புலந்த்ஷகரில் காவல்துறை அதிகாரி வன்முறை கும்பலிடம் சிக்கி கொல்லப்பட்டது எப்படி? - களத்திலிருந்து நேரடி தகவல்

கொல்லப்பட்ட காவல்துறையினர் படத்தின் காப்புரிமை SUMIT SHARMA

எல்லா நாளும் காலை வேளை போன்றுதான் திங்கள்கிழமை காலையும் சுபோத் குமார் சிங்கிற்கு விடிந்தது.

30 ஆண்டுகால உத்தர பிரதேச காவல்துறை பணியில், காலை எழுந்து தயாரான பின்னர் வழக்கமாக செய்யக்கூடிய பணிகளை செய்ய சுபோத் குமார் சிங் தவறியதே இல்லை.

அதிகாலையில் எழுந்து, உள்ளூர் பத்திரிகை செய்திகளை எல்லாம் வாசித்துவிட்டு, குடுபத்தினருக்கு செய்ய வேண்டிய தொலைபேசி அழைப்புகளை செய்துவிடுவது அவரது வழக்கமாகும்.

காலையில் எண்ணெய் குறைந்த பராந்தா (மசால் வைத்து சமைக்கப்பட்ட சப்பாத்தி) சாப்பிடுவது அவருக்கும் மிகவும் பிடிக்கும்.

கட்டுடலை சீராக வைத்திருக்கும் இந்த காவல்துறை அதிகாரி சமீபத்தில் சிறந்த செல்பி புகைப்படங்களை எடுக்கின்ற சாமர்த்தியத்தையும் வெளிக்காட்டியுள்ளார்.

அன்று மதியம் பருப்பு மற்றும் சப்பாத்தி வைத்து சிறந்த மதிய உணவை சாப்பிட கொடுக்க வேண்டுமென தன்னுடைய பணியாளரிடம் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், அந்த மதிய உணவு பரிமாறப்படவேயில்லை.

மதிய உணவு வேளையில்தான் தன்னுடைய காவல் நிலையத்திற்கு சற்று தொலைவில் இருந்த ஒரு காவல் நிலையத்திற்கு வெளியே கற்களால் அடித்தும், துப்பாக்கியால் சுட்டும் தன்னையும், அவரது சகாக்களையும் அடித்து கொண்டிருக்கிற கோபமான கும்பலோடு தனது மரணத்தில் முடிந்ததொரு போராட்டத்தை சுபோத் குமார் சிங் நடத்தி கொண்டிருந்தார்.

படத்தின் காப்புரிமை YOGESH KUMAR SINGH

என்ன நடந்தது?

திங்கள்கிழமை காலை 9 மணி அளவில் உத்தர பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியிலுள்ள புலந்த்ஷகர் மாவட்டத்திலுள்ள மஹாவ் கிராமத்தை சேர்ந்த மக்கள், குறைந்தது 5 டஜன் பசுக்களின் இறந்த உடல்கள் என்று கூறப்படுவதை கண்டறிந்ததாகக் கூறியதில் இருந்து இந்த பிரச்சனை தொடங்கியது.

"அந்நேரத்தில் 200 பேருக்கும் அதிகமான இந்துக்கள் அங்கு கூடிவிட்டனர். என்ன செய்வது என்று மஹாவ் மற்றும் பக்கத்து கிராமங்களின் தலைவர்களால் சூடான விவாதங்கள் எழுந்தன" என்று உள்ளூர்வாசி தரம்வீர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் நடைபெற்ற ஒரு நாளுக்கு பின்னர், இந்த கிரமத்திலுள்ள அனைவரும் வெளியேறிவிட்டனர்.

பசு வதை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள பின்னர், பின்விளைவுகளுக்கு பீதியடைந்து சிறுபான்மை முஸ்லிம்கள் தப்பியோடி விட்டனர். இந்துக்கள் காவல்துறையால் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தால் தப்பி ஓடியுள்ளனர்.

கால்நடைகளின் உடல்களை சுற்றி கூடிய அவர்கள் கோபத்தால் வெகுண்டெழுந்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி அவற்றை காவல்நிலையத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர்.

அப்போது மணி பத்தரை. பக்கத்து கிராம மக்களும் இணைத்து மொத்தமாக 300க்கு அதிகமானோர் கூடவே, அவர்கள் நெடுஞ்சாலையிலுள்ள சிங்காரவதி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

படத்தின் காப்புரிமை YOGESH KUMAR SINGH

அந்த காவல் நிலையத்தில் இருந்த 6 காவல்துறையினரும் தலைமையகத்திற்கு தொலைபேசியில் அழைத்து விவரம் தெரிவித்து இருந்தனர்.

பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டது. 3 மைல் தொலைவில் இருந்த காவல் நிலையத்தில் பணியாற்றிய சுபோத் குமார் சிங் வாகனத்தில் ஏறி தனது ஓட்டுநரிடம், முடிந்த வரை வேகமாக செல்ல பணித்திருக்கிறார். சம்பவ இடத்தை அவர் முதலில் வந்தடைந்துள்ளார்.

11 மணிக்கு அந்த இடத்தை வந்தடைந்த அவர், உடனடியாக இந்த கும்பலில் புகுந்து கோபடைந்தோரை அமைதியடைய செய்ய முயன்றார்.

தன்னுடைய சகாக்களை போல குண்டு துளைக்காத ஆடையை கூட சுபோத் குமார் சிங் அணிந்திருக்கவில்லை. தன்னுடைய துப்பாக்கியையும் அவர் கையில் வைத்திருக்கவில்லை என்று சம்பவத்தை நேரில் பார்த்தோர் பிபிசியிடம் கூறினர்.

அந்த கும்பல் கூக்கிரலிட்டு, கேபத்தின் உச்சத்தில் இருந்தபோது, அதிக காவல்துறை அதிகாரிகள் அந்த இடத்தை வந்தடைந்தனர்.

இருதரப்பும் பொறுமை இழந்திருந்தன. இந்த நிலையில்தான் ஆயுத சக்தியை பயன்படுத்த காவல்துறையினர் முடிவு செய்தனர். இந்த முடிவு எடுக்கப்படாமல் இருந்திருந்தால், சுபோத் குமார் சிங் உள்பட இருவர் கொல்லப்பட்டது நிகழ்வு நடைபெறாமல் போயிருக்கலாம்.

"போலீசாருக்கும், கோபமடைந்திருந்த கும்பலுக்கும் இடையில் நடைபெற்ற அரை மணிநேரத்திற்கு மேலான காரசாரமான விவாதங்களுக்கு மத்தியில் துப்பாக்கிக்சூடு நடத்தப்பட்டது என்று இந்த காவல் நிலையத்திற்கு அருகில் இருக்கும் இடைநிலை பள்ளியில் வேலை செய்யும் நபர் ஒருவர் தெரிவித்தார்.

செல்பேசி இல்லாததால் பெண்களுக்கான கழிவறையில் அவர் பல மணிநேரம் அடைந்து கிடந்துள்ளார்.

நாட்டுப்புறத்து துப்பாக்கிகளை கொண்டிருந்த அந்த கும்பல், காவல்துறையினர் மீது சுடத் தொடங்கியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மக்களை கலைப்பதற்கு வானத்தை நோக்கி காவல்துறையினர் சுட்டதால்தான் இருதரப்புக்கும் வாழ்வா, சாவா என்ற என்ற நிலை தோன்றி, இறுதிக்கட்ட தாக்குதலுக்கு வழிவகுத்தது என்கிறார்கள் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்.

படத்தின் காப்புரிமை YOGESH KUMAR SINGH

ஏறக்குறைய மதிய வேளையில், சுபோத் குமார் சிங் உள்பட பெரும்பாலான காவல்துறை அதிகாரிகளை பழிவாங்கும் நோக்குடன் இருந்த கும்பல் சூழ்ந்து கொண்டு, அந்த பகுதியில் பசு வதை செய்யப்படுவதாக கூறப்படுவதை தடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

சில மூத்த காவல்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் இருந்த சிறியதொரு அறையில் தங்களை பூட்டிக்கொண்ட நிலையில், போராட்டக்காரர் ஒருவர் வீசிய செங்கல் அதற்கு வெளியே நின்ற சுபோத் குமார் சிங்கை தாக்கியது.

எனது மேலதிகாரி செங்கல்லால் தாக்கப்பட்டு, சுவருக்கு அருகில் சுயநினைவிழந்து கிடைப்பதை உணர்ந்து உடனடியாக நாங்கள் அலுவலக வாகனத்தில் அவ்விடத்திற்கு சென்றோம். பின் இருக்கையில் அவரை தூக்கி கிடத்திவிட்டு ஜீப்பை வயலை நோக்கி திருப்பினோம் என்று இன்னொருவர் உதவியோடு இதனை செய்த ஓட்டுநர் ராம் அஸ்ரெ கூறினார்.

காவல் நிலையத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவு வரை இந்த கும்பல் பின்தொடர்ந்து வந்ததாகவும், அந்த வெறிச்சோடிய வயலில் அவர்கள் இன்னொரு தாக்குதலை நடத்தியதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

அந்த வயலில் சமீபத்தில்தான் சீர்திருத்த வேலைகள் நடைபெற்றிருந்ததால், வாகனத்தின் முன்பக்க சக்கரங்கள் புதைந்தன. எங்களுடைய வாழ்க்கையை பாதுகாத்து கொள்ள ஓடுவதை தவிர வேறுவழி இருக்கவில்லை என்று ராம் அஸ்ரெ திங்கள்கிழமை மாலையில் காவல்துறையினரிடம் கூறினார்.

இயக்கமே இல்லாமல் கிடந்த காவல்துறை அதிகாரி, அவரது அலுவலக காரில் கிடப்பதையும், கோபமாக இருந்த கும்பல் அவர் இறந்து விட்டாரா, உயிருடன் இருக்கிறாரா என்று கேள்வி கேட்பது போல பின்னணியில் ஒலியும் இருந்த காணொளி வைரலாக பகிரப்பட்டது.

அவரது 3 செல்பேசிகளையும், .32 துப்பாக்கியும் காணவில்லை.

அவரது இடது புருவத்திற்கு மேல் துப்பாக்கி குண்டு துளைத்திருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், அது எவ்வளவு ஆழம் சென்றது என்று அதில் தெரிவிக்கப்படவில்லை.

அவரது துப்பாக்கியை பறித்து, யாரவது அவரை சுட்டிருக்கலாம் என்று உறுதி செய்யப்படாத சில தகவல்கள் கூறுகின்றன.

அருகிலுள்ள மருத்துவமனை மருத்துவர்கள், அவர் இறந்தே மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

அந்த போராட்டக் கூட்டத்தில் இருந்த இளைஞர் சுமித்தும் சுடப்பட்டுள்ளார். அவரும் மெர்ருட் நகர மருத்துவமனையில் இறந்துள்ளார்.

இந்த பகுதியில் தோன்றிய எதிர்பாராத, அறிவிக்கப்படாத வன்முறையில் இறந்த இரண்டாவது நபர் இவர்.

சுபோத் குமார் சிங்கின் இறப்பை பொறுத்தவரை, பசு வதை என்று கூறி போராட்டம் நடத்திய மக்களை கையாண்டு கொண்டிருந்தவர் கொல்லப்பட்டவராக கூறுவது முரணாக தெரிகிறது.

2015ம் ஆண்டு மாட்டிறைச்சி சாப்பிட்டதாக இந்தியாவில் நடைபெற்ற கும்பல் கொலையின் முதல் வழக்கை விசாரித்த முதல் அதிகாரி இவர்தான்.

தத்ரி என்ற இடத்தில் முகமது அக்லாக் கொல்லப்பட்ட இடம் சுபோத் கொல்லப்பட்ட வயலில் இருந்து வெகுதொலைவில் இல்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்