பெண்களின் கன்னித்தன்மையை சீலிடப்பட்ட பாட்டிலுடன் ஒப்பிட்ட பேராசிரியர்

போராட்டம் நடத்தும் பெண்கள் படத்தின் காப்புரிமை AFP

இந்தியாவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்பிக்கும் பேராசிரியர் ஒருவருக்கு, பெண்களின் கன்னித்தன்மை பற்றி மாணவர்களிடம் விழிப்புணர்வு இல்லை என்பது கவலைக்குரியதாகியுள்ளது.

சமூக நன்மதிப்புகள் பற்றி கற்றுத் தருவதைப் போல ஃபேஸ்புக் அவர் எழுதியுள்ளார். பெண்களின் கன்னித்தன்மை பற்றி பையன்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ``கன்னிப் பெண்கள் சீலிட்ட பாட்டில்களைப் போன்றவர்கள். குளிர்பான பாட்டில் ஒன்றையோ அல்லது பிஸ்கட் பாக்கெட்டையோ சீல் உடைந்திருந்தால் நீங்கள் வாங்குவீர்களா?'' என்று பதிவில் அவர் கேட்டுள்ளார்.

இதில் பெரிய ஆச்சர்யம் இல்லை. பெண்களை ஏதாவது பொருளுடன் ஒப்பிடுவது, தங்களுக்குப் பிடித்த பொருட்களுடன் அவர்களை ஒப்பிடுவது என்பது பழைய பாணிதான். பெண்கள் மேலும் மேலும் விமர்சனத்துக்கு ஆளாகின்றனர்.

இளம் பெண்கள் மீது ஆசை கொள்வதைப் போல, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் மீது ஆண்கள் ஆசைப்படுகிறார்கள் என்று சில நேரங்களில் விளம்பரங்களில் காட்டப்படுகிறது. சில நேரங்களில் பீர் பாட்டில்களின் வளைவுகள் பெண்களின் உடலுடன் ஒப்பிட்டுக் காட்டப்படுகின்றன.

இப்போதும் கூட பொருளுடன் ஒப்பிடுதல், பாலியல் ரீதியாக ஒப்பிடுதல்தான் பிரச்சனை. குளிர்பான பாட்டிலின் அல்லது பிஸ்கட் பாக்கெட்டின் வடிவம் குறித்து இங்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. அதற்கு மாறாக, பாக்கெட் `சீலிடப்பட்டு' இருக்கிறது, அதனால் `சுத்தமானது' என்று சொல்லப்பட்டிருக்கிறது.

பேராசிரியரின் கருத்தின்படி பிறப்பில் இருந்து ஒரு பெண் சீலிடப்பட்டிருக்கிறாள், சீல் திறக்கப்படும் வரை அப்படியே இருக்கிறாள், கன்னித்தன்மையுடன் உள்ள மனைவி ஒரு `தேவதை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பெண்ணின் அடக்கம் மற்றும் ஆசை ஒரு பாட்டிலில் சீல் வைக்கப்பட்டதைப் போல என்று சொல்வது சரிதான். அதை உடைத்தால் எந்த ஜின் வெளியே வரும் என்று யாருக்குத் தெரியும்?

கன்னித்தன்மை பரிசோதனை

பதற்றம் அடைய வேண்டாம். திருமணத்துக்கு முன்பு உடலுறவை நான் ஆதரிக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். இதில் தொடர்புடைய ஆண் மற்றும் பெண்ணின் உரிமை மற்றும் விருப்பத்தைப் பொருத்தது அது.

சமூக மாண்புகள் குறித்த இந்த எச்சரிக்கை இப்போது தளர்வடைந்துவிட்டது என்பதைத்தான் நான் சுட்டிக் காட்டுகிறேன்.

பெண்கள் தங்களுடைய விருப்பங்களை தாராளமாக வெளிப்படுத்தி, பூர்த்தி செய்து கொள்ளக்கூடும் என்ற அச்சத்தை மூடி மறைப்பதாக சமூக மாண்புகள் இருக்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

அதே சமயத்தில் ஆண்களின் கன்னித்தன்மையை உறுதி செய்வதற்கு எந்த வழிமுறையும் இல்லை. சமூக மாண்புகளின்படி அவர்கள் நடந்து கொள்கிறார்களா என்ற அழுத்தம் அவர்கள் மீது இல்லை.

திருமணத்துக்கு முன்போ அல்லது அதற்குப் பிறகோ தங்களுடைய சீலை உடைத்துக் கொள்ளும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது.

அவர்களுக்கு எந்தப் பரிந்துரையோ அல்லது எச்சரிக்கையோ பேராசிரியரிடம் இருந்து வரவில்லை.

ஆனால், தங்களுடைய செக்ஸ் விருப்பத்தை பெண்கள் வெளிப்படுத்தத் தொடங்கினால், குறும்புத்தனங்களை அனுமதித்தால் என்ன நடக்கும்.

அவர்களுடைய உடலை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது பற்றி சமூகம் மிகவும் கவலைப்படுகிறது. மகாராஷ்டிராவில் கஞ்சர்பட் என்ற மலைவாழ் சமூகத்தினர், திருமண இரவில் தம்பதியினர் பயன்படுத்தும் படுக்கை விரிப்பை ஆய்வு செய்து `கன்னித்தன்மை சோதனை' நடத்தும் நிலை உள்ளது.

இப்போது சமூகத்தில் சில ஆண்கள் இந்த சம்பிராதயத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். திருமணத்துக்கு முன்பு உடலுறவு வைத்துக் கொண்டதால் `சுத்தமற்றவராக இல்லை' என்று முத்திரை குத்தும் வகையில் வெளிப்படையாக சோதனை நடத்தும் அழுத்தம் பெண்களுக்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை.

சீலிடப்பட்டது

ஆனால், காதலிக்கும் காலத்திலோ அல்லது திருமணப் பேச்சு நடக்கும்போதோ தங்களுடைய கன்னித்தன்மை பற்றி பெண்கள் பேச வேண்டும் என்று பேராசிரியர் கூறுகிறார். இதனால் அவருடைய கணவர் மற்றும் காதலரால் மதிக்கப்படுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள உடைக்கப்பட்ட சீலை மீண்டும் சீல் செய்ய முடியும் என்று அறிந்து கொள்வது நல்ல விஷயம். பெண் உறுப்பின் வெளிப்புற திசுக்களை தைப்பதற்கு ஹைமெனோபிளாஸ்டி (Hymenoplasty ) சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம்.

பாலியல் தாக்குதலின் போது ஏற்பட்ட பாதிப்பை சரி செய்வதற்கு இது உதவுகிறது. ஆனால் பல மேற்கத்திய நாடுகளில், அழகுசார்ந்த விஷயமாக `கன்னித்தன்மையை' மீண்டும் உருவாக்கிக் கொள்வதற்கு இந்த அறுவை சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகிறது.

ஒரு பெண் உடலுறவு வைத்துக் கொண்டிருந்தால், கன்னித்தன்மையை மீண்டும் உருவாக்க முடியாது. ஆனால் ஹைமெனோபிளாஸ்டி முறையில் பெண் உறுப்பின் வெளிப்புறத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி உடல் உறவு காரணமாக புணர்ச்சி எதுவும் நடக்கவில்லை என்பதைப் போல தோன்றும்படி செய்ய முடியும்.

படத்தின் காப்புரிமை Getty Images

கன்னித்தன்மை குறித்து தேவையில்லாமல் சமூகத்தில் முக்கியத்துவம் காட்டப் படுவதால், பெண்கள் திருமணத்துக்கு முன்பு அவஸ்தையான இந்த அறுவை சிகிச்சை வரை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருமணத்துக்கு முன்பு ஒரு பெண் உடலுறவு வைத்துக் கொண்டால், அதில் ஒரு ஆணுக்கும் பங்கு உண்டு, இரண்டு பேரும் சீல் உடைத்துக் கொள்கிறார்கள், பாட்டிலில் உள்ள குமிழ்கள் உற்சாக மிகுதியில் வெளியேறும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு எதிராக கேள்விகள் கேட்டால், அதே கேள்விகளை ஆண்களுக்கு எதிராகவும் கேட்க வேண்டும் என்பது வாதமாக இருக்கலாம். ஆனால், ஏன் அத்தனை கேள்விகள் கேட்கப் படுகின்றன?

வயதுக்கு வந்த ஆண்கள் மற்றும் பெண்கள் குறித்து நாம் ஏன் இவ்வளவு அச்சப்படுகிறோம்? தங்களுடைய பாட்டில்களில் உள்ள ஜின்கள் பற்றி அவர்களை கையாளட்டும்.

அவமானம் மற்றும் சமூக மதிப்புகள் என்ற சுமை ஏதும் இருக்க வேண்டாமே. தூய்மை என்பது கன்னித்தன்மையில் கிடையாது. ஆனால் பாசம் மற்றும் திருமண உறவில் உண்மையானவராக நடந்து கொள்வதில்தான் இருக்கிறது.

தண்ணீரை தாராளமாக ஓட அனுமதிக்கும் போதுதான் அது அமைதியாகவும், சுத்தமாகவும் இருக்கிறது- பாட்டில் அடைத்து சீல் செய்திருக்கும் போது அல்ல.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்