மக்களவைத் தேர்தல்: தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்று எப்படி தெரிந்து கொள்வது?

நாடாளுமன்ற தேர்தல் 2019:

பட மூலாதாரம், Getty Images

மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11ஆம் தேதியன்று நடைபெற்று.

ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறும்.

2014ஆம் ஆண்டு ஒன்பது லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்ட நிலையில் 2019ஆம் ஆண்டு தேர்தலுக்கு 10 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாவிட்டால்...

உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இருந்தால், உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. தேர்தல் ஆணையம் அவ்வப்போது வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்கும். என்பதால், உங்கள் பெயர் பட்டியலில் இருந்து தற்செயலாகக்கூட விடுபட்டிருக்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில், தேர்தல் ஆணையம் national voters service portal என்ற வலைதளத்தில் வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறது.

இந்த வலைதளத்தில் வாக்களர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை நீங்களே சரிபார்க்கலாம்.

உங்கள் பெயர் இந்த பட்டியலில் இல்லை என்றால்...

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாவிட்டால், இந்த தளத்தின் படிவம் 6 ஐ நிரப்பவும்.

நீங்கள் இப்போதுதான் வாக்களிக்கும் வயதை அடைந்திருந்தாலும் படிவம் 6 ஐ நிரப்பவும்.

படிவத்துடன் சில ஆவணங்களும் தாக்கல் செய்யவேண்டும். அதற்கு 3 ஆவணங்கள் தேவை.

  • உங்களின் வண்ண புகைப்படம்,
  • உங்கள் வயது சான்றிதழ் (பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் போன்றவை)
  • குடியிருக்கும் வீட்டின் முகவரி. ரேஷன் கார்டு, தொலைபேசி அல்லது மின்சார பில், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் அல்லது ஆதார் அட்டை

படிவத்தை எப்படி சமர்பிப்பது?

படிவம் எண் 6 மற்றும் ஆவணங்களை, உங்கள் பகுதியைச் சேர்ந்த தேர்தல் பதிவு அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதன்பிறகு உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.

பட மூலாதாரம், Getty Images

படிவம் 6ஐ ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். அங்கு ஆன்லைன் வாக்காளர் பதிவு செய்யும் இடத்தில் நீங்கள் கிளிக் செய்யவும்.

முதலில் நீங்கள் உள்ளே செல்வதற்கு, பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உருவாக்க வேண்டும்.

உங்களுடைய பாஸ்போர்ட் அளவிலான வண்ணப் புகைப்படம் மற்றும் ஆவணங்களை பதிவேற்றவும்.

உங்கள் வயது 21க்கு மேல் இருந்து, முதன்முறையாக பதிவுசெய்வதாக இருந்தால், வயது சான்றிதழ் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

ஆன்லைனைத் தவிர வேறு என்ன வழி இருக்கிறது?

பதிவேற்ற முடியவில்லை அல்லது ஆன்லைனில் பதிவேற்ற விரும்பவில்லை என்றால், அந்த படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் உங்கள் பகுதியின் வாக்காளர் பதிவு மையம் அல்லது தேர்தல் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யவும்.

நீங்கள் கொடுக்கும் தகவல்களையும் சான்றுகளையும் சரி பார்பப்தற்காக, வாக்குச் சாவடித் துறை அதிகாரி ஒருவர் உங்கள் வீட்டிற்கு வருவார். அவர் வரும் நேரத்தில் நீங்கள் வீட்டில் இல்லையென்றாலும், உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அல்லது அக்கம் பக்கத்தினரிடம் தகவல்களை சரிபார்ப்பார்கள்.

ஆன்லைனில் படிவத்தை பூர்த்தி செய்த பின்னரும், ஆவணங்களை கொடுப்பதற்காக பதிவாளர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியிருக்கிறது என்று சில நேரங்களில் புகார்கள் வருகின்றன. எனவே, நீங்கள் நேரடியாக சென்று உங்கள் படிவத்தை சமர்ப்பிக்கலாம்.

உங்கள் விண்ணப்பத்திற்கு ஒரு ஐடி கொடுக்கப்படும். அதன்பிறகு ஆன்லைன் மூலம், உங்கள் விண்ணப்பத்தின் நிலைமை என்னவென்று நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்.

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட தகவல், வீட்டு முகவரிக்கோ அல்லது எஸ்எம்எஸ் மூலமாகவோ தகவல் தெரிவிக்கப்படும்.

வாக்காளர் பதிவுக்கான மிக முக்கியமான விஷயம்

நீங்கள் இந்திய குடிமகனாக இருந்து, நீங்கள் 2019 ஜனவரி முதல் தேதியன்று உங்கள் வயது 18 ஆக இருந்தால் உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யலாம்.

பட மூலாதாரம், Getty Images

நீங்கள் வசிக்கும் பகுதியிலேயே உங்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கவும். ஒன்றுக்கு மேற்பட்ட இடத்திற்கு வாக்காளர் பட்டியலுக்காக விண்ணப்பிக்க முடியாது.

உங்கள் வாக்காளர் அட்டை அல்லது வாக்காளர் பட்டியலில் ஏதேனும் தவறு இருந்தால்.

உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது, ஆனால் பெயர் அல்லது முகவரியில் திருத்தம் செய்ய வேண்டியிருந்தால், படிவம் 8ஐ நிரப்பவும்.

வசிப்பிடத்தை மாற்றிவிட்டதால், தற்போது வசிக்கும் இடத்திற்கு வாக்கினை மாற்ற வேண்டும் என்றால், படிவம் 6 ஐ நிரப்பவும்.

வாக்காளர் பட்டியலில் இடம் பெற தேவையில்லாத யாரவது பெயர் உங்கள் தகவலில் இருந்தால், அதை மாற்றுவதற்கு, படிவம் 7 ஐ நிரப்பவும்.

உங்கள் வாக்காளர் அடையாள அட்டை தொலைந்துவிட்டால்...

உங்கள் வாக்காளர் அடையாள அட்டை தொலைந்து விட்டால், முதலில் அது பற்றி காவல்துறையில் புகார் அளித்துவிட்டு, புதிய அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும். தேர்தல் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கும்போது, 25 ரூபாய் விண்ணப்ப கட்டணம் மற்றும் புகாரின் ஒரு நகலையும் கொடுக்கவேண்டும்.

உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்குச்சாவடி நிலை அதிகாரி யார் என்று தெரிந்துகொள்வது எப்படி,..

வலைத்தளத்தின் முகப்புப்பக்கத்தில் இந்த தகவலை நீங்கள் காணலாம்.

வாக்காளர் அடையாள அட்டை கிடைக்க எவ்வளவு காலம் எடுக்கும்?

பொதுவாக, ஒரு மாதத்திற்குள் வாக்காளர் அடையாள அட்டை கிடைத்துவிடும். எனவே, உங்கள் பகுதியிலோ அல்லது நாட்டிலோ தேர்தல் நடைபெறுவதாக இருந்தால், அதற்கு 2 மாதங்களுக்கு முன்னதாக உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்க்கவும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :