ரஃபேல் ஒப்பந்தம் குறித்து சிஏஜி - விமானங்களின் விலை குறைவுக்கு காங்கிரஸ் கூறும் காரணம்

ரஃபேல்

மத்திய அரசின் ரஃபேல் விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்து வரும் நிலையில், இன்று புதன்கிழமை வெளியாகியுள்ள சிஏஜி அறிக்கை ஐக்கிய முற்போக்கு அரசைவிட 2.86 சதவீத குறைவாகதான் ரஃபேல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறுகிறது.

விமானங்களின் விலை டாலர் மதிப்பில் வெளியிட்டிருந்தால் முந்தைய ஒப்பந்தத்தில் இருந்த விலையைவிட இப்போதைய விலை அதிகமாக இருந்திருக்கும் என்கிறது காங்கிரஸ் கட்சி.

ரஃபேல் ஒப்பந்தம் குறித்து மட்டும் விமர்சிக்காமல், தலைமை கணக்குத் தணிக்கையாளர் முன்பு நிதி அமைச்சகத்தில் பணியாற்றியவர் என்பதால் அவர் செய்த செலவுகளை அவரே எப்படி தணிக்கை செய்ய முடியும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக, எதிர்க் கட்சிகள் தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி சிஏஜி அறிக்கை பற்றி அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

''வரலாற்றில் முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கான சிஏஜி அறிக்கை வெறும் எண்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதுவே இந்த அறிக்கை பற்றிய கேள்ளியை எழுப்புகிறது.''

"கூடுதலாக ஏழு சதவீத விலையை அதிகரிக்கச் செய்யும் முந்தைய ஒப்பந்தத்தில் இருந்த வங்கி உத்திரவாதம் புதிய ஒப்பந்தத்தில் இல்லை. எனவே, 2.86 சதவீதம் குறைந்திருப்பதாக கூறியிருப்பது (டஸ்ஸோ நிறுவனம் இந்திய அரசுக்கு வழங்க வேண்டிய) வங்கி உத்தரவாதம் இல்லாமல் போனதால் குறைந்த விலை," என்று காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

"2007ஆம் ஆண்டு முந்தைய சலுகையோடு ஒப்பிடுகையில், டஸ்ஸோ நிறுவனத்தைவிட தொகை குறைவாக உள்ளதை கணக்கு தணிக்கை தெரிய வந்துள்ளது," என்று கூறியதன் மூலம் வங்கி உத்தரவாதத்தை சிஏஜி அறிக்கை கண்டுகொள்ளாததை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால், முக்கியமாக அதனை குறிப்பதற்கு தோல்வியடைந்துவிட்டது," என்கிறது இன்னொரு ட்வீட்.

''சிஏஜி அறிக்கையில் டாலர் மதிப்பில் தொகை தெரிவிக்கப்படவில்லை. டாலர் மதிப்பில் தற்போதைய விலையைக் கூறினால், முந்தைய விலையைவிட இது அதிகமாக இருக்கும் என்பதே இதற்கு காரணம்.''

இந்த அறிக்கையை சவ்கிதர் (காவல் பணியாளர்) ஆடிட்டர் பொது அறிக்கையாக உள்ளதாக, எள்ளலாக காங்கிரஸ் பதிவிட்டுள்ளது.

சிஏஜி அறிக்கையில் டாலர் தொகை வழங்கப்படாமல் இருப்பதை குறிப்புணர்த்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸ்சிட்) கருத்து வெளியிட்டுள்ளது.

"இது 36 விமானங்கள் குறைவான விலை என்று காட்டவா? மற்றும் இந்திய சிறப்பு மேம்பாட்டு அம்சங்களை மிக பெரிய தொகையாக காட்டி விமானத்தின் உண்மையான விலை ஒப்பிடாமல் இருக்கவா," என்கிறது அக்கட்சியின் ட்வீட்.

"ரஃபேல் ஒப்பந்தத்தின் விலையிலுள்ள 10 குற்றச்சாட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ரஃபேல் விலை மட்டும் வழங்கப்படவில்லை. அரசும், சிஏஜி தலைவரும் எதை மறைக்கின்றனர்?"

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்ஸ்சிட்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, "இது பற்றிய சிஏஜியின் முழு அறிக்கையும் ஐயம் அளிக்கிறது. இந்த ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தானபோது, நிதி அமைச்சகத்தில் சிஏஜி-யே இருந்தார். அவர் ஒரு பகுதியான இருந்ததை அவரே கணக்கு தணிக்கை செய்ய முடியாது," என்கிறார்.

ரஃபேல் விலை குறைந்திருப்பதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு சதவிகிதத்தை தெரிவித்துள்ளதால், யார் சொல்வதை நம்புவது என ப்ரிதேஷ் ஷா என்பவர், சிஏஜியின் அறிக்கை பற்றி ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.

"யாரை நம்புவது.. 9%...., 20%....., 40%....., 2.86%," என்ற இந்த பதிவு குறிப்பிடுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :