ஹம்பி: வீழ்ந்த பேரரசின் கதையை சொல்லும் கற்குவியல்கள் - சுற்றுலா பட்டியலில் 2ஆம் இடம்

`ஹம்பி`- நிஜ பாகுபலி நகரம்: வீழ்ந்த ஒரு பேரரசின் கதை படத்தின் காப்புரிமை M Niyas Ahmed

சுற்றுலா செல்ல விரும்புவோர் 2019ஆம் ஆண்டு செல்ல வேண்டிய 52 இடங்களை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் பட்டியலிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை M Niyas Ahmed

அதில் இந்தியாவிலிருந்து கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 'ஹம்பி' இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

படத்தின் காப்புரிமை M Niyas Ahmed

14-ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவை ஆண்ட விஜய நகர பேரரசின் தலைநகராக ஹம்பி இருந்தது. 41.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள இந்த நகரம் துங்கபத்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நகரத்திற்கு அண்மையில் பிபிசி தமிழ் செய்தியாளர் மு. நியாஸ் அகமது சென்று புகைப்படங்கள் எடுத்தார். அந்த புகைப்படங்களை இங்கே பகிர்கிறோம்.

படத்தின் காப்புரிமை M Niyas AHmed

ஹம்பியின் பேரழகு

ஹம்பியின் பேரழகை ஒரே ஒரு காட்சியில் தரிசிக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால் அங்குள்ள மண்டகா மலைக்கு ஏறுங்கள். முழு நிலப்பரப்பின் தரிசனம் நமக்கு அங்கிருந்து கிடைக்கும். அதுவும் சூரியன் உதிக்கும் நேரத்தில் அந்த சிறு மலையேறினால் மஞ்சள் பூசிய ஒளி ஒருவிதமான உணர்வை நமக்குள் கடத்தும். மலையேறுவதும் அவ்வளவு சிரமமாக இருக்காது கற்படிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் காப்புரிமை M Niyas Ahmed
படத்தின் காப்புரிமை M Niyas Ahmed

துங்கபத்ரா

அங்கிருந்து இறங்கி சிறிது நேரம் பயணித்தால் துங்கபத்ரா நதியினை காணலாம். இரு கரைகளை தொட்டு எதையோ அடைந்துவிட வேண்டுமென்ற உத்வேகத்தில் பயணிக்கும் இந்த நதியில்தான் ஹம்பியில் அமைந்துள்ள கோயில்களின் யானைகள் தினமும் நீராடுகின்றன.

படத்தின் காப்புரிமை M Niyas Ahmed

950 மீட்டர் நீளமுடைய சந்தை, 30 சதுர மீட்டர் அளவுடைய ராணிகளின் குளியலறை, பிரம்மாண்ட அரண்மனையின் எச்சம் என அந்த நகரம் பார்க்க பார்கக வியப்பிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்துகிறது.

படத்தின் காப்புரிமை M Niyas Ahmed

வீழ்ந்த பேரரசு

அந்த நகரத்தில் எங்கும் நிறைந்திருக்கும் எச்சங்களும், மிச்சங்களும் ஒரு வீழ்ந்த பேரரசின் கதையை நம்மிடம் மெளனமாக சொல்கிறது.

படத்தின் காப்புரிமை M Niyas Ahmed

நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் பட்டியலில் கரிபியன் தீவில் உள்ள போர்ட்டோ ரிக்கோ முதல் இடத்தை பிடித்துள்ளது.

படத்தின் காப்புரிமை M Niyas Ahmed
படத்தின் காப்புரிமை M Niyas Ahmed
படத்தின் காப்புரிமை M Niyas Ahmed
படத்தின் காப்புரிமை M Niyas Ahmed
படத்தின் காப்புரிமை M Niyas Ahmed
படத்தின் காப்புரிமை M Niyas Ahmed
படத்தின் காப்புரிமை M Niyas Ahmed
படத்தின் காப்புரிமை M Niyas Ahmed
படத்தின் காப்புரிமை M Niyas Ahmed
படத்தின் காப்புரிமை M Niyas Ahmed

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: