பெங்களூரு செல்வாரா 240 டன் எடை உள்ள கோதண்டராமர்?

பெங்களூரு செல்வாரா 240 டன் எடை உள்ள கோதண்டராமர்?

வந்தவாசி கொரக்கோட்டையிலிருந்து லாரி மூலம் பெங்களூரு கொண்டு செல்லப்படும் பிரம்மாண்டமான பெருமாள் சிலை செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் நிற்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை மலைப்பகுதியில் 64 அடி உயரமுள்ள பெருமாள் சிலை உருவாக்கப்பட்டது.

240 டன் எடை உள்ள இந்த சிலை நூற்றுக்கணக்கான டயர்கள் கொண்ட மிகப்பெரிய ட்ரக்கில் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

சிலையின் பாரம் தாங்காததால் டயர்கள் வெடித்தன.

பின் அவை சரிசெய்யப்பட்டு ஒரு நாளுக்கு 100 மீட்டர்கள் என்ற வேகத்தில் நகர்ந்து சென்றது.

செஞ்சிக்கோட்டை வழியாக இந்த சிலையை எடுத்து செல்ல திட்டமிடப்பட்டது.

இங்கு இருபுறமும் மதில் சுவர்கள் இருப்பதால் அவ்வழியாக எடுத்துச் செல்ல கோட்டை சுற்றுச்சுவரை இடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து சிலையின் அகலம் குறைக்கப்பட்டது.

இருந்தபோதிலும் இதற்கு தொல்லியல் துறையினர் அனுமதி வழங்கவில்லை.

மாற்று பாதையில், சேத்துப்பட்டு வழியாக இந்த சிலையை எடுத்து செல்ல திட்டமிட்டனர். ஆனால், அங்குள்ள குறுகிய பாலத்தால் தொடர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் மஸ்தான், சிலையை மாற்று பாதையில் எடுத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறுகிறார்.

பெருமாள் சிலை எடுத்து செல்லும் ட்ரக்கர் நிற்கும் செஞ்சி சங்கராபரணி பாலம் உள்ள பகுதி, திருவிழா கோலம் பூண்டுள்ளது.

பல கிலோமீட்டர்களிலிருந்து வந்த பக்தர்கள் பெருமாள் சிலையை தரிசனம் செய்ய மக்கள் வருகிறார்கள்.

செஞ்சி பகுதியைச் சேர்ந்த சிற்பி ரமேஷ், சிலையை எடையை குறைத்தால், சிலையில் வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறுகிறார்.

(பிபிசி தமிழ் செய்தியாளர் மு. நியாஸ் அகமது இந்த காணொளியை தயாரித்துள்ளார்)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: