“நான் என்றும் ஏழைகள் பக்கமே நிற்பேன்” – பிரதமர் நரேந்திர மோதி உரை

மோதி

பொதுப்பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு, பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோரை பாதிக்காது என்று மதுரை பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்தார்.

இடஒதுக்கீடு குறித்து தவறான கருத்துகள் பரப்பப்படுவதாகவும், சில அரசியல் கட்சிகள் எதிர்மறையாக பேசி இதனை தவறாக சித்தரிக்க முயல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து அங்கு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோதி உரையாற்றினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

என்ன பேசினார் மோதி?

 • "தமிழ் சகோதரர்களே, சகோதரிகளே உங்கள் எல்லோருக்கும் வணக்கம்" என்று தன் உரையை தமிழல் தொடங்கினார்.
 • தூய்மை இந்தியா திட்டம், மக்கள் திட்டமாக மாறி இருக்கிறது. கிராமப்புறங்களில் சுகாதாரம் என்பது 2014ல் 38 சதவீதத்தில் இருந்து இன்று 98% சதவீதமாக உயர்ந்துள்ளது. 9 கோடி கழிவறைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. அதில் 47 கழிவறைகள் தமிழகத்திற்கு மட்டுமே கட்டிக்கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
 • ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வை எளிதாக்கும் திட்டங்களை ஏற்படுத்தி வருகிறோம். இந்த வளர்ச்சியின் நன்மை அனைத்து தர மக்களையும் சென்றடைய வேண்டும்.
 • கடந்த நான்கரை ஆண்டுகளில் 35,000 கிலோ மீட்டர் தொலைவு புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
 • பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத உள்ள திட்டங்களை நாம் விரைவுபடுத்துவதற்கான முயற்சிளில் ஈடுபட்டு வருகிறோம்.
 • 2100 கோடி ரூபாய் செலவில், ராமேஸ்வரத்தையும் பாம்பனையும், தனுஷ்கோடியோடு இணைப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. புதிய பாம்பன் பாலமும் கட்டப்பட்டு வருகிறது.
படக்குறிப்பு,

கோப்புப்படம்

 • மதுரை - சென்னை இடையே மிக அதிவேக 'தேஜஸ்' ரயில் இயக்கப்படும். மதுரை உள்பட 10 ஸ்மார்ட் சிட்டிகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
 • கப்பல் போக்குவரத்தில் தென் இந்தியாவின் முக்கிய துறைமுகமாக தூத்துக்குடி துறைமுகம் மேம்படுத்தப்படும்.
 • சமூகத்தில் இருக்கும் அனைத்து மக்களுக்கும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழங்க மத்திய அரசு உறுதியளிக்கிறது.
 • தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரின் கோரிக்கைகள் குறித்து அதற்கான ஆணையம் மற்றும் மாநில அரசிடம் பரீசிலிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்.
 • செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள உயர்வு தாழ்வு என்பது இந்த சமுதாயத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
 • நாட்டை சுரண்டுபவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் உள்நாட்டில் இருந்தாலும் வெளிநாட்டில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊழலுக்கு எதிரான நடவடிக்கை, டெல்லி முதல் சென்னை வரை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
 • பயத்தில் யார் என்ன செய்தாலும், நரேந்திர மோதியாகிய நான், என்றும் ஏழைகள் பக்கமே இருப்பேன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :