"நீதிமன்ற நேரம் முடிவடையும்வரை ஓரிடத்தில் அமருங்கள்" - முன்னாள் சிபிஐ இயக்குநருக்கு தண்டனை வழங்கிய நீதிபதி

நாகேஸ்வர் ராவ் படத்தின் காப்புரிமை PTI

முஸாபர்நகர் காப்பகத்தில் சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்ட புகார் தொடர்பாக முறையான அனுமதியின்றி சிபிஐ-யின் இணை இயக்குநரான அருண் குமார் ஷர்மாவை அந்த வழக்கில் இருந்து மாற்றக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, அவரை இந்த வழக்கில் இருந்து மாற்றியது தொடர்பாக இந்திய மத்தியப் புலனாய்வு அமைப்பான சிபிஐ அமைப்பின் முன்னாள் இயக்குனரான நாகேஸ்வர் ராவ் மற்றும் சிபிஐயின் சட்ட ஆலோசகர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை உச்ச நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.

இவர்கள் இருவரும் நீதிமன்ற நேரம் முடிவடையும் வரை அங்கே இருக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

''நீதிமன்ற நேரம் முடிவடையும்வரை தயவுசெய்து ஓரிடத்தில் அமரவும். மேலும் ஒரு வாரத்தில் அபராத தொகையை செலுத்த வேண்டும்'' என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, முஸாபர்நகர் காப்பக வன்கொடுமை புகார் தொடர்பாக, இணை இயக்குநர் அருண் குமார் ஷர்மா தலைமையிலான குழு விசாரித்து வந்தது. இதனிடையே, சிபிஐ முன்னாள் இயக்குநராக பொறுப்பேற்ற நாகேஸ்வர ராவ், இவரை மத்திய ரிசர்வ் காவல் படைக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அருண் குமார் ஷர்மா பணியிட மாற்றம் தொடர்பாக நாகேஸ்வர் ராவ் இன்று (செவ்வாய்கிழமை) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் முன்னதாக உத்தரவிட்டிருந்தனர்.

அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் தலைமை நீதிபதியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். நாகேஸ்வர் ராவ் வேண்டுமென்றே செய்யவில்லை, அவரை மன்னிக்கும்படி தொடர்ந்து மன்றாடினார்.

அவர் 32 ஆண்டுகள் சேவை செய்ததாகவும், அவருக்கு தண்டனை வழங்குவது தவறான முன்னுதாரணமாக ஆகும் என்றார்.

"நான் ஏன் தமிழ் கற்றேன்"? - சீனப் பெண் நிறைமதியுடன் பிரத்யேக நேர்காணல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :