பா.ஜ.க அமைச்சர், முன்னாள் பத்திரிகையாளர் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார்

  • 11 அக்டோபர் 2018
எம்.ஜெ. அக்பர் படத்தின் காப்புரிமை Getty Images

தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சரும், முன்னாள் பத்திரிகை ஆசிரியருமான எம்.ஜே. அக்பர் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

#MeToo என்ற ஹாஷ்டாக்கின் கீழ் இந்த குற்றச்சாட்டு ட்விட்டரில் பதியப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் #MeToo ஓர் இயக்கமாகவே உருவெடுத்துள்ளது.

பெண்களை 'சந்திப்பு' என்ற பேரில் விடுதிகளுக்கு அழைத்தது உட்பட மோசமான நடத்தை குற்றச்சாட்டு அக்பர் மீது எழுந்துள்ளது.

ஆனால், இது குறித்து இப்போது வரை அக்பரோ அல்லது வெளியுறவுத் துறை அமைச்சகமோ எந்த பதிலும் கூறவில்லை.

ஆனால், மற்றொரு அமைச்சரான மேனகா காந்தி அரசியல்வாதிகள் உட்பட பல பேர் மீது எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டுமென கூறி உள்ளார்.

தொடரும் குற்றச்சாட்டுகள்

நகைச்சுவை நடிகர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள், நடிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் என பல பேர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளண. அதில் இப்போது அக்பரும் இணைந்துள்ளார்.

தி ஏசியன் ஏஜ் மற்றும் தி டெலிகிராஃப் ஆகிய நாளிதழ்களின் ஆசிரியராக அக்பர் இருந்திருக்கிறார். மிகவும் சக்திவாய்ந்த இதழாளராக அவர் கருதப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த குற்றச்சாட்டை அவர் மீது சுமத்தி இருப்பது பத்திரிகையாளர் ப்ரியா ரமணி.

சில மாதங்களுக்கு முன் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் மீது நியூயார்க்கில், பாலியல் வன்புணர்வு மற்றும் பல்வேறு வகையான பாலியல் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.

அது குறித்து அந்த சமயத்தில் ஓர் இதழில் ப்ரியா ரமணி கட்டுரை எழுதி இருந்தார்.

அந்த கட்டுரையை மீண்டும் ட்விட்டரில் பகிர்ந்த ரமணி, அந்த பதிவில் அக்பர் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஐந்து பெண்கள் அக்பரால் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :