பள்ளி மாணவிகளை விபசாரத்தில்தள்ளிய வழக்கு, 16 பேர் குற்றவாளிகள் - விரிவான தகவல்

சித்தரிப்புப் படம் படத்தின் காப்புரிமை Getty Images

நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே வாசகர்களுக்காக வழங்குகிறோம்.

தினத்தந்தி: '2 பள்ளி மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய மதபோதகர்கள் '

பள்ளி மாணவிகள் இருவரை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகர் உள்பட 16 பேர் குற்றவாளிகள் என்று கடலூர் மகளிர் கோர்ட்டு நேற்று பரபரப்பான தீர்ப்பு வழங்கியது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2014-ம் ஆண்டு 7-ம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவியும், 8-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவி இருவரையும் பலர் கட்டாயப்படுத்தி பாலியல் வல்லுறவு செய்துள்ளனர்.

அதில் திட்டக்குடியைச் சேர்ந்த மதபோதகர் அருள்தாஸ் என்பவரும் ஒருவர்.

பல நாட்கள் இந்த கொடுமையை அனுபவித்த அந்த மாணவிகள், ஒருநாள் இரவில் மாணவிகள் இருவரும் அங்கிருந்து தப்பி திட்டக்குடிக்கு சென்று போலீசில் தங்களுக்கு நேர்ந்த கொடுமை பற்றி தெரிவித்தனர்.

இது தொடர்பாக 10 பெண்கள் உள்பட 19 பேர் மீதும் 'போக்சோ' சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே இந்த வழக் கின் விசாரணையில் தொய்வு ஏற்பட்டதால் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று 14 வயது மாணவியின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் 'ரிட்' மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த 4-7-2016 அன்றைய தேதி இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து சி.பி. சி.ஐ.டி. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லாவண்யா மேற்பார்வையில் கடலூர் காவல் ஆய்வாளர் தீபா விசாரணை நடத்தி 19 பேர் மீதும் கடலூர் மகளிர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணை கடலூர் மகளிர் கோர்ட்டில் நீதிபதி லிங்கேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட இரு மாணவிகளும் கோர்ட்டில் ஆஜராகி 17 பேரையும் அடையாளம் காட்டினார்கள். மேலும் சிறைச்சாலையில் நடந்த அடையாள அணி வகுப்பிலும் இரு மாணவிகளும் 17 பேரையும் அடையாளம் காட்டினார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த வழக்கில் இருவர் தலைமறைவாக உள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை நடைபெறும் போது, பாதிக்கப்பட்ட இரு மாணவிகளும் பாதுகாப்பு கருதி சென்னையில் உள்ள காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களில் ஒரு மாணவி மேல்படிப்பு படிக்கிறார்.

எனவே இரு மாணவிகளுக் கும் அரசு சார்பில் இடைக்கால நிவாரணம் வழங்கக்கோரி அரசு வக்கீல் க.செல்வபிரியா கடலூர் மகளிர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி லிங்கஸ்வேரன் இரு மாணவிகளுக்கும் இடைக்கால நிவாரணமாக தலா 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் 17 பேரும் நேற்று கடலூர் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கில் ஒருவரை மட்டும் விடுதலை செய்து, மதபோதகர் அருள்தாஸ் உள்பட மற்ற 16 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

இவர்களுக்கான தண்டனை விவரம் வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என்று நீதிபதி லிங்கேஸ்வரன் அறிவித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் க.செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.

- இவ்வாறாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.இந்து தமிழ்: 'பாஜக அல்லாத மாநில கட்சிகளுடன் அதிமுக கூட்டணி'

திருவாரூர் இடைத்தேர்தல், அடுத்து வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் என தமிழக அரசியல் களம் தேர்தலை நோக்கி பயணித்து வருவதால், அரசியல் கட்சிகளின் அணி சேர்தல், அணி மாற்றம் போன்ற காட்சிகள் அரங்கேறத் தொடங்கியுள்ளன.

திமுக கூட்டணி ஓரளவு வடிவம் பெற்றுவரும் நிலையில், எந்த அணியிலும் சேராமல் உள்ள கட்சிகள் என்ன செய்யப் போகின்றன என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் ஒலிக்கத் தொடங்கி உள்ளது.

குறிப்பாக, பாமக, தேமுதிக, தமாகா போன்ற கட்சிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

'மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பாமக மக்களவையிலும் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர்ந்துதான் மக்களவைத் தேர்தலுக்கான உத்திகளை வகுத்து வருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதற்காக ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைப்போம்' என பாமகவின் புத்தாண்டு சிறப்புப் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. அதே நேரம் அதிமுகவுக்கு சாதகமாகவும், பாஜகவை சாடியும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

மேலும் கல்வி, மருத்துவம் தவிர்த்து எப்போதும் இலவசங்களை எதிர்க்கும் பாமக பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர் களுக்கு ஆயிரம் ரூபாய் வழங் கப்படும் என்ற ஆளுநரின் அறிவிப்பை விமர்சனம் செய் யாமல் இருப்பது கூட்டணிக் கான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி பாமக தலைமை யில் நெருக்கமாக உள்ள நிர்வாகிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது, 'மக்களின் எண்ணங்களை அறிந்து, அதற்கேற்ப கூட்டணி அமைப்பதே பாமகவின் தாரக மந்திரம். கட்சியின் சமூக ஊடகப் பிரிவினர் களம் கண்டு கொடுத்த அறிக்கையில் ஆளும் கட்சியான அதிமுகவுக்கு எதிர்ப்பு இல்லை. திமுகவுக்கு சாதகமாகவும் சூழ்நிலை இல்லை என்று தெரிவித்துள்ளனர். பாஜக மீது மக்கள் ஜிஎஸ்டி விவகாரத் தில் கடும் கோபத்தில் உள் ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள் ளது.

மேலும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால், அதை சட்டசபை தேர்தல் வரை கொண்டு செல்ல முடியும். அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும்படி பேரம் பேசவும் வாய்ப்பு வரலாம். திமுகவின் கூட்டணி பற்றி பேசினால் இந்த கோரிக்கை எடுபடாது.

தேமுதிகவை கூட்டணியில் கொண்டு வரும் முயற்சியும் நடை பெற்று வருகிறது. விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பேச்சுவார்த்தை முடிவுக்கு வருவதற்கு காலதாமதமாகிறது. பாஜக கூட்டணியில் இருந்தால் சிறுபான்மை வாக்குகளை இழக்க நேரிடும், மேலும் தமிழகத்தில் பாஜகவுக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வாக்கு வங்கியும் இல்லை.

பாஜக அல்லாத சில தமிழக கட்சிகளுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலையும், அடுத்து வர உள்ள சட்டமன்றத் தேர்தலையும் எதிர்கொள்வது குறித்து அதிமுகவின் மூத்த அமைச்சர்களுடன் பேசப்பட்டு வருகிறது' என்று தெரிவித் தனர்.

- இவ்வாறாக விவரிக்கிறது அந்நாளிதழ்.


தினமணி: 'வேலையின்மை பிரச்சனையை நாடு எதிர்கொண்டுள்ளது: நிதின் கட்கரி'

வேலையின்மை என்ற பெரிய பிரச்சனையை நமது நாடு எதிர்கொண்டுள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார் என்கிறது தினமணி நாளிதழ்.

படத்தின் காப்புரிமை Getty Images

"காலியாக உள்ள பணியிடங்களில் உரிய நபர்களை நியமிப்பது என்பது வேறு, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது வேறு என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த நான்கரை ஆண்டுகளில் இளைஞர்களுக்கு கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக மத்திய அரசு கூறி வரும் நிலையில், மத்திய அமைச்சர் ஒருவர் இவ்வாறு பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் நடைபெற்ற மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்து, காங்கிரஸிடம் ஆட்சியை இழந்தது. இது குறித்து, கருத்துத் தெரிவித்த கட்கரி, வெற்றிக்கு மட்டுமல்ல; தோல்விகளுக்கும் தலைமை பதவியில் இருப்பவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியதாக தகவல் வெளியானது. ஆனால், இதனை கட்கரி மறுத்தார். தனது கருத்தை ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் திரித்து கூறுவதாகவும், பிரதமர் மோடி தலைமையில், அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலை பாஜக சந்திக்கும். தலைமை பதவி போட்டியில் நான் இல்லை என்றும் கூறினார்.

இந்நிலையில், நாகபுரியில் (நாக்பூர்) வெள்ளிக்கிழமை நடைபெற்ற இளைஞர் மேம்பாட்டு மாநாட்டில் பங்கேற்ற அவர் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்து பேசியதாவது:

இப்போது நமது நாட்டில் நமக்கு முன்பு உள்ள, தீர்க்கப்பட வேண்டிய மிகமுக்கியமான பிரச்னை வேலையின்மை. பணிநியமனம் என்பதை அனைவருக்கும் வழங்கிவிட முடியாது. வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது வேறு, காலியாக உள்ள பணியிடங்களில் ஆள்கள் நியமிப்பது என்பது வேறு. வேலைவாய்ப்பு உருவாக்கும் என்பது அனைத்து அரசுகளின் முக்கியக் கொள்கையாக உள்ளது. நமது நாட்டில் நகர்புறம் மற்றும் கிராமப்புற மக்களுக்கு எவ்வாறு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவது என்பதை நாம் தொடர்ந்து சிந்திக்க வேண்டும்.

நாகபுரியைச் சேர்ந்த நானும், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸும் நமது விதர்பா பகுதியில் முக்கியமாக நாகபுரியில் எவ்வாறு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பதை சிந்தித்து, பல திட்டங்களை இங்கு கொண்டு வந்துள்ளோம். இங்கு சர்வதேச சரக்கு முனையம் மற்றும் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

தகவல்தொழில்நுட்ப பூங்கா, மெட்ரோ ரயில் பணிகள் மூலம் அனைத்துத தரப்பினருக்கும் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இப்போது 27 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. அடுத்த ஆண்டு இறுதியில் இது 50 ஆயிரமாக அதிகரிக்கும். அதிகமான மக்கள் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றும்போதுதான், நாட்டின் உற்பத்தி உச்சத்தை எட்டும் என்பது மகாத்மா காந்தியின் வாக்கு. அதன்படி நாம் செயல்பட வேண்டும்" என்று கட்கரி பேசியதாக செய்தி வெளியிட்டுள்ளது அந்நாளிதழ்.


படத்தின் காப்புரிமை இந்து தமிழ்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - சபரிமலைக்கு சென்றார் இன்னொரு பெண்

இலங்கையைச் சேர்ந்த 47 வயதாகும் சசிகலா எனும் பெண் சபரிமலை கோயிலுக்குள் சென்று வழிபட்டதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

முன்னதாக, தனது கணவர் சரவணமாறன் மற்றும் மகனுடன் சபரிமலை சென்றடைந்த தாம் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படவில்லை என, வெள்ளியன்று காலை, சசிகலா தெரிவித்திருந்தார்.

தமக்கு செய்யப்பட்ட கருப்பை நீக்க அறுவைசிகிச்சை குறித்த மருத்துவ ஆவணங்களை அவர் காவல் துறையினரிடம் காட்டியுள்ளார் என் அந்நாளிதழின் கேரள பதிப்பு தெரிவிக்கிறது.

அவர் மாதவிடாய் நின்றுவிட்ட பெண் என்பதால் கோயிலைத் தூய்மைப்படுத்தும் சடங்குகள் மேற்கொள்ளப்படத் தேவையில்லை என தந்திரிகள் அமைப்பு கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: