பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு தீர்மானித்து கொள்ளலாம் - உச்சநீதிமன்றம்

தீபாவளி பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் இல்லை

பட மூலாதாரம், Getty Images

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு முடிவு செய்து கொள்ளலம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க இரவு அளித்த 2 மணி நேரத்துக்கு கூடுதலாக, காலை 4.30 மணி முதல் 6.30 பட்டாசு வெடிக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்து இருந்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் இவ்வாறான தீர்ப்பை வழங்கி உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

இந்தியா முழுவதும் பட்டாசு விற்பனைக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் சில நிபந்தனைகளுடன் பட்டாசு விற்பனையை மேற்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் அக்டோபர் 23 ஆம் தேதி தீர்ப்பளித்து இருந்தது.

அந்த நிபந்தனைகளில் முதன்மையானது, தீபாவளி நேரத்தில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பதாகும்.

தமிழக அரசின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் , இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் அந்த நேரத்தை தமிழக அரசே தீர்மானித்து கொள்ளலாம் என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :