பசு பாதுகாப்பு கும்பலால் போலீஸ் கொலை: யார் பக்கம் பாஜக அரசு? பிபிசி கள ஆய்வு

புலந்த்ஷகர்

பட மூலாதாரம், Adnan Abidi/Reuters

யார் பக்கம் பாஜக அரசு? பிபிசி கள ஆய்வு

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷகரில் டிசம்பர் மாதம் மூன்றாம் தேதியன்று நடைபெற்ற பசுவதை, அதை தொடர்ந்து நடைபெற்ற வன்முறைகளில் காவல்துறை அதிகாரி சுபோத் குமார் சிங் மற்றும் வன்முறை கும்பலைச் சேர்ந்த யோகேஷ் ராஜ் என்பவரும் கொல்லப்பட்ட விவகாரத்தால் மாநில அரசியலில் கொந்தளிப்பு நிலவுகிறது. ஜஜம

அங்கு இப்போதைய நிலைமை என்ன என்பதை தெரிந்துக் கொள்ள மேற்கொள்ளப்பட்ட பிபிசியின் கள ஆய்வு இது.

"ஆப்கனில் அமெரிக்கா ராணுவத்தைத் திரும்பப்பெற்றால் 'நாசகர' தாக்கம் ஏற்படும்"

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆப்கானிஸ்தானிலிருந்து தனது நாட்டு ராணுவத்தை திரும்ப பெறுவதற்கு திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் இருக்கும் கிட்டத்தட்ட பாதி அமெரிக்க ராணுவ வீரர்கள், அதாவது 7,000 பேர் அடுத்த சில மாதங்களில் தங்களது நாட்டிற்கு திரும்பலாம் என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் கூறியதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரியாவிலிருந்து தனது ராணுவத்தை திரும்ப பெறுவதாக டிரம்ப் அறிவித்த ஒரே நாளில் இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தனது ராணுவத்தை திரும்ப பெறுவது 'நாசகர' தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், தாலிபான்கள் கொள்கைரீதியாக வெற்றிபெற்றுவதற்கு வித்திடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் கணினியை மத்திய அரசு கண்காணிக்க ஒத்துழைக்கவில்லையெனில் சிறை தண்டனை

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவிலுள்ள எந்தக் கணினியையும் ஆய்வு செய்து அதிலுள்ள தகவல்களை யாருடைய அனுமதியின்றி பயன்படுத்துவதற்கு 10 அரசு முகமைகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அரசின் இந்த உத்தரவின்படி, கணினிகளை நிர்வகிப்பவர்கள் அதை மத்திய அரசின் முகமைகள் கண்காணிப்பதற்கு ஒத்துழைப்பதற்கு மறுத்தால் அதிகபட்சம் ஏழாண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.

நாட்டின் அனைத்து கணினிகளிலும் வைக்கப்பட்டுள்ள தகவல்களை கண்காணிப்பதற்கும், ஆய்வு செய்வதற்கும் சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருவாய் நுண்ணறிவுப் பிரிவு உள்ளிட்ட 10 மத்திய முகமைகளுக்கு அதிகாரம் அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒருவேளை உணவுக்கே திண்டாடிய பெண் சாதனை நாயகியானது எப்படி?

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு,

செளபர்ணிகா

வாழ்க்கையில் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் சறுக்கி விழுந்தார் செளபர்ணிகா. சமூகம் அவரை ஏளனமாகப் பார்த்தது. ஆனால், விழுந்த ஒவ்வொரு அடியையும் தனக்கு சாதகமாக மாற்றும் மன உறுதியைப் பெற்றார். இப்போது, நவீன ஆடை வடிவமைப்பாளராக வாழ்க்கையில் உயர்ந்து நிற்கிறார்.

அது எப்படி சாத்தியமானது? பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார் செளபர்ணிகா.

பிளாஸ்டிக் தடை வந்தால் பல லட்சம் தமிழக தொழிலாளர்கள் வாழ்க்கை என்னவாகும்?

படக்குறிப்பு,

பிளாஸ்டிக் மறு சுழற்சி பணியில் ஈடுபடும் தொழிலாளி

2019 புத்தாண்டு தினத்தில் இருந்து தமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தித் தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கிறது தமிழக அரசு.

இதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமா? இதன் தாக்கங்கள் எப்படி இருக்கும்? யாரைப் பாதிக்கும்? எப்படி நன்மை பயக்கும்? என்று இத்தடையின் பல பக்கங்களையும் அலசும் வகையில் ஒரு கட்டுரைத் தொடரை தயாரிக்கிறது பிபிசி தமிழ். இத்தொடரின் முதல் கட்டுரை இது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :