இந்திய விண்வெளித்துறை சாதனை: ''ககன்யான்' திட்டத்தில் விண்வெளி செல்லும் 10 வீரர்கள்

ககன்யான் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப் படம்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: ''ககன்யான்' திட்டத்தில் விண்வெளிக்கு செல்ல 10 வீரர்கள் தேர்வு'

'ககன்யான்' திட்டம் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவதற்காக விமானப்படையை சேர்ந்த 10 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார் என்கிறது தினத்தந்தி நாளிதழ்.

"அமெரிக்கா, ரஷ்யா , சீனா ஆகிய நாடுகள் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவும் சேர்ந்துகொள்ள இருக்கிறது. 2021-ம் ஆண்டு 'ககன்யான்' விண்கலம் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளோம்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இஸ்ரோ தலைவர் கே.சிவன்

'ககன்யான்' திட்டத்துக்காக விமானப்படையில் பணியாற்றும் 10 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கும் பொறுப்பு இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. குழுவினர் தேர்வு மற்றும் பயிற்சிக்கான அனைத்து விதிமுறைகளையும், தேவைகளையும் நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம்.

பயிற்சியின் முதல் இரண்டு கட்டங்கள் பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவ நிறுவனம் (ஏரோஸ்பேஸ் மெடிக்கல் இன்ஸ்டிடியூட்) மற்றும் விமானப்படை நிறுவனத்தில் (இந்திய ஏர்போர்ஸ் இன்ஸ்டிட்யூட்) நடக்கும். அதன் பிறகு இறுதி கட்டமாக வெளிநாடுகளில் பயிற்சி அளிக்கப்படும்.

அதில் இறுதியாக 3 பேர் தேர்வு செய்யப்பட்டு விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள். ரஷியா, பிரான்ஸ் போன்ற 23 நாடுகளிலும் இவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இஸ்ரோ விண்வெளி வீரர்கள் யாரும் இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்படப்போவதில்லை. விமானப்படையில் உள்ள வீரர்களே விண்வெளிக்கு செல்ல உள்ளனர்." என்று அவர் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

படத்தின் காப்புரிமை இந்து தமிழ்

தினமணி: பாம்பனில் ரூ.200 கோடியில் புதிய ரயில் பாலம்

படத்தின் காப்புரிமை Getty Images

பாம்பனில் ரூ. 200 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் அமைக்கப்படும் என இந்திய ரயில்வே கட்டுமான தலைமை மேலாளர் பி.கே.ரெட்டி கூறினார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் - ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் 2.2 கிலோ மீட்டர் தொலைவில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் ரயில் தூக்குப் பாலம் கடந்த 1914 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இந்த ரயில் பாலம் 100 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி வரை பயன்பாட்டில் இருந்த வந்த இந்த பாலம் அதன் பின்னர் கப்பல்கள் சென்று வரும் போது தூக்கும் பாலப் பகுதியில் சேதமடைந்தது. இதனைத்தொடர்ந்து பாலத்தில் ரயில்கள் இயக்கப்படவில்லை.

பின்னர் ரூ. 23 கோடி மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து தற்போது பயணிகள் இல்லாத ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. 2 மாதங்களுக்கு மேலாக பயணிகள் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்நிலையில் பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் தொடர்ந்து பல்வேறு ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்திய ரயில்வே கட்டுமானத் தலைமை மேலாளர் பி.கே.ரெட்டி திங்கள்கிழமை ராமேசுவரம் வந்தார். பின்னர் பாம்பனில் இருந்து நாட்டுப்படகில் சென்று பாம்பன் தூக்கு பாலத்தை ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

பாம்பன் ரயில் தூக்குப் பாலம் 30 மீட்டர் தொலைவில் மூன்று மீட்டர் உயரத்தில் ரூ. 200 கோடி மதிப்பீட்டில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்படும். இந்தப் பணிக்கான ஒப்பந்தம் மார்ச் மாதம் விடப்பட்டு 2 ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்படும். அதன் பின்னர் பழைய பாலம் அகற்றப்படும். மேலும் பாலப் பணிக்கான திட்ட மதிப்பீடு கூடுதலாக தேவைப்பட்டாலும் அதற்கு ஏற்றவாறு அதிகரிக்கப்படும் என்றார்.

ஆனால் தற்போதைய பாலத்தில் ரயில் எப்போது இயக்கப்படும் என்ற கேள்விக்கு பதில் கூற மறுத்துவிட்டார்.

- இவ்வாறாக விவரிக்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

இந்து தமிழ்: 'ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் - சிஏஜி அறிக்கை இன்று தாக்கல்'

படத்தின் காப்புரிமை Getty Images

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) அறிக்கை நாடாளு மன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

"பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப்படைக்காக 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்படுகின்றன. ரூ.59,000 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த விவகாரத்தால் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க் கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை, மாநிலங்களவையில் இதே விவகாரம் நேற்றும் எதிரொலித்தது. இதனால் மாநிலங்களவை நாள் முழு வதும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை யில் கடும் அமளி ஏற்பட்டது.

இந்நிலையில் ரஃபேல் போர் ஒப்பந்தம் தொடர்பான மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போதைய சிஏஜி ராஜீவ் மெஹரிஷி இதற்கு முன்பு நிதித்துறை செயலாளராகப் பணியாற்றினார். அப்போதுதான் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத் தானது. எனவே ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசை காப்பாற்ற சிஏஜி முயற்சி செய்து வருகிறார் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை நிறைவடைகிறது. இதற்கு ஒரு நாளைக்கு முன்பாக சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்படுவது குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. எனவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று கடும் அமளி நிலவக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்." என்கிறது இந்து தமிழ்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: '60 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ. 2000'

கஜா புயல் தாக்கம், கடுமையான வறட்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள 60 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அளிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். சிறப்பு நிதியுதவியாக இந்த ஆண்டில் மட்டும் வழங்கப்படும் எனவும் அவர் அறிவிப்புச் செய்தார் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :