வைரமுத்து தனது விருதுகளை திருப்பித் தரவேண்டுமா? - சமூக ஊடகம் என்ன நினைக்கிறது

  • 19 அக்டோபர் 2018
வைரமுத்து படத்தின் காப்புரிமை Facebook

கவிஞர் வைரமுத்து தமது விருதுகளை திரும்ப அளித்துவிட்டு வழக்குத் தொடர்வதே சரி என்று பாலியல் புகார் தொடர்பாக ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

புகாருக்கு உள்ளான ஒருவர் தம் திறமையால் பெற்ற அங்கீகாரங்களை திரும்ப அளிக்க வேண்டுமா? என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். அதற்கு நேயர்கள் தெரிவித்த கருத்துகள் இங்கே.

"அப்படியென்றால் வாலியை மறைந்து இருந்து கொன்ற ராமன் எப்படி அரசாள முடியும்? மனைவி சீதையை சந்தேகபட்ட ராமனை எப்படி சக்ரவர்த்தியாக எற்றுக்கொள்ளமுடியும்? காட்டில் கொள்ளையில் ஈடுபட்டு திருந்திய வால்மீகி ராமாயணம் எழுதியதும் பிழையா?" என்று கருத்து தெரிவித்துள்ளார் கிருஷ்ணன் குமார்.

"அப்போ ரபேல் விமான ஊழல்ல மோடி அரசு பதவி விலகி. களங்கத்தை போக்கி கொள்ள வேண்டியதுதானே ராஜா அவர்களே" என்கிறார் உமர் ஃபாரூக்.

"ஒரு சிற்பி சாமி சிலை செய்த பிறகு அவர் தவறு செய்தால். அந்த சிலையை உடைத்து விடுவார்களா ?" என்பது கிருஷ்ண குமாரின் கருத்து.

"விருதுகள் வழக்கோடு தொடர்பு பட்டவை அல்ல அதனால் திருப்பி அளிக்க வேண்டியது இல்லை ஆனால் அது பற்றி அவர் தான் முடிவு எடுக்க முடியும்" என்கிறார் பிரேமலதா.

"தேவையில்லை. வைரமுத்து எந்த ஒரு விருதையும் திருப்பித்தர தேவையில்லை." என்பது சுந்தர் பிரின்ஸின் கருத்து.

"அதை சொல்ல ராஜாவுக்கு தகுதியில்லை. குற்றஞ்சாட்டப்பட்டவர்தான் வைரமுத்து, இன்னும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. விருதுகளை திருப்பித்தரத் தேவையில்லை,"என்கிறார் சரோஜா பாலசுப்பிரமணியன்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்