பிளாஸ்டிக் மீதான போர்: களமிறங்கும் காகிதப்பை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிளாஸ்டிக் மீதான போர்: களமிறங்கும் காகிதப்பை

(2019 புத்தாண்டு தினத்தில் இருந்து தமிழ்நாட்டில் ஒருமுறை பயன்படுத்தித் தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கிறது தமிழக அரசு. இதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமா? இதன் தாக்கங்கள் எப்படி இருக்கும்? யாரைப் பாதிக்கும்? எப்படி நன்மை பயக்கும்? என்று இத்தடையின் பல பக்கங்களையும் அலசும் வகையில் ஒரு கட்டுரைத் தொடரை தயாரிக்கிறார் பிபிசி தமிழ் செய்தியாளர் பிரசாந்த். இத்தொடரின் அடுத்த பகுதி இது.)

மதுரை அருகே கடச்சனேந்தல் பகுதியில் அமைந்துள்ள ஒர் அழகிய குடிலில் சுற்றுச்சூழலை பாதுகாக்க சிறு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மனவளர்ச்சியில் மாற்றம் கொண்ட பெண்கள் காகிதப்பைகளை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரையில் இயங்கிவரும் பூமிகா மையத்தை சேர்ந்த இவர்கள் பழைய நாளிதழ்களை, பயன்படுத்தும் பைகளாக மாற்றுகின்றனர்.

Image caption பூமிகா மையம் - மதுரை

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும், மனதளவில் மாற்றம் கொண்ட இந்த பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவும் சமூகம் சார்ந்த இந்தப் பணியை மேற்கொள்வதாக கூறுகிறார் பூமிகா மையத்தின் நிறுவனர் ஜீனா.

Image caption ஜீனா - பூமிகா மையம்

மனவளர்ச்சியில் மாற்றம் கொண்ட பெண்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் ஆதரவுக் கரமாக இந்த மையம் செயல்பட்டு வருகிறது.

காகிதப்பைகள் மட்டுமல்லாமல் இயற்கையில் இருந்து கிடைக்கும் பொருட்களின் மூலம் துணிகளுக்கு இயற்கை சாயமேற்றும் பணியும் இங்கு நடைபெறுகிறது.

Image caption இயற்கை முறையில் சாயமேற்றும் பணி

இதேவேளையில் இந்த பெண்களின் வாழ்விலும் ஒரு மாற்றத்தை உண்டாக்க சமூகத்தின் அரவணைப்பு தேவை என்பதே இவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: