புதுச்சேரி: வாசலில் அமர்ந்திருந்த முதல்வர்; கண்டுகொள்ளாமல் காரில் சென்ற ஆளுநர்

கிரண் பேடி படத்தின் காப்புரிமை KIRAN BEDI

புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியின் அலுவல்பூர்வ இல்லமான ராஜ் நிவாஸூக்கு முன்னால் நடத்தி வரும் தர்ணா போராட்டத்தை புதுச்சேரி அமைச்சரவை இரண்டாவது நாளாக தொடர்கிறது.

ஆனால், சென்னையில் நடைபெறும் மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக வெளியே வந்த கிரண் பேடி, முதல்வர் வி. நாராயணசாமியிடம் பேசாமல் காரில் சென்றுவிட்டார்.

கடந்த ஆண்டு ஆளுநருக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேராடியதைப் போல, ராஜ் நிவாஸூக்கு முன்னாலுள்ள சாலையில் முழு அமைச்சரவையும், அமைச்சர்களும் படுத்து இந்த தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஆளுநர் கிரண் பேடி சென்னைக்கு புறப்பட்ட பின்னர், கோபமடைந்த கட்சி தொண்டர்கள் ராஜ் நிவாஸூக்குள் நுழைய முற்பட்னர். ஆனால், அமைதியை குலைக்கின்ற எந்தவொரு முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என்று முதல்வர் கூறிவிட்டார்.

"புதுச்சேரி மக்களை பாதிக்கின்ற ஆளுநரின் சட்டபூர்வமற்ற, ஜனநாயக முறையற்ற செயல்பாடுகளுக்கு எதிரானதாக, காந்திய வழியில் நமது தர்ணா அமைய வேண்டும்," எனறு நாராயணசாமி தெரிவித்தார்.

பிபிசியிடம் பேசிய நாராயணயசாமி, "மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் அதிகாரங்களுக்கு மேலாக ஆளுநர் செயல்படுகிறார். அமைச்சகத்தின் ஆலோசனையின் பேரில் ஆளுநர் செயல்பட வேண்டும் என்று சட்டம் தெரிவிக்கிறது. ஆனால், அவரது ஆலோசனையின்படி அமைச்சரவை செயல்பட வேண்டுமென ஆளுநர் விரும்புகிறார். இதுதான் பிரச்சனையின் மையம்" என்று நாராயணசாமி தெரிவித்தார்.

"புதுச்சேரி மக்களுக்கு நாங்கள் அமல்படுத்த விரும்புகின்ற இலவச அரிசி திட்டம், பொதுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை தொழிலாளர்களின் ஊதியங்கள், கல்வி நிறுவனங்களின் உதவித்தொகை போன்ற நலவாழ்வு திட்டங்களை ஆளுநர் தடுத்து வருகிறார்," என்று அவர் கூறினார்.

"ஆளும் அரசுக்கு மோசமான பெயர் ஏற்பட வேண்டுமென, அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் ஆளுநர் தடுத்து வருகிறார். நாங்கள் அவரிடம் பேசி பார்த்தோம். புகார் அனுப்பி பார்த்தோம். உள்துறை அமைச்சரிடத்திலும் புகார் அளித்தும் பார்த்தோம். சர்வாதிகார முறையில் ஆளுநர் செயல்படுவதை மக்கள் அறிவிக்க வேண்டுமென தர்ணா போராட்டத்தை நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்," என்கிறார் நாராயணசாமி.

மேலும் தொடர்ந்த அவர், "டெல்லி அரசைவிட அதிக அதிகாரங்களை புதுச்சேரி அரசு கொண்டுள்ளது. (மக்களால் தேர்ந்துகொள்ளப்பட்ட சட்டப்பேரவையோடு செயல்படுபவையாக டெல்லியும், புதுச்சேரியும் யூனியன் பிரதேசங்களாக விளங்குகின்றன.) 10 கோடிக்கு மேலான செலவு செய்யப்படுவதாக இருந்தால் ஆளுநருக்கு அந்த திட்டத்தின் மீதான நிதி அதிகாரம் உள்ளது.

இலவச அரிசி திட்டத்திற்கு 20 கோடிக்கு மேலான செலவு ஆகும் என்பதால், ஆளுநரின் அதிகாரத்திற்கு கீழ் வந்துள்ளது.

பிபிசியோடு பின்னர் பேசுவதாக செய்தி அனுப்பியுள்ள கிரண் பேடி இது பற்றி எந்த கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும், ஆளுநர் கிரண் பேடியும் இந்த பிரச்சனைகள் தொடர்பாக கடித பரிமாற்றங்களை மேற்கொண்டது புதுச்சேரி போராட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

பிப்ரவரி 21ம் தேதி இந்த பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்க தன்னை சந்திக்குமாறு கிரண் பேடி கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், இங்கு வந்து அவரால் ஏன் பேச்சுவார்த்தை நடத்தமுடியவில்லை என்று நாராயணசாமியால் கேள்வி எழுப்பப்படுகிறது.

எல்ல 39 பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டுமென நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இந்த தர்ணாவுக்கு உடனடி காரணம் என்ன?

இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் (ஹெல்மட்) அணிய வேண்டும் என்ற தனது ஆணை அமலாக்கம் செய்யப்படுவதை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆளுநர் மேற்பார்வை செய்தார்.

கடந்த மூன்று நாட்களில் தலைக்கவசம் இல்லாமல் சென்ற வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்காகும்.

இந்த பிரச்சனை மெதுவாக அமலாக்கப்பட வேண்டும் என்று முதல்வர் கூறுகிறார். ஆனால் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஆளுநர் கிரன் பேடி இது உனடியாக செயல்படுத்தப்பட வேண்டும்.

இல்லாவிட்டால், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் இருந்து ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இது நீதிமன்ற அவமதிப்பாக இருக்கும் என்று ஆளுநர் தெரிவிக்கிறார்,

ஓட்டுநர்கள் ஏன் தலைகவசம் அணிவதில்லை என கேட்டு ட்விட்டரில் காணொளி ஒன்றையும் கிரன்பேடி வெளியிட்டுள்ளார்,

"இது ஆளும் கட்சி நடத்தும் பந்த் அல்ல" - நாராயணசாமி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
”இது ஆளும் கட்சி நடத்தும் பந்த் அல்ல” - நாராயணசாமி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :