ரூ. 3.84 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

ரூ. 3.84 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

3.84 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகயை வான் நுண்ணறிவு பிரிவு சுங்க இலாகாவினர் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்துள்ளனர்.

திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா செல்லும் விமானத்தில் பயணிக்க தயாராக இருந்த இளையான்குடியை சேர்ந்த தாஜுதீன், ஜாஹீர் உசேன் என்ற இருவரது உடைமைகளை சோதனையிட்டதில், 3.84 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட சூட்கேசில் மறைத்து கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் விமான நிலைய சுங்க இலாகாவினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து விமான நிலைய சுங்க இலாகா துணை ஆணையர் ஜெயக்குமார் மற்றும் பண்டாரம் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது துணை ஆணையர் ஜெயக்குமார் கூறுகையில், "திருச்சி விமான நிலையத்தில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 45 கிலோ தங்கம் மற்றும் 1.8 கோடி பணம் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து இன்று இந்தியாவிலேயே முதல் முறையாக திருச்சி விமான நிலையத்தில் 3.84 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்", என்றனர். கடந்த ஒரு வருடத்தில் கடத்தல் தங்கம் 45கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

விமான நிலையத்தில் சிறப்பாக செயல்பட்டு வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டதை, சுங்க இலாகாவினர் கேக் வெட்டி கொண்டாடினர்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :