தமிழக கடலோர மாவட்டங்களில் தொடரும் மழை

தமிழக கடலோர மாவட்டங்களில் தொடரும் மழை படத்தின் காப்புரிமை Getty Images

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நீடித்துவரும் காற்றழுத்தத் தாழ்வு நிலையில் காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் விட்டுவிட்டு தொடர்ந்து மழை பெய்துவருகிறது.

இந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலையில் காரணமாக தமிழகத்திலும் புதுச்சேரியிலும் அடுத்த மூன்று நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை நீடிக்குமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

இந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலையில் காரணமாக தமிழகம் புதுவையின் கடலோரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னையிலும் அதன் புற நகர்ப் பகுதிகளிலும் நள்ளிரவிலிருந்தே விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்துவருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

அதிகபட்சமாக புதுச்சேரியின் காரைக்கால் பகுதியிலும் தரங்கம்பாடியிலும் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு மீனவர்கள் தெற்கு ஆந்திரா, தமிழக கடற்கரை, மன்னார் வளைகுடா பகுதிகளில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்