'லவ் கமான்டோஸ்' தலைவர் கைது: காதல் ஜோடிகளுக்கு அடைக்கலம் தரும் அமைப்பு மீது பணம் பறிப்பு புகார், மற்றும் பிற செய்திகள்

துஷ்பிரயோக வழக்கில் இந்தியாவின் "லவ் கம்மேன்டோஸ்" தலைவர் கைது படத்தின் காப்புரிமை AFP

தாம் அடைக்கலம் தந்து வைத்திருந்த காதல் திருமண ஜோடிகளை, தவறாக நடத்தியதாகவும், பணம் பறித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு லவ் கமாண்டோஸ் என்று அறியப்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைவர் கைது செய்யப்பட்டார்.

டெல்லி பெண்கள் ஆணையம் அளித்த புகாரின் பேரில், சஞ்சாய் சச்தேவ் கைது செய்யப்பட்டு, அவர் அடைக்கலம் அளித்திருந்த 4 ஜோடிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

தங்களின் சாதி மற்றும் மதத்திற்கு வெளியே திருமணம் செய்து கொண்டு, குடும்பத்தினரின் எதிர்ப்பை சம்பாதித்த ஜோடிகளுக்கு பாதுகாப்பான புகலிடம் அளிப்பதற்கு சச்தேவ் இந்த லவ் கமாண்டோஸ் என்ற குழுவை உருவாக்கினார்.

ஆனால், தங்களின் விருப்பத்திற்கு மாறாக தாங்கள் தங்கவைக்கப்பட்டிருப்பதாக சில ஜோடிகள் குற்றஞ்சாட்டினர்.

பாலிவுட் நடிகர் அமீர் கான் தொகுத்து வழங்கிய "சத்தியமேவ் ஜெயதே" (உண்மை மட்டுமே வெல்லும்) என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சச்தேவ் தேன்றிய பின்னர்தான், 2010ம் ஆண்டு நிறுவப்பட்ட "லவ் கமான்டோஸ்" என்கிற தொண்டு நிறுவனம் பிரபலமடைந்தது.

இந்தியாவில், ஒரே கிரமத்தில் சாதி, மதம் மீறிய காதல், குடும்பங்களாலும், கிராம பஞ்சாயத்துகளாலும் தடுக்கப்படுகின்றன.

இந்த பாரம்பரியத்திற்கு எதிராக திருமணம் செய்துகொள்ளும் ஜோடிகள் பல வேளைகளில் "ஆணவக் கொலைகள்" செய்யப்படும் நிலைமையும் உள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில், இத்தகைய ஜோடிகளுக்கு நாடு முழுவதும் புகலிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவல்துறையால் நடத்தப்படும் பல புகலிடங்கள் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் ஜோடிகளுக்கு பாதுகாப்பான தங்குமிட வசதி வழங்குகின்றன.

பட்ஜெட் 2019: யாருக்கெல்லாம் சலுகை கிடைக்க வாய்ப்பு? எதிர்பார்ப்பு என்ன?

படத்தின் காப்புரிமை Getty Images

1947ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி ஆர்கே சண்முகம் செட்டி சுதந்திர இந்தியாவின் முதலாவது பட்ஜெட்டை சமர்பித்தார்.

அந்த நேரத்தில் பிரிவினைகள் பொருளாதாரத்தை சீர்குலைத்திருந்தன, வறுமை அதிகமாக இருந்தது, உணவு உற்பத்தி சவாலாக இருந்தது, பாதுகாப்பு பெரும் கவலையாக இருந்தது.

ஆர்கே சண்முகம் ஆற்றிய தனது உரையில், "நாட்டில் இன்னும் இருக்கும் பிரிவினை நீண்டகால பாதிப்புக்களை கொண்டுவரும். அதிருப்தியான நிலமைகளை சந்திக்கும் நிலையில் நாம் இருக்கிறோம். சர்ச்சைகளின் சாம்பல் மறையும்போது, மனித இனத்தின் ஐந்தில் ஒரு பகுதியினரின் இலக்கை நிர்ணயிக்கும் நடவடிக்கையின் அறிவையும், விளைவுகளையும் முடிவு செய்பவராக எதிர்கால வரலாற்று ஆசிரியர்கள் இருப்பார்கள்" என்று கூறினார்.

இந்த வார்த்தைகள் 70 ஆண்டுகளுக்கு பின்னரும் மீண்டும் ஒலித்து கொண்டிருக்கின்றன.

இந்த செய்தியை விரிவாக வாசிக்க: பட்ஜெட் 2019: யாருக்கெல்லாம் சலுகை கிடைக்க வாய்ப்பு?

"இந்தியாவில் வேலையின்மை அதிகரித்துள்ளதாக வெளியான அறிக்கை சரிபார்க்கப்படவில்லை" - நிதி ஆயோக்

படத்தின் காப்புரிமை Alamy

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள அறிக்கை இன்னும் சரிபார்க்கப்படவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இது ஒரு வரைவு அறிக்கைதான் என்றும், முழுமையாக இன்னும் சரிபார்க்கப்படவில்லை என்றும் நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜிவ் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தியாவின் வேலையின்மை விகிதம், 1970களில் இருந்து முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக, அரசு வேலைவாய்ப்பு அறிக்கை ஒன்று வெளியாளது. வேலைவாய்ப்பில்லா திண்டாட்டம் 6.1 சதவீதமாக இருப்பதாக இது காட்டுகிறது. தேசிய புள்ளியியல் கமிஷனாலும் இந்த அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த செய்தியை விரிவாக வாசிக்க: "இந்தியாவில் வேலையின்மை அதிகரித்துள்ளதாக வெளியான அறிக்கை சரிபார்க்கப்படவில்லை"

'போராட்டமே வாழ்க்கை': பத்ம விருதைப் பெற்ற முதல் திருநங்கை நர்த்தகி நடராஜ்

நடனக் கலைஞரான நர்த்தகி நட்ராஜுக்கு பத்ம ஸ்ரீ விருதை வழங்கியுள்ளது மத்திய அரசு. இந்தியாவில் பத்ம விருதைப் பெற்ற முதல் திருநங்கை இவராவார்.

கடும் போராட்டங்களுக்கு மத்தியில் இந்த உயரத்தை அவர் அடைந்தது எப்படி?

சென்னை மயிலாப்பூரில் இருக்கும் நர்த்தகி நடராஜின் இல்லம் பரபரப்பாக இருக்கிறது.

ஏகப்பட்ட ஊடகத்தினர் அவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஊடகத்திடமும் பொறுமையாகப் பேசி, பேட்டியளித்து வழியனுப்புகிறார் நர்த்தகி.

ஒரு மிகக் கடினமான பயணத்திற்குப் பிறகு அவர் வந்தடைந்திருக்கும் இடம் இது. யாரொருவராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாத கடினமான பயணம்.

இந்த செய்தியை விரிவாக வாசிக்க: ‘போராட்டமே வாழ்க்கை’: பத்ம ஸ்ரீ நர்த்தகி நடராஜ்

அமெரிக்காவா? அண்டார்டிகாவா? - பனியால் போர்த்தப்பட்ட நாடு (புகைப்படத் தொகுப்பு)

படத்தின் காப்புரிமை EPA

அமெரிக்காவின் மேற்கு திசையில் தட்ப வெப்பநிலை -40 டிகிரி செல்சியஸ் வரை செல்லலாம் என்று அமெரிக்க தேசிய வானிலை நிலையம் அறிவித்துள்ளது.

துருவப்பகுதியான அண்டார்டிக்காவின் பகுதிகளை விட அதிக குளிர்ச்சியாக சிகாகோ இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை விரிவாக வாசிக்க: பனி போர்த்திய அமெரிக்காவின் உறையவைக்கும் புகைப்படங்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :