நரேந்திர மோதி - அமித் ஷா கூட்டணிக்கு சிக்கல் கொடுக்கும் சிறு கட்சிகள் மற்றும் பிற செய்திகள்

பாஜக

பட மூலாதாரம், Getty Images

தோல்விக்கு பின் மாறும் பாஜகவின் அணுகுமுறை

இந்திய பேசும் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடந்தபின், தன் கூட்டணிக் கட்சிகளை பாஜக நடத்தும் விதம் பெரிய மாற்றத்தைச் சந்தித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர், தங்களை பழைய நிலையை மாற்றி கூட்டணி யுகத்துக்கு தயாராகி வருகின்றனர்.

என்ன ஆனாலும் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்கவே வாய்ப்பில்லை என்று இருந்த அவர்கள்,இருந்த அவர்கள், கூட்டணிக் கட்சிகள் மீது அவர்கள் மென்மையான அணுகுமுறையைக் கையாளவில்லை.

பட மூலாதாரம், Getty Images

முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றம்

முத்தலாக் முறையில் விவகாரத்து பெறுவதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் சட்ட மசோதா வியாழக்கிழமை இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இஸ்லாத்தின் பாரம்பரிய முறைப்படி, ஆண்கள் தங்கள் மனைவியிடம் மின்னஞ்சல், வாய்மொழி அல்லது எந்த வடிவத்திலும் மூன்று முறை "தலாக்" கூறினால் விவாகரத்து ஆகிவிட்டது என அர்த்தம். இந்த சட்ட மசோதாவின்படி முத்தலாக் முறையில் விவாகரத்து அளித்தால் கணவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை வழங்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images

இனி தள்ளுபடியே கிடைக்காதா?

அமேசான், பிளிப்கார்ட் போன்ற இணையதள வணிக நிறுவனங்களின் கவர்ந்தெழுக்கும் வணிக முறையை தடை செய்யும் வகையில் பல கட்டுப்பாடுகளை விதித்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இணையதள வர்த்தக நிறுவனங்கள், அதாவது அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் தாங்களோ அல்லது தங்களது துணை நிறுவனங்களோ பங்கு வைத்துள்ள விற்பனையாளர்களிடமிருந்து பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும்.

தாய்லாந்து குகையின் இன்றைய நிலை

தாய்லாந்தின் குகையொன்றில் ஒரு சிறுவர் கால்பந்து அணியும் அதன் பயிற்சியாளரும் சிக்கிக்கொண்டதும் அவர்கள் வெற்றிகரமாக மீட்டெடுக்கப்ட்டதும் இந்த ஆண்டின் அதிமுக்கிய நிகழ்வுகளில் ஒன்று .

பிபிசியின் தென்கிழக்கு ஆசிய செய்தியாளர் ஜோனாதன் ஹெட், கடந்த ஜூலை மாதம் வைல்ட் போர் கால்பந்தாட்ட அணி வீரர்கள் சிக்கிக்கொண்ட வடக்கு தாய்லாந்தின் மா சய் மாவட்டத்துக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார். ஜோனாதன் தற்போது அங்குள்ள அங்குள்ள நிலைமை குறித்து விவரிக்கிறார்.

தாம் லுவாங் மலை குகைதான் இந்த ஆண்டு உலகிலேயே அதிகளவில் செய்திகளில் இடம் பிடித்த ஓர் இடமாக இருக்கிறது. இந்த ஆண்டின் ஜூன் ஜூலை மாதங்களில் 12 இளம் கால்பந்து வீரர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்கள் மரணத்தின் விளிம்பில் இருந்த நிலையில் அவர்களின் விதி மாறியது.

பட மூலாதாரம், SHEIKHA LATIFA

காணாமல் போன துபாய் இளவரசி

முன்னாள் ஐ.நா மனித உரிமை செயலாளர் மேரி ராபின்சன் துபாய் இளவரசி விவகாரத்தில் துபாயின் கருத்தை அப்படியே வழிமொழிந்திருக்கிறார்.

அமீரக அரசர் ஆட்சியாளர் ஷேக் மொஹமத் பின் ராஷித் அல் மக்டூமின் மகள் ஷேய்கா லத்தீஃபா சுதந்திரமான வாழ்க்கை ஒன்றை வாழ்வதற்காக துபாயிலிருந்து தப்பி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

ஆனால், மார்ச் மாதம் லத்தீஃபா பயணம் செய்த ஆடம்பரப் படகு இந்தியா அருகே தடுத்து நிறுத்தப்பட்டு, அவர் மீண்டும் துபாய் திருப்பி அனுப்பப்பட்டதாக நேரில் பார்த்த சிலர் கூறுகின்றனர். அப்போதில் இருந்தே அவரைக் காணவில்லை.

பிபிசி ரேடியோ 4 நிகழ்ச்சியில் பேசிய மேரி, "இளவரசியுடன் நான் உணவு உண்டேன். அவர் அனைவரும் விரும்பத்தக்கப் பெண். அனால், அவர் குழப்பமான மனநிலையில் இருக்கிறார். அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. அதனை இப்போது பெற்றுக் கொண்டும் இருக்கிறார் ," என்று கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: