தமிழகத்தின் கனவு திட்டங்களை கொண்டு வந்தது பாஜகதான் - நரேந்திர மோதி

மோதி

பட மூலாதாரம், Getty Images

நாளிதழ்களில் இன்று (திங்கள்கிழமை) வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே வாசகர்களுக்காக வழங்குகிறோம்

தினமணி: தமிழகத்தில் எய்ம்ஸை கொண்டு வந்துள்ளது பாஜக - நரேந்திர மோதி

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை போன்ற கனவுத் திட்டங்களை செயல்படுத்தியது மத்திய பாஜக அரசுதான் என பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார் என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மத்திய சென்னை, வடசென்னை, திருவள்ளூர், திருச்சி மற்றும் மதுரை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் பூத்கமிட்டி பொறுப்பாளர்களுடன், பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை காணொளிக் காட்சி முலம் கலந்துரையாடினார்.

மதுரையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் மூன்றாவது முறையாக நடைபெறும் இக்கலந்துரையாடல் நிகழ்ச்சியில், கட்சிப் பொறுப்பாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தும், வரும் மக்களவைத் தேர்தலுக்கு பாஜகவினரை தயார்படுத்தும் வகையிலும் பிரதமர் ஆலோசனைகளை வழங்கினார் என்கிறது அச்செய்தி.

காணொளி காட்சி மூலம் திரையில் தோன்றி, தமிழகம் வளர்ந்து வரும் வேளையில் அதிலுள்ள சவால்களை எப்படி எதிர்கொள்கிறது மத்திய அரசு என்ற கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பிரதமர், இதனை நாம் சவால்களாகப் பார்க்காமல் நல்ல வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். இந்தியா வேகமாக வளர்ந்து வரும் வேளையில் மக்களின் எதிர்ப்பார்ப்பும் வேகமாக வளர்ந்து வருகிறது. உலக அளவிலான ஆய்வு ஒன்றில் அடுத்த 20 ஆண்டுகளில் வேகமாக வளரும் முதல் 10 நகரங்கள் இந்தியாவில்தான் உள்ளன. அதில் தமிழகத்தில் 3 நகரங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார் மோதி என்று விவரிக்கிறது அந்த செய்தி.

தினமலர்

பட மூலாதாரம், Dinamani

கருத்தை திரும்பபெற மாட்டேன் - இந்து தமிழ்

தமிழகத்தில் கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றபோது உரையாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோதி ஒரு சேடிஸ்டை போல் செயல்படுகிறார் என்று தெரிவித்தார்.

இதற்கு பாஜகவின் தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று திமுக எம்எல்ஏ ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், மோதியை சேடிஸ்ட் என்று சொன்னதற்கு எதிர்ப்புகள் எழுந்தன ஆனால் அவர் ஒரு பிரதமராக சேடிஸ்டாகதான் செயல்படுகிறார் என்பதை மீண்டும் சொல்கிறேன் என தான் கூறியதை திரும்பவும் ஆமோதித்தார் ஸ்டாலின்.

மெல்போர்ன் டெஸ்ட் : ஜடேஜா இடம்பெற வாய்ப்பு - தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

பட மூலாதாரம், Mike Hewitt

வரும் 26-ஆம் தேதியன்று மெல்போர்னில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெறவுள்ள மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இடதுதோள்பட்டையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த ரவீந்திர ஜடேஜா இடம்பெற வாய்ப்புண்டு என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது குறித்த செய்தியை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

''இடதுதோள்பட்டை காயத்தில் இருந்து ஜடேஜா விடுபட்டுள்ளார். அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இடம்பெற வாய்ப்புண்டு'' என்று பிசிசிஐ வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியாவும், பெர்த்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவும் வென்றுள்ளன.

இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் நிலவுவதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி மேலும் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: