சென்னையில் வீடுகளில் திருடிய இளைஞர் மீது பாலியல் குற்றச்சாட்டு: காவல்துறை சொல்வதென்ன?

சென்னையில் வீடுகளுக்குள் புகுந்து பல பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு ஒரு ஐடி இளைஞர் உட்படுத்தியுள்ளார் என்ற செய்தி பரவலாக ஊடகங்களில் பகிரப்பட்டாலும், அந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணை முடியாத நிலையில் தெளிவான விவரங்கள் கிடைக்கவில்லை என அம்பத்தூர் காவல்நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அறிவழகன்(29) என்ற பட்டதாரி இளைஞர் சென்னை நகரத்தில் பல இடங்களில் பொருட்களை திருடிவிட்டு, 50க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தார் என ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.
இன்றைய செய்தித்தாள் கண்ணோட்டம் பகுதியில் இது குறித்து பிபிசி தமிழில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்த விவகாரத்தில் மேற்கொண்டு தகவல்களை தெரிந்துகொள்ள காவல்துறையை பிபிசி தமிழின் பிரமிளா கிருஷ்ணன் தொடர்புகொண்டார்.
அம்பத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் விஜயராகவனிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டபோது அறிவழகன் மீது பொருட்களை திருடியதாக மட்டுமே வழக்கு பதிவாகியுள்ளது என்றும் பாலியல் வன்புணர்வு வழக்கு எதுவும் பதிவாகவில்லை என்று கூறினார்.
''ஊடகங்களில் வெளியிட்ட செய்திகள் குறித்து நான் பேசமுடியாது. அதற்கான ஆதாரம் எங்களிடம் இல்லை. அறிவழகன் வீடுகளில் திருடியுள்ளார் என்பதை அவர் கூறிய தகவல்களின் அடிப்படையில் உறுதிசெய்துள்ளோம். திருடச் சென்ற சமயத்தில் பாலியல் வன்புணர்வு செய்தாரா என்ற விவரம் எதுவும் கிடைக்கவில்லை. அவரிடம் உள்ள செல்போனில் வீடியோ காட்சிகள் இருந்ததாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. நாங்கள் அதுபோல எந்த செல்போனையும் அவரிடம் இருந்து கைப்பற்றவில்லை,'' என்று விஜயராகவன் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- 34 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் எம் பி சஜ்ஜன்குமாருக்கு ஆயுள் தண்டனை
- காங்கிரசுடனான உறவு திமுகவின் அரசியல் சாதுர்யமா அல்லது அளவற்ற பதவி வெறியா?
- கஜ புயலால் வீழ்ந்த தென்னை மரங்களுக்கு 30ஆம் நாள் துக்கம் அனுசரிப்பு
- மூன்று வடகொரிய உயரதிகாரிகள் மீது அமெரிக்கா தடை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்