புல்வாமா தாக்குதல்: பாகிஸ்தான் ராணுவ தலைவரை பிரியங்கா காந்தி சந்தித்தாரா? #BBCFactCheck

பிரியங்கா காந்தி படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய கட்டுப்பாட்டு காஷ்மீரில் அமைந்துள்ள புல்வாமாவில் திங்கட்கிழமை நான்கு இந்திய பாதுகாப்பு வீரர்கள் மரணித்த பின்பு #PakistanAndCongress என்கிற ஹாஷ்டேக் டிவிட்டரில் டிரண்டாகியது.

பாகிஸ்தானிடம் மிகவும் மென்மையாக நடந்து கொள்வதாக பல வலதுசாரி சமூக ஊடக குழுக்கள் காங்கிரஸை குற்றஞ்சாட்டின.

சமூக ஊடகங்களான டிவிட்டர், ஃபேஸ்புக் மற்றும் ஷேர் சேட்டில் #PakistanAndCongress என்ற ஹாஷ்டாகுடன் கருத்துகள் பகிரப்பட்டன.

பழைய புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இதற்காக பயன்படுத்தப்பட்டன. ஆனால், எங்களது விசாராணையில் இந்த ஹாஷ்டேகில் பகிரப்பட்ட பல கருத்துகள் பொய் என தெரியவந்துள்ளது.

பிரியங்கா காந்தி சந்திப்பு

பாகிஸ்தான் ராணுவ தலைவர் ஜாவேத் பஜ்வாவை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி துபாயில் பிப்ரவரி 7ஆம் தேதி சந்தித்ததாக கூறி வலதுசாரி குழுக்கள் #PakistanAndCongress என்ற ஹாஷ்டாகுடன் பகிர்ந்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த செய்தி ஆயிரகணக்கான முறை டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டது.

ஆனால், எங்கள் விசாரணையில் இது பொய்யென தெரியவந்துள்ளது.

அதிகாரபூர்வமாக காங்கிரஸில் பொறுப்பேற்றவுடன் பிப்ரவரி 7ஆம் தேதி காங்கிரஸ் தலைமையகத்திற்கு பிரியங்கா காந்தி வந்தார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ராகுல் காந்தியின் டிவீட்

ராகுல் காந்தியின் பழைய டிவீட், அதாவது 24 அக்டோபர் 2018 அன்று பகிரப்பட்ட டிவீட் மீண்டும் சமூக ஊடகத்தில் பரவலாக இப்போது பகிரப்படுகிறது.

அந்த டிவீட்டில் பிரதமர் நரேந்திர மோதியை குறி வைத்து குற்றஞ்சாட்டி இருந்தார். அதில், "பிரதமர் சிபிஐ இயக்குநரை நீக்கிவிட்டார். அதனால் விசாரணை நின்றுவிடும்" என அதில் குறிப்பிட்டு இருந்தார்.

வைரலான இந்த டிவீட் 12 ஆயிரம் பேரால் மீண்டும் பகிரப்பட்டது.

இதை பகிர்ந்தவர்கள், இதனுடன் "பாகிஸ்தான் பாதுகப்பு படை"யும் ராகுலின் டிவீட்டை பகிர்ந்துள்ளர். மோதியை பதவியிலிருந்து நீக்க அவர்கள் காங்கிரஸுக்கு உதவுகிறார்கள் என குறிப்பிட்டு இருந்தனர்.

ஆனால், இதுவும் பொய், பாகிஸ்தான் பாதுகாப்பு படைக்கு 'Pakistan Defence' என அதிகாரபூர்வ டிவிட்டர் கணக்கு இல்லவே இல்லை.

பாகிஸ்தான் தனது நாட்டு ராணுவம் தொடர்பான விஷயங்களை பகிர "Inter Service Public Relations" (ISPR) என்ர டிவிட்டர் கணக்கையே பயன்படுத்துகிறது.

சொன்னாரா சிபில்

தென் இந்தியாவில் உள்ள வலதுசாரி குழுக்கள் புல்வாமா தாக்குதலுக்கு தீவிரமான தேசியவாதம்தான் காரணமென்று கபில் சிபில் கூறியதாக தகவல்களை பகிர்ந்தன.

இவை பலரால், பார்க்கவும் பகிரவும்பட்டது.

இது தொடர்பாக விளக்கம் பெற பிபிசி, காங்கிரஸ் தலைவர் கபில் சிபிலை தொடர்பு கொண்டது. அவ்வாறான தகவல்களை சமூக ஊடகத்திலோ அல்லது வேறு எந்த ஊடகத்திலோ கூறவில்லை என தெரிவித்தார்.

காஷ்மீர் லாரி ஓட்டுநர்

புல்வாமா தாக்குதலுக்கு பின்பு சமூக ஊடகத்தில் பல பேர்  காஷ்மீரி மக்களை குறிவைத்து தாக்கினர்.

படத்தின் காப்புரிமை Social Media

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான காஷ்மீர் மக்களை காங்கிரஸ் ஆதரிக்கிறது என அவர்கள் கூறி இருந்தனர்.

காஷ்மீரி மக்கள் மத்தியில் அச்சம் உண்டாக்கும் விதமாகவும் அல்லது அவர்களை தூண்டும் விதமாகவும் பலர் பழைய புகைப்படங்களை பகிர்ந்தனர்.

புல்வாமா தாக்குதலால் கோபம் கொண்ட மக்கள் காஷ்மீர் லாரி ஓட்டுநரை தாக்கியதாக சமூக ஊடகத்தில் பரவிய காணொளி ஒன்று விவரித்தது.

ஜம்முவில் உள்ள உதம்பூரில் எடுக்கப்பட்ட காணொளி இது என இதனை பகிர்ந்தவர்கள் குறிப்பிட்டனர்.

காஷ்மீர் போலீஸ் இதனை மறுத்தது. இது 2018ஆம் எடுக்கப்பட்ட காணொளியென விளக்கமளித்தது.

ஜம்மு காஷ்மீர் போலீஸ் பிப்ரவரி 16ஆம் தேதி பகிர்ந்த ஒரு ட்வீட்டில், "காஷ்மீரி ஓட்டுநர் தொடர்பாக பகிரப்படும் காணொளி போலியானது. இவ்வாறான வதந்திகளை நம்பாதீர்கள்" என அதில் குறிப்பிட்டு இருந்தனர்.

காஷ்மீரி தொழிலாளர்கள் தாக்கப்பட்டார்களா?

இது போல திருமணத்தில் வன்முறை ஏற்பட்டதாக சமூக ஊடகத்தில் ஒரு காணொளி பரவியது. காஷ்மீரி தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக அந்த காணொளியில் இருந்தது.

சண்டிகரில் எடுக்கப்பட்ட காணொளியென கூறப்பட்டது.

ஆனால், அது டெல்லி ஜானக்பூரியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் எடுக்கப்பட்ட காணொளி அது. உணவு பரிமாறுவதில் ஏற்பட்ட பிரச்சனையில் விருந்தினர்கள் உணவக ஊழியர்களை தக்கும் காணொளி அது.

காஷ்மீரிகள் பாகுபாடுடன் நடத்தப்படுவதாக சமூக ஊடகங்களில் பல தகவல்கள் உலவுகின்றன.

ஆனால், இந்த திருமண கணொளிக்கும் புல்வாமா தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

பா.ஜ.க தலைவரின் கூற்று

சமூக ஊடகத்தில் "#PakistanAndCongress" ஹாஷ்டாகிற்கு பதில் கூறும் விதமாக, சமூக ஊடகத்தில் காங்கிரசுக்கு ஆதவான குழுக்கள் பா.ஜ.கவை தாக்கின. இதற்கு பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் நெபால் சிங் கூறிய பழைய விஷயத்தை புல்வாமா தாக்குதலுடன் தொடர்புபடுத்தி பகிர்ந்தனர்.

படத்தின் காப்புரிமை Twitter

ஒராண்டு பழமையான அந்த டிவீட்டை மும்பை காங்கிரஸும் பகிர்ந்திருந்தது.

அந்த கூற்று உண்மைதான். ஆனால், புல்வாமா சம்பவத்துடன் அதற்கு எந்தத் தொடர்பும் இல்லை.

2017ஆம் ஆண்டு சி.ஆர்.பி.எஃப் பயிற்சி மையத்தில் நடந்த தாக்குதலில் படையினர் நான்கு பேர் மரணித்தனர். அப்போது நெபால் சிங், "ராணுவத்தில், படையினர் இறக்க செய்வார்கள். போரில் ராணூவத்தினர் இறக்காத ஒரு நாடும் இல்லை" என்று தெரிவித்து இருந்தார்.

நெபால் சிங் அதற்காக மன்னிப்பும் கேட்டிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :