தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணி: குவிந்த 90,000 விண்ணப்பங்கள்

ஆசிரியர் போராட்டம்

இன்றைய நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகின்றோம்.

தினமலர் - தற்காலிக ஆசிரியர் பணிக்கு 90 ஆயிரம் பேர் விண்ணப்பம்

தற்காலிக ஆசிரியர் பணிக்கான சம்பளம் 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் குவிய தொடங்கியுள்ளன என்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

வேலைநிறுத்தத்தை கைவிட்டு, பணிக்கு திரும்புவதற்கு உயர் நீதிமன்றம் விதித்த கெடு நேற்று வெள்ளிக்கிழமை முடிவடைந்ததால், பணிக்கு வராதோர் மீது நடவடிக்கை பாய தொடங்கியுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால், அரசு பள்ளிகளில் உடனடியாக தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தகுதிக்கான டெட் தேர்வு முடித்த 90 ஆயிரம் பேர் இதற்காக விண்ணப்பித்து வருகின்றனர் என்று இந்த செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - கொடநாடு வழக்கில் சிபிஐ விசாரணை மனு நிராகரிப்பு

படத்தின் காப்புரிமை FACEBOOK

2017ம் ஆண்டு கொடநாடு எஸ்டேட்டில் பாதுகாப்பு பணியாளர் கொலை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வழக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்புடையதாக கூறப்படும் குற்றச்சாட்டில் தனிப்பட்ட விசாரணை மேற்கொள்ள வேண்டுமென டிராபிக் ராமசாமி பொதுநல வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டை பழனிச்சாமி மறுத்துள்ளார்.

ஏற்றுக்கொள்வதற்கு தகுதியான வழக்கு இதுவல்ல என்று கூறி உச்ச நீதிமன்றம் இதனை நிராகரித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

தினமணி - 70வது குடியரசு தினத்தில் கொடி ஏற்றினார் தமிழக ஆளுநர்

படத்தின் காப்புரிமை HTTP://WWW.TNRAJBHAVAN.GOV.IN

இந்தியாவின் 70-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் நடந்த குடியரசு தின விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றியதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

தேசியக் கொடி ஏற்றப்பட்டபோது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

குடியரசு தினத்தையொட்டி நடைபெறும் முப்படை வீரர்கள், காவல்துறை மற்றும் பல்வேறு படை பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்பதாக இந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்