நிர்மலாதேவி வழக்கில் மிகப் பெரிய அரசியல் பின்னணி உள்ளது - வழக்குரைஞர் பேட்டி

நிர்மலாதேவி படத்தின் காப்புரிமை Facebook

கடந்த வார உலக நிகழ்வுகளை இங்கே 6 படங்கள் மூலம் விவரிக்கிறோம்.

தினத்தந்தி: "என்னை மிரட்டி வாக்குமூலம் பெறப்பட்டது"

"என்னை மிரட்டி வாக்குமூலம் பெறப்பட்டது" என்று பேராசிரியை நிர்மலாதேவி கூறினார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

நேற்று நீதிமன்றத்துக்கு ஆஜராக வந்த நிர்மலாதேவி நிருபர்களிடம் கூறும் போது "எனது ஒப்புதல் வாக்குமூலம் மிரட்டி பெறப்பட்டது. பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி ஜாமீன் கிடைக்கவிடாமல் செய்கின்றனர். மற்ற விவரங்களை எனது வக்கீல் கூறுவார்" என்று கூறிச் சென்றார்.

இதைத்தொடர்ந்து நிர்மலாதேவி தரப்பு வழக்குரைஞர் பசும்பொன் பாண்டியன், "கடந்த 10 மாதங்களாக நிர்மலாதேவி சிறையில் உள்ளார். ஒரு வாரத்திற்கு முன்பு சிறையில் அவரை சந்தித்தேன். இந்த வழக்கு பாலியல் வழக்காக பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கில் பாலியல் மட்டும் அல்ல, மிகப் பெரிய அரசியல் பின்னணி உள்ளது.

சிறைக்கு வரவழைத்து உறவினர்கள், நண்பர்களை பார்ப்பதற்கு அனுமதிக்குமாறு எழுதிக் கொடுத்தும், 10 மாதமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதில் சிறை விதி மீறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல நிர்மலாதேவியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சிறையில் மருத்துவர்கள்கூட முறையாக அவரை பரிசோதிப்பதில்லை. ஜாமீன் தொடர்ந்து மறுக்கப்படுகிறது. இதற்கு பின்னணியில் மிகப் பெரிய அரசியல் சதி உள்ளது." என்கிறது அந்நாளிதழ்.

'அ.தி.மு.க. சார்பில் போட்டியிட 40 தொகுதிகளிலும் விருப்பமனு'

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து 4-ந் தேதி முதல் விருப்பமனு பெறப்படுகிறது. இதற்கான அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ்.

"நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தல் பணியை தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தொகுதி பங்கீடு செய்யவும் குழு அமைத்து இருக்கிறது. மேலும் பிரசார குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவையும் அமைத்துள்ளது.

அடுத்தகட்டமாக, தொண்டர்களிடம் இருந்து விருப்பமனு வாங்கும் பணியையும் அ.தி.மு.க. தொடங்க உள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது." என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.


தினமணி: 'செல்' பேசும் காவலர்களை கண்காணிக்கும் உளவுத்துறை

பாதுகாப்பு, போக்குவரத்தை சீரமைக்கும் பணியின்போது செல்லிடப்பேசியில் பேசும் காவலர்களைக் கண்காணிக்கும் பணியில் உளவுத்துறை ஈடுபட்டுள்ளது. பணியின்போது செல்லிடப்பேசியில் பேசும் காவலர்களை உளவுத்துறைக் காவலர்கள் புகைப்படம், விடியோ எடுத்து வருகின்றனர் என்கிறது தினமணி நாளிதழின் சிறப்பு கட்டுரை ஒன்று.

படத்தின் காப்புரிமை Getty Images

"போக்குவரத்து சீர்படுத்தும் பணி, பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் காவலர்கள், கவனக்குறைவாக இருப்பதாகவும், பணியில் அக்கறை இல்லாமல் இருப்பதாகவும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. மேலும் போராட்ட இடங்களில் நடைபெறும் சம்பவங்களை சில காவலர்கள் செல்லிடப்பேசி கேமரா மூலம் பதிவு செய்து புகைப்படங்களாகவும், விடியோ காட்சிகளாகவும் சமூக ஊடகங்களில் பதிவிடுவதால் பிரச்னை ஏற்படுவதாகவும், காவல்துறையைப் பற்றிய ரகசியத் தகவல்கள் வெளியே கசிவதாகவும் கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் தமிழக சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி தே.க.ராஜேந்திரன், கடந்த நவம்பர் மாதம் 11-ஆம் தேதி இட்ட உத்தரவில், போக்குவரத்தைச் சீரமைக்கும் பணி, பாதுகாப்பு பணி ஆகியவற்றில் ஈடுபடும் காவலர்கள் செல்லிடப்பேசி பயன்படுத்தக் கூடாது, உதவி ஆய்வாளர் மற்றும் அதற்கு மேல்நிலையில் உள்ள அதிகாரிகள் பணியின் அத்தியாவசியத் தேவைக்கு மட்டும் செல்லிடப்பேசியைப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இந்த உத்தரவுக்கு பின்னரும், காவலர்கள் செல்லிடப்பேசி பயன்படுத்துவது தடுக்கப்படவில்லை." என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.


படத்தின் காப்புரிமை தினமணி

இந்து தமிழ்: 'தீர்ப்பை தள்ளிவைத்தது உயர் நீதிமன்றம்'

குட்கா முறைகேடு தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், காவல்துறை டிஜிபிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு தள்ளிவைக்கப் பட்டுள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

"சென்னையில் குட்கா நிறுவனத்தில் 2016-ல் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியபோது, தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ய காவல் துறையினர், உயர் அதிகாரிகள் மற்றும் ஆளும்கட்சியினருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் காட்டும் ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. இந்த ஆவணங்களில் டிஜிபி ராஜேந்திரன் (அப்போதைய சென்னை காவல் ஆணையர்), சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலரது பெயர்களும் இருந்தன.

இது தொடர்பாக வருமானவரித் துறை முதன்மை ஆணையர், அப்போதைய தலைமைச் செயலர் ராம மோகனராவ், அப்போதைய டிஜிபி அசோக்குமார் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி குட்கா முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டிருந்தார்." என்று மதுரையைச் சேர்ந்த கதிரேசன் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதுதொடர்பாக வருமானவரித் துறை முதன்மை ஆணையர், அப்போதைய தலைமைச் செயலர் ராம மோகனராவ், அப்போதைய டிஜிபி அசோக்குமார் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி குட்கா முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க கேட்டிருந்தார்.

இந்நிலையில், குட்கா முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் தாக்கல் செய்த பதில் மனுவில், குட்கா முறை கேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் எந்த ஆவணமும் இல்லை எனத் தெரிவித்தார். இந்த பதில் மனுவை ஏற்று குட்கா முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் சென்னையில் போயஸ் கார்டனில் 2017-ல் வரு மானவரித் துறை சோதனை நடத்திய போது, குட்கா முறைகேட்டில் டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வருமானவரித்துறை முதன்மை ஆணையர் அனுப்பிய கடிதம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் சசிகலா அறையில் சிக்கின.வருமானவரித் துறை சார்பில் கடிதம் அனுப்பியதை மறைத்து நீதிமன்றத்துக்கு தலைமைச் செயலர் தவறான தகவல் அளித்துள்ளார். இதனால் அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இவ்வழக்கு, ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது குட்கா முறை கேடு தொடர்பாக அப்போதைய தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோருக்கு வருமானவரித் துறை கடிதம் அனுப்பியதற்கான சான்றாவணங்களை வருமான வரித் துறை தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் வாதிடும் போது, ''டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்க மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழக அரசு பரிந்துரைத்தபோது, அவருக்கு எதிரான குட்கா முறைகேடு ஆவணங்கள் அரசிடம் இல்லை'' என்றார். முன்னாள் டிஜிபி அசோக்குமார் தரப்பில், ''குட்கா முறைகேடு தொடர்பாக வருமான வரித் துறை அனுப்பிய கடிதம் முறைப்படி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பார்வைக்கு அனுப்பப்பட்டது'' எனத் தெரிவிக் கப்பட்டது.

சசிகலா சார்பில் வழக்கறிஞர் அன்பரசன் வாதிடும்போது, ''குட்கா முறைகேடு தொடர்பான வருமான வரித் துறையின் கடித ஆவணம் எடுக்கப்பட்ட போயஸ் கார்டன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வுக்கு சொந்தமானது. வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியது சசிகலாவுக்கு தெரியாது. அப் போது, அவர் போயஸ் கார்டனில் இல்லை. இதனால் வருமான வரித் துறை கடிதம் தொடர்பாக அவருக்கு தெரியாது'' எனக் கூறப்பட்டது.

மனுதாரர் வழக்கறிஞர் ஏ.கண்ணன் வாதிடும்போது, ''வருமான வரித் துறையின் கடிதம் கிடைத்த பிறகாவது டிஜிபியை பணி நீக்கம் செய்திருக்கலாம்'' என்றார். அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

இதேபோல டிஜிபி ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கி யதை ரத்து செய்யக்கோரி கதிரேசன் மற்றொரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதற்காவே குட்கா முறைகேடு ஆவணங்கள் மறைக் கப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது. இவ்வழக்கின் தீர்ப்பையும் நீதிபதி கே.கே.சசிதரன் அமர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது என்று விவரிக்கிறது அந்த செய்தி.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'சாலைகளாகப் போகும்பிளாஸ்டிக்'

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தமிழ்நாட்டை கலக்கும் பிளாஸ்டிக் சாலைகள்

இம்மாத தொடக்கத்தில் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொதியிடும் பொருள்கள் தடை செய்யப்பட்ட நிலையில், இம்மாத தொடக்கம் முதல் சென்னை மாநகராட்சியில் கைப்பற்றப்பட்ட 50 டன் பிளாஸ்டிக் பொருள்களை, டால்மியா சிமெண்ட் நிறுவனத்துக்கு அனுப்ப உள்ளது மாநகராட்சி நிர்வாகம். இந்த பிளாஸ்டிக்கை அந்நிறுவனம் எரிபொருளாகப் பயன்படுத்தும் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ். அதுபோல , 35 டன் பிளாஸ்டிக்கை சாலைகள் அமைக்க பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் அந்நாளிதழ் செய்தி கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்