காஷ்மீர் தாக்குதல்: 'பாகிஸ்தானை முற்றிலும் தனிமைப்படுத்துவோம்' - இந்தியா உறுதி

பாகிஸ்தானை முற்றிலும் தனிமைப்படுத்துவோம்' படத்தின் காப்புரிமை EPA

ஜம்மு-காஷ்மீரில் 40க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் காவல் படையினர் உயிரிழக்க காரணமாக அமைந்த தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தொடர்பு இருப்பதாக மறுக்கமுடியாத ஆதாரம் தங்களுக்கு கிடைத்திருப்பதாக இந்தியா கூறியுள்ளது.

இதனால் அண்டை நாடான பாகிஸ்தானை முழுமையாக தனிமைப்படுத்த தேவையான ராஜீய ரீதியான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும் என மூத்த அமைச்சர் ஒருவர் டெல்லியில் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமையன்று ராணுவ வாகனமொன்றில் இந்த துருப்புகள் சென்றபோது வெடிபொருள் நிரப்பிய கார் மூலம் வெடிக்க செய்து, இந்த தாக்குதலை தாங்கள் நடத்தியதாக பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-ஈ-மொஹமத் அமைப்பு தெரிவித்தது.

படத்தின் காப்புரிமை EPA

கடந்த மூன்று தசாப்தங்களில் சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் நடந்த மோசமான தாக்குதல் இதுவாகும்.

இந்த தாக்குதல் தொடர்பாக தாங்கள் மிகுந்த கவலை அடைந்துப்பதாகவும், இதில் தங்களுக்கு எந்த தொடர்புமில்லை என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரை அழைத்து தீவிரவாத குழுவான ஜெய்ஷ்-ஈ-மொஹமத் மீது அந்நாடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழுத்தம் தந்து நோட்டீஸ் ஒன்றை இந்தியா வழங்கியுள்ளது.

இதனிடையே புல்வாமாவில் நடந்த தாக்குதளுக்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் தீவிரவாதிகளுக்கு உதவி செய்தவர்கள் ஆகியோர் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்கள் என்றும் அவர்கள் இது தொடர்பாக மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்று பிரதமர் எச்சரித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பதில் நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரமும் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த பிரதமர் நரேந்திர மோதி, ''இது போன்ற தாக்குதல்களால் இந்தியாவை நிலைகுலைய வைத்துவிடலாம் என்ற மாயையில் பாகிஸ்தான் இருக்கவேண்டாம். பாகிஸ்தானின் கனவு நிறைவேறாது'' என்று கூறியுள்ளார்.

காஷ்மீர் தாயின் துயரம்: ''மகன்கள் இறந்தபோது இரு சிறுநீரகங்கள் அகற்றப்பட்டதுபோல உணர்ந்தேன்''

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
''மகன்கள் இறந்தபோது இரு சிறுநீரகங்கள் அகற்றப்பட்டதைபோல உணர்ந்தேன்''

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :