மொச்சைகொட்டை குலாப் ஜாமூன், ஐஸ் கிரீம் - விவசாயிகளுக்கு கைகொடுக்கும் கீதா சிவக்குமார்

மொச்சைகொட்டை குலாப் ஜாமூன், ஐஸ் கிரீம் - விவசாயிகளுக்கு கைகொடுக்கும் கீதா சிவக்குமார்

பெங்களூருவில் உள்ள வி வி புரத்தில் ஆண்டுதோறும் மொச்சைக்கொட்டை பயிரிடும் விவசாயிகள் பங்குபெறும் அவரைப்பேலு மேளா டிசம்பர் - ஜனவரி மாதங்களில் நடப்பது வழக்கம்.

தற்போது, 19ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவில், மொச்சக்கொட்டையை வைத்து தயாரிக்கப்படும் உணவு வகைகள் பிரமிப்பை உண்டாக்குகிறது.

மொச்சைகொட்டை தோசை, குலாப் ஜாமூன், ஜிலேபி, ஐஸ் கிரீம் என பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்.

சுமார் 20 டன் மொச்சைக்கொட்டை பெங்களூருக்கு அருகில் இருக்கும் கிராமங்களில் இருந்து வருகிறது.

இந்த விழா மூலம் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து இருக்கிறார்கள்.

இந்த விழா துவங்குவதற்கு முன்பு விவசாயிகள் பெங்களூருவில் உள்ள பல பகுதிகளுக்கு சென்று விற்க முயற்சிப்பார்கள். எல்லா மொச்சையும் விற்கப்படுமா ? நல்ல விலை கிடைக்குமா? என்பதெல்லாம் கேள்விக்குறியாகதான் இருந்தது.

இந்த விழா துவங்கியதற்கு பிறகு, விவசாய பயிருக்கு நல்ல வரவேற்பும், விலையும் கிடைத்திருப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

உணவை விரும்பும் பெங்களூரு மக்களிடம் இந்த விழாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த விழாவிற்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது.

இந்த ஆண்டு மட்டும் சுமார் 5 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தயாரிப்பு: சாய் சுதா, பெங்களூரூ

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: