தெலங்கானா தேர்தல் களம்: தெலுங்கு தேசம் கட்சியின் பலம், பலவீனம்

தெலங்கானா படத்தின் காப்புரிமை Hindustan Times / getty
Image caption ஒருங்கிணைந்த ஆந்திராவின் எதிரெதிர் துருவங்களாக இருந்த காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளின் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் சந்திரபாபு நாயுடு

தெலங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் ஆர்வத்துடன் ஒரு விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டி.ஆர்.எஸ்.) ஒரு பக்கமும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் தெலுங்கு தேசம், டி.ஜே.எஸ்., இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் மறுபக்கமும் என்ற வகையில் அணி சேர்ந்து தேர்தல் களம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

தெலுங்கு தேசம் இடம் பெற்றுள்ள கூட்டணிக்கு தேர்தலில் போட்டியிட தகுதியே இல்லை என்று கூறி டி.ஆர்.எஸ். கட்சி இந்த விவாதத்தைத் தொடங்கியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவை சேர்ந்த கட்சி, ஆந்திரப் பகுதியில் ஆதரவைத் திரட்டி தெலங்கானா மாநிலம் உருவாவதற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சி, தேசிய அளவில் அரசியல் கட்சிகளின் ஆதரவைத் திரட்டி தெலங்கானா உருவாவதைத் தடுக்க முயன்ற கட்சி என்றெல்லாம் தெலங்கானாவுக்கு துரோகம் செய்த கட்சி என்று டி.ஆர்.எஸ். கூறுகிறது.

புகார்களின் உண்மைத் தன்மைகளுக்கு அப்பாற்பட்டு, தெலங்கானா மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி இருப்பது பற்றிய டி.ஆர்.எஸ். கட்சியின் நிலைப்பாட்டுக்கு முக்கிய காரணமாக இருப்பது, அரசியல் செயல்பாடு, கொள்கைகள் பற்றி விவாதங்கள், சமூக அடித்தளத்தில் செயல்பாடு உள்ளிட்ட விஷயங்கள்தான்.

2014-ல் ஆந்திரப் பிரதேச மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு, அரசியல் நீடிப்பு பற்றி தெலுங்கு தேசம் கட்சிக்கு நெருக்கடி இருந்தது என்பது உண்மைதான். தெலங்கானா மாநில கோரிக்கைக்கு எழுத்துபூர்வமாக ஆதரவு அளித்தும் கூட இந்த நிலைமை இருந்தது.

உண்மையில், தெலுங்கு தேசம், காங்கிரஸ் என இரு கட்சிகளுமே அரசியல் போட்டியில் இறங்கி, தெலங்கானா மற்றும் ஆந்திராவில் இரு தரப்பினருமே உரிமை கொண்டாடி, பிராந்திய அளவில் அணிகள் பிரிந்து, கருத்து மோதல்கள் நடந்தன.

டி.ஆர்.எஸ். கட்சியைப் போல இந்த இரு கட்சிகளுமே புதிதாக எதையும் சொல்லவோ, அரசியல் தெளிவான சூழ்நிலையிலோ இல்லை.

படத்தின் காப்புரிமை KCR / Facebook
Image caption தெலங்கானா முதல்வரும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவருமான சந்திரசேகர் ராவ் தெலுங்கு தேசம் கட்சியை தெலங்கானாவுக்கு எதிரான கட்சியென விமர்சிக்கிறார்.

தெலுங்கு தேசம் கட்சி தெலங்கானா கோரிக்கைக்கு எதிரான நிலையை எடுத்தது, என்று எடுத்துக் கொண்டாலும்கூட, என்று எடுத்துக் கொண்டாலும் கூட, பெரும்பான்மை கருத்துகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த காரணத்துக்காக ஓர் அரசியல் கட்சியை ஒரு பிராந்தியம் / மாநிலத்தில் தடை செய்ய முடியுமா?

தெலங்கானாவுக்கு ஏற்புடைய கட்சி இல்லை என்று தெலுங்கு தேசம் ஆகிவிடுமா? தெலங்கானாவில் அந்தக் கட்சிக்கு ஆதரவு தொடர்ந்து இருக்குமா அல்லது இருக்காதா? ஆதரவு இருக்காது என்றால், எந்த அடிப்படையில் காங்கிரஸ் மற்றும் டி.ஜே.எஸ். கட்சிகள் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்தன?

காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீட்டில் வெறும் 13 தொகுதிகளில் போட்டியிடும் தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிராக டி.ஆர்.எஸ். கட்சி ஏன் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது? நீண்டகால அரசியல் பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கப் போகும் 2018 தேர்தல் சூழ்நிலையில், உருவாகி வரும் விவாதங்களை, இந்தக் கேள்விகளின் பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

பிரபல திரைப்பட நடிகராக இருந்த என்.டி. ராமா ராவ் 1982ல் தொடங்கிய கட்சி தெலுங்கு தேசம் கட்சி. தொடங்கப்பட்டு ஓராண்டு காலத்திற்கு 1983ல் ஆந்திராவில் நடந்த தேர்தலில் அந்தக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் ஆட்சியில் அதிருப்திகள் இருந்து வந்த நிலையில், மாற்று கட்சி வாய்ப்பாக பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்தது.

எமர்ஜென்சிக்கு பிந்தைய காலக்கட்டத்தில் இந்திய அரசியலில் தேசிய கட்சி ஆட்சி என்பதில் இருந்து மாநிலத்தை மையமாகக் கொண்ட கட்சி என்ற நிலை உருவானது. இதனால் மத்திய - மாநில உறவுகள் மற்றும் கூட்டாட்சி முறை ஆகியவை குறித்து மறு ஆய்வு செய்யும் சூழ்நிலை உருவானது. அதுவரை மத்திய - மாநில உறவுகளில் அரசியல் மற்றும் நிதி விஷயங்கள் மட்டும் பேசப்பட்டு வந்த நிலையில், மொழி கலாசார அம்சங்கள் பற்றியும் தெலுங்கு தேசம் பேசத் தொடங்கியது.

படத்தின் காப்புரிமை The India Today Group
Image caption தெலுங்கு தேசம் நிறுவனர் என்.டி.ராமா ராவ் (வலது) உடன் சந்திரபாபு நாயுடு

தெலுங்கு மக்களின் சுயமரியாதை விட்டுக் கொடுக்கப்படுவதாகவும், காங்கிரஸ் கட்சியின் உயர் தலைமையில் இந்தப் போக்கு உள்ளதையும் தெலுங்கு தேசம் எடுத்துக் கூறியது.

மாநில காங்கிரஸ் தலைமைக்கு சுதந்திரம் தராதது, அடிக்கடி தலைவர்கள் மாற்றப்படுவதன் மூலம் அவமதிப்பு செய்யப்படுவதன் மூலம் இவை நிரூபணமாகின்றன என்று கூறியது. இவ்வாறு செய்ததன் மூலம் 1940கள் மற்றும் 50களில் இருந்த மொழி அடிப்படையிலான இயக்கங்களின் உணர்வை தெலுங்கு தேசம் மீண்டும் தூண்டியது. அத்துடன் பன்முக தேசியத்துவம் கொண்ட இந்தியாவில் கூட்டாட்சி முறையில் தீவிரமான கலாசார அடையாளத்தை சேர்த்து இந்திய அரசியலில் சிந்தனையை தூண்டிவிட்டது.

தேசிய அளவில் 1980கள் மற்றும் 1990களின் தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அரசியலில் என்.டி.ராமா ராவ் தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் பங்கு, பின்னர் 1990களில் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சியின் பங்கு காரணமாக தேசிய அரசியலில் அந்தக் கட்சியின் மதிப்பும் முக்கியத்துவமும் அதிகரித்தது.

தேசிய முன்னணி மற்றும் ஐக்கிய முன்னணி அதைத் தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி முயற்சிகளில் இந்தக் கட்சிக்கு முக்கியமான பங்கு இருந்ததன் மூலம் இது நிரூபணம் ஆனது.

மக்களைக் கவரும் அம்சங்கள் மிகுந்த என்.டி.ஆர். காலத்து ஆட்சியால் ஆந்திராவில் நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதற்கு மாறாக, நாயுடு காலத்தில் பொருளாதாரத்தில் தாராளமயம் சார்ந்த மாற்றம் ஏற்பட்டது. இந்த நிலைமாற்றம் எளிதாக இருக்கவில்லை.

புதிய முரண்பாடுகளுக்கு வழிவகுப்பதாக இருந்தது. நகர்ப்புற பொருளாதாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் கவனம் கொண்டதாக இருந்ததால், விவசாயத்துக்கு நெருக்கடி ஏற்பட்டு கீழ் நிலையில் சமமற்ற வளர்ச்சி அதிகமானது. தாராளமயம் சார்ந்த இந்தக் கொள்கையின் விளைவு தான் தெலங்கானா மாநில கோரிக்கை எழுவதற்கான குறிப்பிடத்தக்க காரணமாக இருந்தது.

படத்தின் காப்புரிமை Hindustan Times
Image caption வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசில் தெலுங்கு தேசம் முக்கிய பங்கு வகித்தது

தெலுங்கு தேசம் கட்சி அரசியலின் ஒரு பரிமாணமாக கலாசார மற்றும் கூட்டாட்சி அம்சங்கள் இருந்தன என்றால், சமூகத்தில் ஆதரவைத் திரட்டுவதில் ஏற்பட்ட மாற்றம் மற்றொரு குறிப்பிடத்தக்க பரிமாணமாக இருந்தது. அதனால் ஏற்பட்ட அரசியல் மாற்றத்துக்கு காரணமாக இருந்தது.

தெலுங்கு தேசம் கட்சி தீவிர சமூக அரசியலை செய்ததாகச் சொல்லப்படுகிறது - ஓரளவுக்கு அதன் இயல்பு அப்படி இருந்தது. ஓரளவுக்கு தற்செயலாக அப்படி நடந்தது. சமூக இயக்கங்களின் மறுகட்டமைப்பு பிராந்தியங்களுக்கு ஏற்ப மாறுபட்டு இருந்தது - வெவ்வேறான வரலாற்று பின்னணி, சாதி மற்றும் வாழ்க்கை நிலைக்கு ஏற்ப சமமற்ற அரசியல் பொருளாதாரம் மற்றும் முற்றிலும் வேறுபட்ட சமூக மூலதனம் மற்றும் அரசியல் விழிப்புணர்வைப் பொருத்து இவை மாறுபட்டிருந்தன.

காங்கிரஸ் கட்சியில் இருந்து மாறுபட்டு, ஆரம்பத்தில் இருந்தே ஆந்திரக் கட்சியாக தெலுங்கு தேசம் இருந்து வந்தது. இந்த எண்ணம் உள்ளார்ந்து இருந்ததால், அந்தக் கட்சியின் தலைமை மற்றும் முக்கியமான ஆதரவு கம்மா சமூகத்தவரிடம் இருந்து கிடைத்தது. இந்த சமூகம் கிருஷ்ணா - கோதாவரி மாவட்டங்களில் முதன்மையானதாக இருக்கிறது.

1983ல் தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் இந்தக் கருத்தை மேலும் பலப்படுத்தின. 1985ல் கரம்சேடு பகுதியில் தலித்துகளுக்கு எதிராக கம்மா வன்முறைகள் நடந்ததால், தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து தலித்கள் விலகி எதிர்ப்பு நிலைக்கு மாறினர். அதன் தொடர்ச்சியாக வங்கவீடி ரங்கா கொலையைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களால் கபுஸ் மக்களிடம் கம்மா எதிர்ப்பு வலுப் பெற்றது. சாதி ரீதியிலான இந்த தீவிரமான பிரிவினை காரணமாக சமூக அரசியலில் சாதி, பிராந்தியம் மற்றும் கட்சி அடிப்படையில் மறு அணி சேர்க்கைக்கு தெலுங்குதேசம் வழி வகுத்துவிட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியின் சமூக அடையாளம் சில பிரிவினை தன்மைகளைக் கொண்டதாக இருக்கிறது என்றால், தெலங்கானாவில் மாறுபட்ட தோற்றத்தை அது உருவாக்கியுள்ளது. அரசியல் பங்கேற்பில் பரந்த சமூக அடிப்படைக்கு வழி வகுப்பதாகவும், எச்சரிக்கையுடன் பெரிய அளவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடம் தருவதாகவும், கட்சி மற்றும் அரசு அமைப்புகளில் வெளியில் தெரிகிற அளவுக்கு அவர்களுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தருவது என்று மாறுபட்ட அணுகுமுறையை கையாள்கிறது.

பஞ்சாயத்து ராஜ் நடைமுறையை மாற்றி அமைப்பது, அளவில் பெரியதாக உள்ள பஞ்சாயத்து சமிதிகளுக்குப் பதிலாக மண்டல்கள் அறிமுகம் செய்து நிறுவன அளவில் வாய்ப்புகள் அளிப்பதை அதிகரிப்பது, பி.ஆர். நடைமுறையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் இடஒதுக்கீடு அறிமுகம் போன்ற நடவடிக்கைகள், இந்தச் சமூகத்தவர்களுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்யும் முக்கியமான முயற்சிகளாகப் பார்க்கப்படுகின்றன.

இதன் விளைவாக, ரெட்டி சமூகத்தவர்களின் ஆதிக்கம் மிகுந்ததாக பார்க்கப்படும் காங்கிரஸ் கட்சியில் இருந்து மாறுபட்டு, பிற்படுத்தப்பட்ட சமூகத்தவருக்கு ஆதரவான கட்சியாக தெலுங்கு தேசம் பார்க்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மகளிருக்குபாடுபடும் கட்சியாக பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து மாறுபட்டதாக, டி.ஆர்.எஸ். கட்சியில் இருந்தும் கூட மாறுபட்டதாக, தெலுங்குதேசம் கட்சியில் வலுவான மற்றும் நன்கு உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு முறை இருக்கிறது. தெலங்கானாவில் இந்த அமைப்பு முறைகள் உறுதியுடன் உள்ளன. ஆந்திரா பகுதியைவிடவும் கூட இந்தப் பகுதியில் அந்தக் கட்சியின் அமைப்புகள் வலுவாக இருந்தன.

மாநிலம் உருவானவுடன் தேர்தலில் டி.ஆர்.எஸ். கட்சி வெற்றி பெற்ற போதிலும்கூட, 2014 தேர்தல்களில் மக்களின் வாக்குகள் மற்றும் வெற்றி பெற்ற இடங்களின் அடிப்படையில் தெலுங்கு தேசம் கட்சியின் செல்வாக்கை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

ஆளும் டி.ஆர்.எஸ். கட்சி ஆகர்ஷ் பெயரில் செய்த எதிர்ப்பு பிரச்சாரத்தால் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவு சரிந்தது வெளிப்படையாகத் தெரிந்தபோதிலும், அதன் அரசியல் நிலைப்புத் தன்மையும், சமூக அடித்தளமும், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மத்தியில் உள்ள ஆதரவையும் மொத்தமாக புறந்தள்ளிவிட முடியாது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் (வலது) மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

டி.ஆர்.எஸ். மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் ஆதிக்க சாதி அரசியல் காரணமாகவும், அரசியல் விழிப்புணர்வு பெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பு சாதியினரில் கபு, கவுடா, பத்மஷாலி, கொல்லாஸ் போன்ற சமூகத்தவர்களுக்கு தங்களுடைய தேர்தல் அரசியலில் இடம் தராமல் ஒதுக்கியதாலும் அரசியல் ரீதியில் அதிருப்தி ஏற்பட்டது. இந்தக் காரணத்துக்காக இந்தச் சமூகத்தவர்களின் விசுவாசத்துக்கு உரிய கட்சியாக தெலுங்கு தேசம் இன்னும் நீடிக்கிறது. டி.ஆர்.எஸ். கட்சியால் புறக்கணிக்கப்படுபவர்கள் தெலுங்கு தேசத்தின் பலமாக இருக்கிறார்கள் என்று சொல்வது, மிகைப்படுத்தி கூறுவதாக இருக்காது.

2014 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் மொத்தம் 40 சதவீத வாக்குகளைப் பெற்றனர். டி.ஆர்.எஸ். பெற்ற 34.3 சதவீதத்தைவிட இது அதிகம். இதனால் டி.ஆர்.எஸ். கட்சிக்கு உறுத்தல் உள்ளது.

இப்போதைய மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணி சேர்ந்திருப்பது, அதன் நேர்மையற்ற தன்மையையும், தெலங்கானாவில் காங்கிரஸ் தலைமையின் விசுவாசம் இல்லாத தன்மையையும் காட்டுகிறது என்று டி.ஆர்.எஸ். கட்சி வாதங்களை முன்வைக்கிறது.

2009 சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் டி.ஆர்.எஸ். கூட்டணி சேர்ந்து காங்கிரஸ் கட்சியை எதிர்த்துப் போட்டியிட்டதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இந்தக் கருத்து குறிப்பிடத்தக்கது. 2009 தேர்தலில் இந்தக் கட்சிகள் தோல்வியடைந்தன.

படத்தின் காப்புரிமை TDP / FACEBOOK

தெலங்கானா இயக்கம் தீவிரமாக இருந்த காலத்தில், தெலுங்கு தேசம் கட்சிக்குப் போதிய பலம் இருந்த காலத்தில், தெலங்கானாவுக்கு ஆதரவான முடிவு எடுக்கப்படுவதைத் தடுக்கும் நிலையில் தெலுங்கு தேசம் இருந்த காலத்தில் இது நடந்தது.

தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டாம் நிலையில் இருந்து செயல்படுவதற்கு தெலுங்கு தேசம் முடிவெடுத்திருப்பதில் இருந்து, தேசிய அரசியலில் பெரிய அளவில் ஆதரவைத் திரட்டுவதில் கண் வைத்திருக்கிறது என்பது தெளிவாகிறது. தேசிய அளவில் அடுத்து வரும் தேர்தலில் கூட்டணியை உருவாக்குவதில், ஆதிக்கம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.

ஆந்திர மாநிலக் கட்சி என்று தெலுங்கு தேசம் கட்சியை குறைத்துக் கூறுவதன் மூலம், தெலங்கானாவின் நேர்மையான பிரதிநிதியாக டி.ஆர்.எஸ். கட்சி காட்டிக் கொள்ளலாம். ஆனால் இந்த ஈகோ மனப்போக்கு அதற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தலாம். சமூக அளவிலான அடிப்படைகள் மற்றும் தேசிய அரசியலில் உள்ள அனுபவங்களைக் கொண்டு பார்த்தால் தெலுங்கு தேசம் கட்சியை யாராலும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அவ்வாறு குறைத்து மதிப்பிடுவது கெடுதலாகத்தான் இருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்