ஸ்டெர்லைட்: 'அர்பன் நக்சல்கள் தேவையற்ற பரப்புரை செய்கின்றனர்' - ஹெச்.ராஜா

ஸ்டெர்லைட் விவகாரம்: "அர்பன் நக்சல்கள் தேவையற்ற பரப்புரை செய்கின்றனர்" - எச்.ராஜா படத்தின் காப்புரிமை Twitter

அர்பன் நக்சல்கள், வளர்ச்சிகளை தடுக்க வேண்டுமென்றே ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுக்கின்றனர் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சேலம், கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்ட பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோதி காணொளி காட்சி மூலம் கலந்துரையாடல் நடத்தினார். சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயலாளர் ராஜா கலந்து கொண்டார்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "சாலைகள், தொழிற்சாலைகள் போன்ற வளர்ச்சிகள் ஏற்படக்கூடாது என வேண்டுமென்ற ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அர்பன் நக்சல்ஸ் போராடுகின்றனர். ஆனால் உள்ளூர் மக்கள் ஸ்டெர்லைக்கு ஆதரவாக இருக்கின்றனர்." என தெரிவித்தார்.

"வேலை வாய்ப்பு அதிகரிக்க தொழில் மயமாக்கல் அவசியம். ஸ்டெர்லைட் ஆலை தேவை என்று மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் மக்கள் வேலை வாய்ப்பை இழந்து கொண்டிருக்கிறார்கள்." என்று மேலும் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்தவரை பாதிப்பு இல்லை என ஏற்கனவே பசுமை தீர்பாயம் கூறியுள்ளது. இந்த ஆலையால் 30 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். வளர்ச்சியை தடுக்கும் விதமாக சில அர்பன் நக்சல் அமைப்புகள் தேவையற்ற பரப்புரை செய்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.

புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பிரதமர் வரவில்லை என்ற ராஜேந்திர பாலாஜி விமர்சனத்திற்கு, பதில் சொல்ல முடியாது என்று தெரிவித்ததுடன், "புயல் நிவாரண நிதியாக முன்கூட்டியே 353 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. அறிக்கை தந்த பின்னர் மீதி தொகை தரப்படும்" என்றார் அவர்.

திமுக, தெலுங்கு தேச கட்சி உள்ளிட் மாநில கட்சிகளின் கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த ஹெச். ராஜா, மாநில கட்சிகள் கூட்டணி வைப்பதால் அவர்களுக்கும் எந்த ஆதாயமும் இல்லை. பாஜகவுக்கும் எந்த பாதிப்பும் கிடையாது என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்