"காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர இன்னும் 30 ஆண்டுகள் ஆகலாம்" - பிரதமர் நரேந்திர மோதி

மோதி படத்தின் காப்புரிமை Hindustan Times

இன்று முக்கிய தமிழ் நாளேடுகளில் வெளியான செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி - 'காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர இன்னும் 30 ஆண்டுகள் ஆகலாம்'

இன்னும் 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு பிறகு மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வர காங்கிரசுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி கிண்டலாக கூறியதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"முதல்-மந்திரி வசுந்தரா ராஜே தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தற்போது அங்கு தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.

நேற்று பில்வாரா, பனேஷ்வர்தாம், கோட்டா ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி பேசுகையில், "காங்கிரஸ் கட்சி தனது ஆட்சிக்காலத்தில் கிராமப்புற மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பெரிய அளவில் எதுவும் செய்துவிடவில்லை. விவசாய விளைபொருட்களுக்கு போதிய குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்கி இருக்கலாம். பயிர் காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் அரசு செய்யவில்லை. காங்கிரஸ் கட்சி 55 ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்டு இருக்கிறது. ஆனால் கிராமங்களுக்கு குடிநீர், மின்சாரம், சாலைகள், கழிவறை வசதிகள் கிடைக்கவில்லை.

இன்னும் 25 அல்லது 30 ஆண்டுகளில் மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வர காங்கிரசுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். (இதை அவர் கிண்டலாக கூறினார்.) அப்படி ஆட்சிக்கு வந்தால், சாலைகளுக்கு தார் கூட போட முடியாத நிலையில்தான் அவர்கள் இருப்பார்கள்.

பயங்கரவாதிகளுக்கும், நக்சலைட்டுகளுக்கும் எனது அரசு தக்க பதிலடி கொடுக்கிறது. ஆனால் நக்சலைட்டுகளை காங்கிரஸ் புரட்சியாளர்கள் என்று அழைப்பதுடன் அவர்களை பாராட்டவும் செய்கிறது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்து - "துரைமுருகனின் கருத்துக்கு ஸ்டாலின் விளக்கம் தர வேண்டும்"

மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் திமுகவுடன் கூட்டணியில் இல்லை என்று கூறிய துரைமுருகனின் கருத்துக்கு மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

"மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் திமுகவுடன் கூட்டணியில் இல்லை. அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் நட்பாகத்தான் இருக்கிறார்கள் என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது என் மனதையும், மதிமுக தொண்டர்களின் மனதையும் புண்படுத்தி உள்ளது. தன்மானத்தைவிட இயக்கத்தைப் பெரிதாக மதிப்பவன் நான். எனவே, இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

புதுக்கோட்டையில் கஜ புயல் பாதித்த இடங்களை பார்வையிட்ட பின் பேசிய வைகோ, "புயல் பாதித்த பகுதிகளுக்கு இதுவரை பிரதமர் மோடி ஏன் வரவில்லை? மற்ற மாநிலங்களுக்குச் செல்லும் மோடி, தமிழகத்தை மறந்தது ஏன்? புயல் பாதிப்புக்கு மத்திய அரசு ரூ.25 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க வேண்டும்.

தென்னை மரத்துக்கு தலா ரூ.50 ஆயிரம், வாழைக்கு ஏக்கருக்கு ரூ.5 லட்சம், சேதம் அடைந்த படகுகளுக்கு தலா ரூ.40 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு இலவச வீடு கட்டிக்கொடுக்க வேண்டும். புயல் பாதிப்புக்கு முன்பே முதல்வர் பழனிசாமி தஞ்சாவூரில் அரசின் முகாம் அலுவலகத்தை ஏற்படுத்தி அங்கேயே தங்கி பணிகளை கவனித்திருக்க வேண்டும்.

மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் திமுகவுடன் கூட்டணியில் இல்லை. அக்கட்சி யைச் சேர்ந்தவர்கள் நட்பாகத் தான் இருக்கிறார்கள் என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது என் மனதையும், மதிமுக தொண்டர்களின் மனதை யும் புண்படுத்தி உள்ளது. தன் மானத்தைவிட இயக்கத்தைப் பெரிதாக மதிப்பவன் நான். எனவே, இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்" என்று அவர் கூறியதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் - "பாலியல் அத்துமீறலை விசாரிக்க சிறப்பு குழு தேவை"

படத்தின் காப்புரிமை Getty Images

போலீஸ் துறைகள், மருத்துவமனைகளில் நிகழும் பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த, ஐ.சி.சி., எனப்படும், உள்ளார்ந்த விசாரணைக் குழுக்கள் அமைக்கும்படி, மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, மேனகா உத்தரவிட்டுள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, பிரபல நடிகர் நானா படேகர், 2008ல், தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக சமீபத்தில் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதைத் தொடர்ந்து, சினிமா, ஊடகங்கள், அரசியல் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள், தாங்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டதாக, சமூக வலைதளங்களில் புகார் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், அனைத்து போலீஸ் துறைகளில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க, ஐ.சி.சி., எனப்படும் உள்ளார்ந்த விசாரணைக் குழுக்கள் அமைக்கும்படி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், ஜே.பி.நட்டாவுக்கு, மேனகா கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:அனைத்து அரசு அலுவலகங்களில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை விசாரிக்க, உள்ளார்ந்த விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், போலீஸ் துறையிலும், மருத்துவ துறையிலும் இத்தகைய குழுக்கள் அமைக்கப்படவில்லை.எனவே, மருத்துவத் துறையில் விசாரணைக் குழு அமைக்க உத்தரவிடும்படி கேட்டுக் கொள்கிறேன். உள்ளார்ந்த விசாரணைக் குழு உறுப்பினர் களுக்கு, தக்க பயிற்சி அளிக்க விரிவான ஏற்பாடுகளை, மத்திய பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் செய்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :