தமிழகத்தில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம்: வேதாந்தா நிறுவனம்

இந்தியாவின் நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகின்றோம்.

இந்து தமிழ் - ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நெடுவாசலைவிட பெரிய இடங்கள் தேர்வு

நெடுவாசலில் கைவிடப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்திற்கு மீண்டும் வரவுள்ளதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளதாக ‘தி இந்து‘ வெளியிட்டுள்ளது.

தமிழகம் உள்பட தங்களுக்கு கிடைத்துள்ள 41 இடங்களில் நில ஆய்வு நடத்தாமல், செயற்கைக்கோள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இயற்கை வளங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

ஜெர்மனி, அமெரிக்க நிறுவனங்களிடம் ஒப்பந்தம் கோரி நில ஆய்வு நடத்த 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும்.

இதில் கண்டறியப்படும் இடங்களில் 30 ஆண்டுகள் எண்ணெய் மற்றும் எரிவாயு பொருட்களை எடுக்கப்போவதாக வேதாந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பு அதிகாரிகள் கூறியதாக தி இந்து தமிழ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி - ராஜீவ் கொலை கைதிகள்: அரசுக்கும், ஆளுநருக்கும் நினைவூட்டல் கடிதம்

பட மூலாதாரம், STRDEL

தங்களை விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான குற்றவாளிகள் நினைவூட்டல் கடிதம் எழுதியுள்ளதாக அவர்களுடைய வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்திருப்பதாக ‘தினமணி‘ செய்தி வெளியிட்டுள்ளது.

வேலூர் மத்திய சிறையில் முருகன், சாந்தன் மற்றும் நளினியை சந்தித்த பின் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

தினமலர் - பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு

பட மூலாதாரம், Getty Images

இன்று சனிக்கிழமை பெட்ரோல் விலை 41 காசுகள் அதிகரித்து விலையேற்றத்தில் புதிய உயர்வை தொட்டுள்ளதாக ‘தினமலர்‘ செய்தி வெளியிட்டுள்ளது.

பெட்ரோல் 41 காசுகள் உயர்ந்து ரூ. 83.54 காசுகள் என்றும், டீசல் விலை 47 காசுகள் அதிகரித்து ரூ. 76.64 காசுகள் என்றும் உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - முகத்தை இனம்காண்டு "போர்டிங் பாஸ்"

பட மூலாதாரம், JIM WATSON/AFP/Getty Images

முகத்தை இனம்காணும் தொழில்நுட்பம் மூலம் "போர்டிங் பாஸ்" வழங்கும் ஆசியாவிலேயே முதலாவது விமான நிலையம் என்ற பெருமையை பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் பெறவுள்ளதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்‘ செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு தொடங்கி பயணிகளின் முகத்தை இனம்காணும் தொழிற்நுட்பத்தை அறிமுகம் செய்வதற்கான ஒப்பந்தம் செப்டம்பர் 5ம் நாள் கையெழுத்தாகியுள்ளதாக இந்த செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.

பெட்ரோல் விலை உயர்வு ஏற்படுத்தும் பாதிப்பு - மக்கள் சொல்வது என்ன?

காணொளிக் குறிப்பு,

பெட்ரோல் விலை உயர்வால் உண்மையில் பாதிப்பை ஏற்படுத்துகிறதா? - மக்கள் சொல்வது என்ன?

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :