சபரிமலை: மீண்டும் பெண்களை தடுத்து நிறுத்திய பக்தர்கள்

நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகின்றோம்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - சபரிமலையில் 2 பெண்கள் நுழைவதை தடுத்த பக்தர்கள்

படத்தின் காப்புரிமை Google

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நுழைவதற்கு சென்ற கண்ணுரை சேர்ந்த ரேஷ்மா நிஷாந்த் மற்றும் கொல்லத்தை சேர்ந்த ஷானிலா ஆகியோர் நீலிமலையில் வைத்து புதன்கிழமை அதிகாலையில் பக்தர்களால் தடுக்கப்பட்டதாக த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதிகாலை சுமார் 4 மணிக்கு பம்பா வந்த அவர்கள், காவல்துறையின் உதவியோடு சபரிமலைக்கு பயணத்தை தொடங்கினர்.

நீலமலை பகுதியில் வந்தபோது, சபரிமலையில் இருந்து திரும்பி வந்த 2 பக்தர்களால் அவர்கள் தடுக்கப்பட்டதாக த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப்படையினர்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு 30 பேர் கொண்ட இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப்படையினர் முதல்முறையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் இன்று வியாழக்கிழமை நடைபெறுகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்காக விரிவான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், விழாக் குழுவினரும் செய்து வருகின்றனர்.

பார்வையாளர் மாடம், காளைகள் வெளியேறும் பகுதிகளில் தேங்காய் நார் பரப்புவது, காளைகள் சேகரிப்பு மையம், சுகாதாரத் துறை, கால்நடை மருத்துவத் துறை சார்பில் அமைக்கப்படும் மருத்துவ முகாம்கள் ஆகியவற்றுக்கான பணிகள் நடைபெற்று வருவதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்து தமிழ் - காணும் பொங்கலின்போது போக்குவரத்து மாற்றம்

படத்தின் காப்புரிமை Getty Images

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரைக்கு வருவோர் அல்லது கடற்கரை சாலை வழியாக அடையாறு நோக்கி அல்லது பாரிமுனை நோக்கி செல்வோர் கவனத்திற்காக போக்குவரத்து மாற்றம் குறித்து போலீஸார் தெரிவித்துள்ளதாக தமிழ் இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

காமராஜர் சாலையில் பொதுமக்கள் சாலையில் முழுவதுமாக நிரம்பும் வரை எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படாது என்று காவல்துறையின் அறிவிப்பையும் வெளியிட்டு, போக்குவரததில் மாற்றங்கள் ஏற்படும் இடங்களையும் இந்த நாளிதழ் வெளியிட்டுள்ளது.

தினமலர் - உலக தர வரிசையில் இந்தியாவின் 25 பல்கலைக்கழகங்கள்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

உலகளவில் சிறந்த பல்கலைக் கழகங்களுக்கான தர வரிசை பட்டியலில், நம் நாட்டைச் சேர்ந்த, 25 பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றுள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. .

பிரிட்டனின் லண்டனில் உள்ள, 'டைம்ஸ் ஹையர் எஜுகேஷன் எமர்ஜிங் எகானமீஸ்' என்ற சர்வதேச நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள, 43 நாடுகளைச் சேர்ந்த, 450 பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான பட்டியலில், மிகச் சிறந்த, 200 பல்கலைக் கழகங்கள் வரிசையில், சீன பல்கலைக்கழகங்கள், முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன. நம் நாட்டைச் சேர்ந்த, 25 பல்கலைக் கழகங்கள், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

பெங்களூரில் இருக்கும், இந்திய அறிவியல் கழகம், 14வது இடத்தையும், மும்பை, ஐ.ஐ.டி., 27வது இடத்தையும் பெற்றுள்ளன.

மத்திய பிரதேச மாநிலம், இந்துாரில் உள்ள, ஐ.ஐ.டி., 61வது இடத்திலும், 'ஜே.எஸ்.எஸ்., அகாடமி ஆப் ஹையர் எஜுகேஷன் அண்டு ரிசர்ச்' நிறுவனம், 64வது இடத்திலும் உள்ளன. ரூர்க்கி, ஐ.ஐ.டி., 'டாப்' - 40ல், 35வது இடத்தில் உள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :