திருச்சியில் இருந்து துபாய் புறப்பட்ட விமானம் சுவற்றில் மோதி சேதம்

  • 12 அக்டோபர் 2018
விமானம் சுவற்றில் மோதி சேதம் படத்தின் காப்புரிமை AIR INDIA

திருச்சியில் இருந்து துபாய் புறப்பட்ட ஏர் இந்தியாவின் பயணிகள் விமானம் ஒன்று விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதி சேதம் அடைந்தது.

130 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஏர் இந்தியா IX 611 விமானம் மும்பைக்கு திசை திருப்பப்பட்டு அங்கு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தை ஓட்டிய நல்ல அனுபவம் வாய்ந்த இரு விமானிகள் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளிக்கிழமை காலை திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானம், விமான நிலைய சுற்றுச்சுவரில் உரசியிருக்கும் என தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் விமானம் சேதம் அடைந்துள்ளது.

படத்தின் காப்புரிமை AIR INDIA

"இந்த சம்பவம் உடனடியாக விமானியிடம் தெரிவிக்கப்பட்டது. விமான செயல்பாடுகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை" என்று அவர் தெரிவித்தார்.

பின்னர் மும்பைக்கு திருப்பப்பட்ட அந்த விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

இந்த சம்பவம் விமான ஓழங்குமுறை ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டு, இது தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருவதாக ஏர் இந்தியா கூறியுள்ளது.

இந்தியாவின் மிகப்பழமையான விமான நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியா, 2007ஆம் ஆண்டிலிருந்த லாபம் ஏதும் இல்லாமல் இயங்கி கொண்டிருக்கிறது.

2017ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மையமாக்க இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆனால், கட்டுப்படுத்தக்கூடிய அளவிற்கான பங்குகளை அரசு விற்க முன்வந்தது, வாங்குபவர்களை ஆர்வம் இழக்க வைத்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: