கடும் குளிரில் உறையும் காஷ்மீர் - மைனஸ் டிகிரியில் நடுங்கும் மக்கள்

காஷ்மீரில் கடும் குளிர்
படக்குறிப்பு,

கடும் பனியில் உறைந்த காஷ்மீர் ஏரிகள்

கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் கடும் குளிர் நிலவிவரும் நிலையில், காஷ்மீரில் தொடர்ந்து கடும் குளிர் காற்று வீசி வருகிறது.

ஓரிரு நாட்களுக்கு முன்பு காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகரில், கடந்த 28 ஆண்டுகளுக்கு பிறகு, மிக குளிர்ந்த இரவாக மைனஸ் 7.6 டிகிரி செல்ஸியஸ் வானிலை ஓரிரு நாட்களுக்கு முன்பு பதிவாகியுள்ளது.

ஸ்ரீநகரில் உள்ள ஏரிகள், நதிகள், ஓடைகள் போன்ற நீர் நிலைகள் பெரும்பாலும் தற்போது உறைந்துவிட்டன. இதனால் அங்கு மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

காஷ்மீரின் பால்கம் பகுதியில் மைனஸ் 8.3 டிகிரி செல்ஸியஸ் வானிலை பதிவாகியுள்ளது. அதேவேளையில் கார்கில் பகுதியில் மைனஸ் 16.2 டிகிரி செல்ஸியஸ் வானிலை பதிவாகியுள்ளது.

ஸ்ரீநகரில் உள்ள ஏரிகள் ஐஸ் கட்டிகளாக மாறிவிட்ட சூழலில், அது தங்கள் படகுகளை சேதப்படுத்தும் என்று படகு உரிமையாளர்கள் யாரும் தங்கள் படகுகளை ஏரியில் செலுத்துவதில்லை என்று கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: