இஸ்லாம் மதத்தை தழுவினாரா கன்னையா குமார்? உண்மை என்ன? #BBCFactCheck

கன்னையா குமார் படத்தின் காப்புரிமை Getty Images

ஜே.என்.யூ முன்னாள மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் இஸ்லாம் மதத்தை தழுவிவிட்டார் என்று விவரிக்கும் காணொளிகாட்சி சமூக ஊடகத்தில் பரவலாக வலதுசாரிகளால் பகிரப்பட்டு வருகிறது.

அந்த காணொளி காட்சி இவ்வாறாக விவரிக்கப்படிருக்கிறது.

"அம்பலப்பட்டுவிட்டார் கன்னையா குமார். அவர் ஒரு இஸ்லாமியர். ஒரு இந்து பெயரை வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறார். மூடிய அறைக்குள் நடந்த கூட்டத்தில் அவர் சார்ந்த மதம் குறித்த உண்மையை சொல்லிவிட்டார். அவர் உண்மையில் ஒரு முஸ்லிம். இந்த வீடியோவை பரவலாக பகிரவும்"

இது உண்மையா? அந்த காணொளியில் கன்னையா குமார் என்ன பேசுகிறார்?

"நமது வரலாறானது இந்த நிலத்துடன் தொடர்புடைய ஒன்று. நாம் (இஸ்லாமியர்கள்) அனைவரும் அரபுலகத்திலிருந்து வரவில்லை. மக்கள் அந்த மதத்தை (இஸ்லாம்) தழுவிக்கொண்டார்கள். ஏனெனில், அந்த மதம் அமைதியை போதித்தது. இந்த மதத்தில் பாகுபாடு இல்லை. அதனால்தாம் நாம் அதனை தழுவிக் கொண்டோம். மற்ற மதங்களில் சாதி அமைப்பும் மற்றும் பலர் தீண்டாமையும் கடைபிடித்தனர். நாம் இதனை விட்டு செல்ல மாட்டோம். நாம் நம்மை காத்துக் கொள்வோம், இந்த சமூகத்தை காப்போம். இந்த நாட்டையும் காப்போம். அல்லா சக்தி வாய்ந்தவர். அவர் நம்மை காப்பாற்றுவார்"

இந்த காணொளியை பார்ப்பவர்கள், கன்னையா குமார் தாம் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் என்று விவரிக்கிறார் என நினைத்து கொள்வார்கள்.

ஆனால் அது உண்மை அல்ல.

உண்மை என்ன?

உண்மையில் அது முழுமையான காணொளி அல்ல. "கன்னையா குமாருடன் உரையாடுங்கள்" என்ற தலைப்பில் நடந்த நிகழ்வின் ஒரு பகுதிதான் அது. அந்த காணொளியின் இணைப்பை இங்கு பகிர்கிறோம். இது ஆகஸ்ட் 25, 2018 அன்று நடந்த சிறுபான்மையினரின் நலன் குறித்த நிகழ்வு இது.

அவர் மதத்தின் அரசியல் குறித்து பேசினார். மேலும், ஏன் இந்தியா அனைவருக்குமான நாடு, அனைத்து நம்பிக்கைகுமான நாடு என்ற காரணங்களை அடுக்கினார். இந்த பின்னணியில், இந்தியாவின் முதல் கல்வி மந்திரி அபுல் கலான் ஆசாத்தை சுட்டிக்காட்டி பேசினார். 

இப்போது வைரலாக பரப்பப்படும் அந்த காணொளி காட்சியில், கன்னையா அபுல் கலாம் ஆசாத்தை தொடர்புப்படுத்திதான் தனது உரையை விவரித்திருப்பார்.

ஆனால், அது தந்திரமாக வெட்டப்பட்டு, ஆசாத்தின் பெயர் நீக்கப்பட்டு பகிரப்பட்டு இருக்கிறது.

இந்து - முஸ்லிம் ஒற்றுமை

ஆசாத் எப்போதும் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக உழைத்திருக்கிறார். இந்திய பிரிவினையும் எதிர்த்திருக்கிறார். இந்துகளும் முஸ்லிம்களும் பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். அது எதற்காகவும் மாற கூடாதென நம்பினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இஸ்லாமியர்களுக்கென தனி நாடு வேண்டும் என்று ஜின்னா கேட்ட போது, காங்கிரஸ் கட்சியின் தலைவராக அதனை ஆசாத் எதிர்த்தார்.

எடிட் செய்யப்பட்ட அந்த காணொளியானது கடந்த ஆண்டே பல்வேறு தளங்களில் பகிரப்பட்டு இருக்கிரது. இப்போது மீண்டும் அது உயிர்பெற்று இருக்கிறது.

கடுமையான விமர்சனம்

கன்னையா பா.ஜ.கவையும் அதன் தலைவர் மோதியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். பல சமயங்களில் அவர், பிரதமரின் கொள்கைகளை நேரடியாக விமர்சித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்துத்துவ செயல்திட்டத்துடன் பா.ஜ.க செயல்படுகிறது என்றும், சிறுபான்மையினரின் நலனை புறக்கணிக்கிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டுகிறார். ஆனால், பா.ஜ.க இப்வரின் குற்றச்சாட்டுகளை மறுக்கிறது.

2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜே.என்.யூவில் நடந்த பேரணியில், இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார் என்ற குற்றச்சாட்டு கன்னையா குமார் மீது உள்ளது.

சமீபத்தில் அவர் மீது ராஜதுரோக வழக்கையும் டெல்லி போலீஸ் பதிந்தது. இந்த வழக்கின் விசாரணை பிப்ரவரி 6ஆம் தேதி நடக்க இருக்கிறது.

ஆனால், இந்த குற்றச்சாட்டை கன்னையா மறுக்கிறார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்