தமிழகத்தில் முதல் முறையாக சிறகு முறிந்த மயிலுக்கு அறுவை சிகிச்சை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தமிழகத்தில் முதல் முறையாக சிறகு முறிந்த மயிலுக்கு அறுவை சிகிச்சை

சத்தியமங்கலம் அருகே வயலில் நாய் கடித்து இறக்கை துண்டான மயிலுக்கு சேலத்தில் அறுவை சிகிச்சை நடந்தது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ளது தூக்கநாயக்கன் பாளையம். அங்கு வயலில் நாய் கடித்து சிறகு முறிந்து கிடந்த மயில் ஒன்றை கண்டுபிடித்த விவசாயிகள் அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சத்தியமங்கலத்தில் உள்ள வன கால்நடை மருந்தகத்தில் வைத்து இந்த மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மயிலை மீண்டும் பறக்க வைக்க, முறிந்த சிறகில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

மயிலுக்கு மயக்க மருந்து கொடுத்து, முறிந்த சிறகில் 'பின்' வைத்து தையல் போடப்பட்டது. சுமார் இரண்டு மணி நோம் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

மயில் மீண்டும் பறக்கத் தொடங்கியபின் பின் காட்டு பகுதியில் விடப்படும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்