்ளார் என்று தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தம்

பட மூலாதாரம், BBC\SITU TIWARI

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களை எதிர்த்து சுவர்ண சேனா, பிராமண மகாசபா, சத்திரிய மகாசபா, ராஜ்புட் சமாஜ் சமிதி உள்ளிட்ட அமைப்புகள் வியாழன்று அழைப்பு விடுத்திருந்த அகில இந்திய கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தத்தால் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் பீஹார் ஆகிய மாநிலங்களில் சில இடங்களில் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சில இடங்களில் கல்வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவங்கலும் நடந்தன.

தினமணி - 5 இடைதுசாரி ஆர்வலர்கள் வீட்டுக்காவல் நீட்டிப்பு

மகாராஷ்ரா மாநிலத்தில் பீமா-கோரேகானில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட இடதுசாரி ஆர்வலர்கள் 5 பேரின் வீட்டுக்காவலை வருகின்ற 12ம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்த்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறபித்து, இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விகாரணையை 12ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :