பட்டேல் சிலை: வலுக்கும் எதிர்ப்பு, கைது செய்யப்படும் பழங்குடிகள்

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உலகின் உயரமான சிலை இன்று பிரதமர் மோதியால் திறந்து வைக்கப்படுகிறது. அதே சமயம் `ஸ்டச்யூ ஆஃப் யூனிட்டி` (Statue of Unity) என்று அழைக்கப்படும் அந்த சிலையின் பிரம்மாண்ட திறப்பு விழாவுக்கு எதிராக போராடிய மக்களை போலிஸார் தடுத்து வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை இன்று பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோதியால் திறந்து வைக்கப்படவுள்ளது.
சிலையும், கைதும்
அந்த 182மீட்டர் உயர சிலை, சர்தார் சரோவர் அணைக்கு அருகில் அமைந்துள்ளது. சிலையின் கட்டுமானாத்திற்கும், அதன் பிரம்மாண்ட திறப்பு விழாவிற்கும் உள்ளூர் பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சுமார் 90 பேர் போலிஸார் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் தெரியவில்லை என்றும் பழங்குடியின தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
ஆனால் சிலை அமைந்துள்ள நர்மதா மாவட்டத்தின் ஆட்சியிர் ஆர்.எஸ். நினாமா, இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என பிபிசி குஜராத்தி சேவையிடம் தெரிவித்தார்.
சிலை அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ள 90 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பழங்குடியின தலைவர் ஆனந்த் மஸ்கயோன்கர் தெரிவிக்கிறார்.
இத்தனை பேர் போலிஸாரால் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை என தெரிவித்தார்.
அம்லெதா காவல் நிலையத்தில் ஐந்து பேர் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என அம்லெதா காவல் நிலையத்தின் பார்மார் பிபிசியின் குஜராத்தி சேவையிடம் தெரிவித்தார்.
அவர்கள் போராட்டம் நடத்தப்போவதாக எங்களுக்கு தகவல் வெளியானது என அதன் அடிப்படையில் அவர்களை தடுத்து வைத்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.
அழைப்புவிடுத்த பழங்குடிகள்
பிடிஎஸ் மற்றும் பிபிடி போன்ற நிறுவன்ங்கள் இந்த சிலை திறப்பு எதிராக உள்ளன எனவே அந்த நிறுவன ஊழியர்கள் 16 பேரை தடுத்து வைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.
இந்த சிலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பழங்குடியினர் முழு கடை அடைப்புக்கு அறிவிப்பு விடுத்திருந்தனர்.
அம்பாஜி முதல் உமர்கம் என்ற கிராமங்கள் அந்த கடையடைப்பில் பங்கேற்பதாக அறிவித்திருந்தது.
பட மூலாதாரம், Getty Images
சிலை உள்ள பகுதியை சேர்ந்த மக்கள் சிலையின் கட்டுமானத்திற்கு நீண்ட காலத்திற்கு முன்பாக இருந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மத்திய குஜாரத்தை சேர்ந்த சோட்டா உதய்பூ, பஞ்மஹால், வதோதரா மற்றும் நர்மதா நீரில் மூழ்கபோவதாகவும் அச்சுறுத்தினர்.
கரும்பு ஆலையை சேர்ந்த தொழிலாளிகள் தங்களுக்கு வழங்க வேண்டிய கூலியை வழங்க சொல்லி கரும்பு விவசாயிகள் போராடி வருகின்றனர்.
தங்கள் கரும்புகளை வாங்கிய ஆலைகள் கூலிகள் தரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
ஆலை நிர்வாகத்திடம் பல நாட்களாக தங்களுக்கு கூலி வழங்க கோரி வருகின்றனர்.
சிலையின் கட்டுமானம்
சிலையின் கட்டுமானம் முடிந்தவுடன் மாநில அரசால் நடத்தப்பட்ட`ஏக்தா யாத்ரா` என்ற பேரணிக்கும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்த பேரணி குறித்து ஒட்டப்பட்ட சுவரோட்டிகளையும் பழங்குடியின மக்கள் கிழித்தெறிந்தனர்.
போஸ்டர்களுக்கு பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்த பின், முக்கியமான மற்றும் வரலாற்று புகழ்மிக்க பழங்குடியின தலைவர் பிஸ்ராமுண்டாவுடன் பிரதமரும், முதல்வரும் இருப்பது போன்ற போஸ்டர்கள் பயன்படுத்தப்பட்டன.
குஜராத்தில் கட்டப்பட்டுள்ள மிக உயரமான சிலை
இந்த சிலையின் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட பணத்தை பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம் என பழங்குடியின மக்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த சிலையை சுற்றியுள்ள 22 கிராமத்தின் உள்ள பழங்குடியினர் பிரதமர் மோதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதினர். அதில் சிலையை திறக்க வரும்போது மோதிக்கு தாங்கள் வரவேற்பளிக்க மாட்டோம் என்றும் தெரிவித்திருந்தனர்.
மேலும் உள்ளூர்வாசிகள் திறப்பு விழாவை புறக்கணிக்கவுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :