சி.ஏ.ஜி அறிக்கை வெளியீடு 'காங்கிரஸ் ஆட்சியைவிட குறைந்த விலையில் பாஜக ஆட்சியில் ரஃபேல் ஒப்பந்தம்'

ரஃபேல் விமானம்

பட மூலாதாரம், Getty Images

ஐக்கிய முற்போக்கு அரசை விட 2.86 சதவீத குறைவாகதான் ரஃபேல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக சி.ஏ. ஜி அறிக்கை கூறிகிறது.

இன்று (புதன்கிழமை) மாநிலங்களவையில் சி.ஏ.ஜி அறிக்கை சமர்பிக்கப்பட்டது. அதில், ரஃபேலுக்காக ஐக்கிய முற்போக்கு ஆட்சி 2007இல் போடப்பட்ட ஒப்பந்தத்தைவிட தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் விலை குறைவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஃபேல் போர் விமானம் வாங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று எதிர்கட்சிகள் போராடி வந்த சூழலில் இவ்வாறாக அறிக்கையை சமர்பித்துள்ளது சி.ஏ.ஜி.

இது தொடர்பாக மத்தியமைச்சர் அருண் ஜேட்லி பகிர்ந்துள்ள ட்விட்டில், "தேசத்திடம் தொடர்ந்து பொய் கூறி வந்தவர்களை எப்படி ஜனநாயகம் தண்டிக்க போகிறது?" என்று வினவி உள்ளார்.

ரஃபேல் குறித்து என். ராம்

பிரான்ஸ் நாட்டின் தஸால் நிறுவனத்திடமிருந்து இந்திய விமானப் படைக்கு ரஃபேல் விமானங்களை வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்தபோது, பிரதமர் அலுவலகமும் மற்றொரு பக்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தியதில் பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் அதிருப்தி அடைந்தது தொடர்பாக தி ஹிந்து நாளிதழ் சமீபத்தில் சில ஆவணங்களை வெளியிட்டது.

தற்போது, இந்த ஒப்பந்தம் தொடர்பாக மேலும் சில தகவல்களையும் தி ஹிந்து வெளியிட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :