பூப்படைந்ததால் தென்னந்தோப்பில் தங்கிய சிறுமி மரம் விழுந்து பலி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பூப்படைந்ததால் தென்னந்தோப்பில் தங்க வைக்கப்பட்டு இறந்த சிறுமி - உறவினர்கள் சொல்வது என்ன?

பட்டுக்கோட்டை அருகே பூப்படைந்ததால் குடிசையில் தனித்து விடப்பட்டிருந்த சிறுமி கஜ புயலின்போது தென்னை மரம் மேலே விழுந்து உயிரிழந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

பிபிசி தமிழிடம் பேசிய அச்சிறுமியின் பாட்டி, "சிறுமி குடிசையில் தனியாக இல்லை. அவரது தாயும் அவருடன் தங்கியிருந்தார்," என்று கூறியுள்ளார்.

காலில் காயமடைந்துள்ள சிறுமி விஜயலட்சுமியின் தாய் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :