கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி: ரத்த தானம் செய்த நபர் உயிரிழப்பு

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி: ரத்த தானம் செய்த நபர் உயிரிழப்பு

பட மூலாதாரம், China Photos

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அரசு மருத்துவமனையில் பரிசோதிக்காத ரத்தம் செலுத்தப்பட்டதால் கர்ப்பிணி ஒருவருக்கு எச்.ஐ.வி.தொற்று ஏற்பட்ட விவகாரம் அண்மையில் தமிழ்நாட்டை உலுக்கியது.

இந்த சம்பவத்தில் ரத்த தானம் செய்த நபர் தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்ற நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்தார்.

முன்னதாக, சாத்தூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின் மனைவிக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்தம் செலுத்தப்பட்ட சில தினங்களுக்குப் பிறகு, ரத்தம் கொடுத்த நபர் தாமாக முன்வந்து தனக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரியவந்தது என்று அறிவித்தார்.

மேலும் தன்னுடைய ரத்தம் யாருக்கு செலுத்தப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள முற்பட்டபோது, எட்டு மாத கர்ப்பிணி ஒருவருக்கு செலுத்தப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது என தகவல்கள் வெளியானது.

பட மூலாதாரம், SHAMMI MEHRA

ரத்தம் தானம் செய்த வாலிபர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சேர்ந்தவர். அவர் சிவகாசியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார் இவர் ரத்ததானம் கொடுப்பதை வழக்கமாக செய்து வந்தார்

இந்நிலையில் அப்போது சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 30ஆம் தேதி ரத்த தானம் செய்துள்ளார் இதனை தொடர்ந்து வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக தனியார் மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை செய்யும்போது எச்ஐவி நோய் இருப்பதாக தெரிய வந்தது.

இதனை கண்ட அவர் பெரும் அதிர்ச்சி அடைந்த வாலிபர் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று எனக்கு எச்ஐவி இருப்பதாகவும் இங்கே ரத்ததானம் செய்து வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்ததை தொடர்ந்து அந்த ரத்தம் ஒரு கர்ப்பிணிப் பெண்ணிற்கு செலுத்தியதாக தெரியவந்தது.

தன்னால் ஒரு கர்ப்பிணி பெண்ணிற்கு கொடுமையான நோய் பரவுவதை தாங்க முடியாமல் அந்த வாலிபர் எலி மருந்தை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அந்நபர் முதல் சிகிச்சை பெற்று வந்தார் பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தன்னால் கர்ப்பிணிக்கு நோய் பரவுவதை தாங்கமுடியாமல் அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள மறுத்துள்ளதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர்

தொடர்ந்து இருபத்து நாலு மணி நேரமும் மருத்துவரின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் அவருடைய உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: